வியாழன், 11 அக்டோபர், 2018

ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலத்தில் பல் வேறு பகுதிகளில் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள்விழா

தெலங்கானா, ஆந்திரப்பிரதேச மாநிலங்களில் பல்கலை. மாணவர்கள், நாத்திக மக்கள் சங்கம் இணைந்து நடத்திய




அய்தராபாத், அக்.10ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலத்தில் பல் வேறு பகுதிகளில் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள்விழா கொண்டாடப் பட்டது.

கரீம் நகர்: கரீம்நகர் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் டாக்டர் திருப் பதியா தலைமையில் நாத்திக மக்கள் சங்கத்தின் தலைவர் ஜம்மிக்குண்டா ராஜூ, டி.பிட்சுபதி, நாராயணா உள்ளிட்டவர்கள் உறுதியேற்பு விழாவாக நடை பெற்ற தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழவில் கலந்துகொண்டனர்.

வாரங்கல்: வாரங்கல் மாவட்டத்தில் கானாவில் உள்ள பழங்குடி ஆசிரம வளாகத்தில் விழா நடைபெற்றது-.

உஸ்மேனியா பல்கலை: அய்தரா பாத்தில் உள்ள உஸ் மேனியா பல்கலைக் கழக வளாகத்தில் நாத்திக மக்கள் சங்கம், அம்பேத்கர் மாணவர் சங்கம் இணைந்து விழா நடத்தப்பட்டது.

வேமண்ணா பல்கலை: ஆந்திரப் பிரதேசம் ராயலசீமா, கடப்பா, பில்லாலா யோகி வேமண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நாத்திக மக்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பெரியார் பிறந்த நாள்விழாவை கங்கா சுரேஷ், பாரத் உள் ளிட்டவர்கள் ஒருங்கிணைத்தார்கள். கீதி சாரய்யா, பென் மெட்சா சுப்பாராஜூ, நாகார்ஜூனா காரு, பல்லவலோ ராமண்ணா, சாய்குமார் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

நாத்திக மக்கள் சங்கம்: தென்னிந் தியாவில் நாத்திகத்தின் மறுபெயராக தந்தை பெரியார் திகழ்ந்தார். அரசியல் கட்சிகள் நாத்திக வழியில் பயணிப்பதற் கான அடித்தளத்தை உருவாக்கிய தந்தை பெரியார் தென்கிழக்காசியாவின் சாக்ரட் டிஸ் என்று போற்றப்படுகிறார். தந்தை பெரியார் இந்து மதத்திலிருந்த வாறே ஜாதி ஒழிப்புக்கான கலகக்காரராக தீவிர மாக செயல்பட்டவர். மனித உரிமைகள், பெண்ணுரிமைகளுக்காக போராடியவர் தந்தை பெரியார். நாட்டின் விடுதலைக்கு முன்ன தாகவே தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுவிடும் என்று முன் எச்சரிக்கையை வெளியிட்டவர் தந்தை பெரியார். கொண்ட கொள்கைக்காக பல ஆண்டுகள் சிறைவாசம் செய்தவர் தந்தை பெரியார். அவருடைய இறுதிக்காலம் வரை 94 வயதிலும் தம்முடைய போராட்டத்திலிருந்து விலகாமல் தொடர்ச்சியாக போராடி வந்தவர் தந்தை பெரியார். இந்து மதத்தை இந்த நாட்டி லிருந்து ஒழிக்காமல், ஜாதியை ஒழிக்க முடியாது என்றார். அவருடைய வாழ் நாளில் பெரும்பகுதியை சுற்றுப் பயணங்கள், பேச்சுகளிலேயே செல விட்டார்.



கிரிக் கெட், சினிமா, கேளிக்கைகள், திறன்பேசிகள்,  பிக்பாஸ் நிகழ்ச்சி, வார இறுதிநாள் கொண்டாட்டங்களில் பொழுதுகளை போக்கி, பணம், நேரம் ஆற்றலை விரய மாக்குகின்ற இளைய தலைமுறையினர் தந்தைபெரியார் எனும் போராளியை அடையாளம் கண்டு கொள்ள வேண்டாமா? நாட் டில் சமூக சீர்குலைவுகளால் ஏற்படுகின்ற விளைவுகள் என்ன? சகோரத்துவ உணர்வின்றி குடிமக்கள் இருக்கலாமா? உள்ளிட்ட கருத்துகளை தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி களில் நாத்திக மக்கள் சங்கத்தின் பொறுப் பாளர்கள் எடுத்துரைத்தார்கள்.

- விடுதலை நாளேடு, 10.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக