எ
குவைத்தில் தந்தை பெரியார் நூலகம் சார்பில்
பெரியார்- அண்ணா பிறந்த நாள் விழா
பெரியார்- அண்ணா பிறந்த நாள் விழா
குவைத், அக்.12- குவைத்தில் வைத் மன்சால் வா உணவகத்தில் பேராசிரியர் கல்புர்கி நினைவு அரங்கில், கூடல் நகர் மிர்காப்பில், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாள் விழாக்கள் தந்தை பெரியார் நூலகம் சார்பில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
வெற்றியூர் அன்பரசன் கேக் வெட்டி விழாவை தொடங்கி வைக்க, சத்திரமனை அசன் முஹம்மது தலைமை தாங்க, நூலக காப்பாளர் வரவேற்புரையாற்ற, டி.வி.எஸ். நிர்வாகி அலாவுதீன் முன்னிலை வகித்து தந்தை பெரியார், அறிஞர் அண்ணா தொண்டு, பணி குறித்து உரையாற்றினார்.
மிசால் சித்தார்த்தன், டாக்டர் அன்வர்பாஷா, கவிஞர் சாதிக், தஞ்சை பாருக் மகராஜ் (தமுமுக மண்டலத் தலைவர்), பந்தல்குடி சம்சுதின் (தமுமுக மண்டலச் செயலாளர்), ‘இன்பதமிழ்’ மாத இதழ் ஆசிரியர் அருவிகவி, அனந்த ரவி, அறிவழகன் (விசிக), முனைவர் விஞ்ஞானி குமார், தமிழோசை கவிஞர் மன்றம் மற்றும் தமிழில் அறிஞர்கள் பெரியார், அண்ணா ஆகியோருக்குப் புகழாரம் சூட்டி உரையாற்றினர்.
நூலகக் காப்பாளர் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. இத்தகவலை நூலகக் காப்பாளர் ச.செல்லபெருமாள் தெரிவித்தார்.
-விடுதலை,9.10.15
-விடுதலை,9.10.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக