வியாழன், 11 அக்டோபர், 2018

கருநாடக மாநிலத்தில் அய்ம்பெரும் விழா மிகுந்த கோலாகலமாகக் கொண்டாட்டம்!



பெங்களூரு, அக்.5 தந்தை பெரியார் அவர்களின் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, கழகத்தின் மூத்தவர்கள் (80 அகவையைக் கடந்தவர்கள்) பெரியார் செம்மல் விருது வழங்கும் விழா, மாநிலத் துணைத் தலைவர் பு.ர.கஜபதி & அய்யலட்சுமி இணையேற்பு 60ஆம் ஆண்டு மகிழ்வாக திருக்குறள் கன்னட மொழியில் வெளியீட்டு விழா என அம்பெரும் விழா சிறப்பாக விடுதலை பெரியார் மலர் அறிமுக விழா கருநாடக மாநிலத் திராவிடர் கழகத்தின் சார்பில் மிகச் சிறப்பாக 23.9.2018 அன்று காலை 10 மணிக்கு பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் பேரங்கில் நடைபெற்றது.

துணை செயலாளர் வே.நடவரசன் கடவுள் மறுப்புடன் நிகழ்ச்சி எழுச்சியுடன் தொடங்கியது. ஆயில் மில் பகுதி தலைவர் கி.சு.தென்னவன் மொழி வழ்த்து இசைத்தார். மாநில செயலாளர் இரா.முல்லைக்கோ அனைவரையும் வரவேற்று நிகழ்வினை முனைப்புரை நிகழ்த்தினார். பொதுக்குழு உறுப்பினர் இரா.இராசாராம் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.

பெரியார் படத்திறப்பு


தந்தை பெரியார் படத்தினை மூத்த வழக்குரைஞர் சிறீதரமூர்த்தியும், அறிஞர் அண்ணா படத்தினை மாநில திமுகழக பொருளாளர் கே.தட்சிணாமூர்த்தி திறந்து வைத்தனர்.

நிகழ்வுக்கு முன்னிலை வகித்த தமிழ்ச்சங்க மூத்த உறுப்பினர் முருகு சுப்பிரமணியன், வழக்குரைஞர் பிரிவு தலைவர் சே.குணவேந்தன், வழக்குரைஞர் பிரிவு செய லாளர் ஜெ.அருண், வழக்குரைஞர் பிரிவு அமைப்பாளர் பெஞ்சமின் பிராங்கிளின் உரை நிகழ்த்தினர்.

மாநில துணைத் தலைவர் பு.ர.கஜபதி & அய்யலட்சுமி இணையேற்பு 60ஆம் ஆண்டு மகிழ்வாக இணையருக்கு சிறப்பாடை அணிவிக்கப்பட்டது. பெங்களூருத் தமிழ்ச் சங்கம் கஜபதி இணையர் இணைந்து கன்னட மொழியில் திருக்குறளை மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டது.

பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தலைவர் தி.கோ.தாமோ தரன் திருக்குறள் நூலினை வெளியிட கழக நிர்வாகிகள் அனைவரும் பலத்த கரவொலிக்கிடையே பெற்றுக் கொண்டனர்.

பெரியார் செம்மல் விருது


கருநாடக மாநிலத் திராவிடர் கழகத்தின் 80 அகவை யைக் கடந்த மூத்த கீழ்காணும் நிர்வாகிகளுக்கு "பெரியார் செம்மல் விருது"ம் சிறப்பாடைகள், குளிர்தடுப்பு ஆடை கள், பெரியார் அமர்ந்த நிலை உருவச்சிலை, கருப்பு வண்ண எழுதுகோல், விடுதலை பெரியார் மலர், ஆர்.டி. வீரபத்தினால் வழங்கப்பட்ட மூன்று தலைமைக் கழக வெளியீட்டு நூல்கள் வழங்கி அனைத்து மக்களின் கரவொலியோடு, வண்ண மலர் மத்தாப்பு ஒலி, ஒளியும் கழக நிர்வாகிகள் அமுதபாண்டியன், சே.குணவேந்தன், ஜெ.அருண், பெஞ்சமின் பிராங்கிளின், கோ.சண்முகம், இரா.இராசாராம் & தங்கம் அம்மையார், கி.சு.இளங்கோவன், இள.பழனிவேல், தி.செ.கணேசன், கிருபாநிதி, ஒளி வண்ணன், கு.செயக்கிருட்டிணன், கு.ஆனந்தன், மலர் முருகேசன், பெ.பாண்டியன், திருச்சி காட்டூர் கனகராஜ் மற்றும் பலர் பரிசு பொருட்களை வழங்கி மகிழ்ந்தனர்.

80 அகவையைக் கடந்த கழக மூத்த நர்வாகிகள்


மாநிலத் தலைவர் மு.ஜானகிராமன் (83 அகவை), தலைமை பொதுக்குழு உறுப்பினர் சென்னை நீலாங்கரை இரா.தே.வீரபத்திரன் (81 அகவை), மாநில துணைத் தலைவர் வீ.மு.வேலு (98 அகவை), மாநில துணைத் தலைவர் தங்கம் இராமச்சந்திரா (82 அகவை), மாநில துணைத் தலைவர் பு.ர.கஜபதி (83 அகவை), செயற்குழு உறுப்பினர் இரா.சாமிதுரை (83 அகவை), தென் மண்டலத் தலைவர் கவிஞர் வீ.இரத்தினம் (87 அகவை), ஆயில் மில் பகுதி தலைவர் கி.சி.தென்னவன் (80 அகவை), மூத்த பகுத்தறிவாளர் பாவலர் ப.பரமசிவம் (83 அகவை) ஆகிய ஒன்று பெருந்தகைகளுக்கு "பெரியார் செம்மல் விருது" பேழை தலைவர் வீ.வீரமணி அவர்கள் கழகக் கொடியேந்தி நடைபோட தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் சிறப்பாக பல வண்ண ஒளிப்படம் தாங்கிய பேழையாக வழங்கப்பட்டது.

பேரறிஞர் அண்ணா, தன்மானம் ஊட்டிய தனிப்பெரும் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்பினை மதிமுக அமைப்பு செயலாளர் ஆ.வந்தியத்தேவன், தலைமை  கழக எழுச்சி உரை வீச்சாளர் தஞ்சை பெரியார் செல்வன் ஆகியோர் நெடிய நேரம் பல்வேறு அற்புதத் தகவல் கதைகளைக்கூறி நண்பகல் 2 மணி வரை உரை நிகழ்த்தினர். மாநில பொருளாளர் கு.ஜெயக்கிருட்டிணன் நன்றி உரையுடன் நிகழ்வு முடிவுற்றது. அனைவருக்கும் கழக நிர்வாகிகளால் பயனாடை அணிவித்து சிறப் பிக்கப்பட்டது.
-  விடுதலை நாளேடு, 11.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக