சிங்கப்பூர், நவ.2 நவம்பர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் பெரியார் கண்ட வாழ்வியல்-விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விக்ரம் நாயர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றினார். பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் தமிழர் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவின் சிறப்பு அம்சங்களாக சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் திரு.ஜே.எம்.சாலி அவர்களுக்கு "பெரியார் விருது" வழங்கியும். திரு. ச.வரதன், திரு. கா. ஆ.நாகராசன் ஆகியோர்களுக்கு "பெரியார் பெருந்தொண்டர் விருது" வழங்கியும் கவுரவிக்கப்பட்டார்கள்.
பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பில் நடைபெற்ற தமிழ்மொழிப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசளித்து பாராட்டினார்கள். சிங்கப்பூர் அறிஞர்களின் கட்டுரைகள், வரலாற்று தகவல்கள் உள்ளடக்கிய பெரியார் பணி இதழ் வெளியிடப்பட்டது; விழா பற்றி மேலும்
விரிவான செய்தி பின்னர்.
செய்தி: க.பூபாலன், சிங்கப்பூர்
-விடுதலை,2.11.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக