வெள்ளி, 13 நவம்பர், 2015

அமெரிக்காவில்அய்ந்தாவது ஊரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா



தந்தை பெரியார் 137ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கலிபோர்னியா, வாசிங்டன், வர்ஜினியா, இலினாஸ் (சிகாகோ) கனடா ஆகிய இடங்களில் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் இப்போது கனெக்டிகட் மாநிலம் எலிங்டன் நகரில் கருத்துக் களஞ்சியமாக நடைபெற்றுள்ளது.
தந்தை பெரியார் அவர்களது 137 வது பிறந்த நாள் விழா அமெரிக்க கனெக்டிகட் மாநிலத்தில் எலிங்டன் நகரில் நூலகத்தில் அமெரிக்க மனித நேய அமைப்பால் கொண்டாடப்பட்டது.
இது ஒரு கருத்துப் பரிமாற்ற நிகழ்வாகக் கொண்டாடப்பட்டது. அதில் சில கருத்துக்கள் மனம் நிறைந்த மாட்சியாக இருந்தது.
தோழர் நாச்சிமுத்து சாக்ரட்டீசு வரவேற்புரை ஆற்றி அமெரிக்காவில் பெரியார் இயக்க வளர்ச்சி பற்றிப் பேசினார்.
பெரியாரின் கருத்துக் களம்!
முதலாவதாகப் பெட்சி எனும் இளைய பெண்மணி பெரியாரின் பெண்ணுரிமை கருத் துகள் இன்னும் முன்னேற்றமடைய வேண்டும். அதைப் பெண்கள் முன்னெடுக்க வேண்டும் என்று சொன்னார். அன்பு அவர்கள் பெரியாரின் கருத்துக் களம் ஆணிவேரைக் குறி வைத்தது.அதுதான் வெற்றிக்கு அடிப்படை என்றார். புரட்சிக் கவிஞரின் தொண்டு செய்து பழுத்த பழம் பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் ஆழமான பொருளுடையது என்றார். அஜய்குமார்  பெரி யாரினால் அவர் அனுபவிக்கும் தொல்லைகள் பற்றி நகைச்சுவையாகச்  சொன்னார். தேவதாசி முறை ஒழிந்ததால் அவர் குழந்தைகளை நாட்டிய வகுப்பிற்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. பெண்ணுரிமை என்பதால் இணையரை மரியாதை யுடன்  நடத்த வேண்டியுள்ளது. வட நாட்டார், மற்ற மாநிலங்கள் போல தனது சாதிப் பெயரை போட முடியவில்லை, வெட்கமாக இருக்கின்றது என்றார். திண்ணை இணைய இதழ் நடத்தும் தோழர் ராஜாராம் விதை விதைத்து வளர்ப்பவன் பழம் தின்பதில்லை. ஆனால் பழம் தின்பவனோ நன்றி இல்லா விட்டாலும் குறையாவது சொல் லாமல் தின்கின்றானா? பெரியாரைக் குறை கூறுவோர் இன்று பழம் தரும் மரத்தின் மீதே கல் வீசுகின்றனர். அறிவாளிகள் என்று சொல்லிக் கொள்வோர் எல்லோரும் அறிவாளிகள் அல்லர். பெரியார் போல அனுபவத்தில் அறிவு படைத்த வர்களே மதிக்கத் தக்க அறிவாளிகள் என்றார். முன்னுக்குப் பின் முரண் என்கின்றார்கள். அவர் அனைத் திற்கும் நன்றாக விளக்கமளித்துள்ளார். அதைப் படிக்காமல் அந்தக் காலத்தைப் போலவே சூனா மாநா என்ற மாதிரியில் வெறுப்பூட்டப் பார்க்கின்றனர் என்றார்.
பெரியார் அம்பேத்கர் உறவு!
நாஞ்சில் நாட்டுத் தோழர் லாரன்சு பல பக்தகோடி இளைஞர்களை மென்மையாகப் பேசி மாற்றியுள்ளவர். மாட்டுக்கறி அரசியல் அதன் அடிப்படை பற்றி நன்கு பேசினார். போலித் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் பற்றி செல்வராஜ் முருகைய்யன் பேசி பெரியார் அம்பேத்கர் உறவினை எடுத்துரைத்தார்.
அய்யா இமயவரம்பனின் உறவினர் ராசேந் திரன்  அவர்கள் அவர் குடந்தையில் படித்த போது குறைந்த எண்ணிக்கையில் உள்ள பார்ப்பனர்களுக்குக் குடிக்க ஒரு தண்ணீர்ப் பானையும் நிறைய எண்ணிக்கையில் வரிசையில் நின்று கொண்டிருக்கும் படி பெரும்பான்மையி னருக்கு ஒரு தண்ணீர்ப் பானையும் வைத்திருந் ததை எடுத்துச் சொன்னார். அவர் அன்று படித்த உயிர் வேதியியல் பார்ப்பனர் கூடாரமாகவும், இருந்த நிலையில் தாம் முன்னணியில் விளங்கு வதற்குக் காரணமே. தந்தை பெரியார் கொடுத்த தன்னம்பிக்கைதான் என்றுரைத்தார்.
இன்றும் நாம் யாரையும் எதிரிகளாகக் கருதவில்லை; ஆனால் அவர்கள் அந்த எதிரியான எண்ணங்களை விட்டொழிக்க மறுப்பது தான் நம்மை அந்த எண்ணங்களுக்கு எதிரிகளாக்கிப் போராட வைக்கின்றது என்றார். பிரபு ராமகிருட்டிணன் கோவில் - பாவம் செய்தவர்கள் புண்ணியம் தேடி அலையும் இடமாகி விட்டது. அங்கே நல்லவர்கள் இருக்கின்றார்களா என்பதே பெரிய கேள்வியாக இருக்கின்றது என்றார். இளைஞர் கணேசன் பெரியாரைப் பற்றி அறிந்து கொள்ளாமல் சென்னையில் வளர்ந்து விட்டேன். அது போல நிறைய இளைஞர்கள் உள்ளனர். இப்போதுதான் படித்து அறிந்து கொள்கின்றேன். இவ்வளவு பெரிய தலைவரை எப்படி  மூடி மறைத்தனர்? அவருக்குள்ள மரியாதையை அனைவரும் நினைத்துக் கொண்டாட வழி வகுக்க வேண்டும் என்றார். சாம்ராஜ் அவர்கள் பெரியாரின் சிக்கனம் பற்றிப் பேசினார். தர்மபுரி தோழர் விநோத்குமார் அவர் அப்பாவிடமிருந்து எப்படி மருத்துவக் கல்லூரியே பார்ப்பனக் கூடாரமாக இருந்தது என்பது பற்றி அறிந்து அதிர்ச்சியுற்றேன் என்றும், இன்றைய நிலைமைக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் என்றார்.
இளைய தலைமுறையைச் சேர்ந்த திருமதி வர்ஷா நாகர்கோவில்காரர். நம்பூதிரிகளின் அநியாயங்களை நேரில் பார்த்தவர். கோவிலில் அவர்கள் தூக்கையில் தூக்கி எறிவதை அம்மா விடம் கூறி வாங்க மறுத்ததில் ஆரம்பித்தது அவரது சுய மரியாதைச் சிந்தனைகள். இன்றும் நடை முறையில் உள்ள இழுக்குகளை எடுத்துச் சொல்லி எதிர்க்க வேண்டும் என்றார். பெரியாரின் சிக்கனம் ஒவ்வொருவராலும் கடை பிடிக்கப்பட வேண்டும் என்றார்.
போராட்டமே வாழ்க்கை!
தோழர் கார்த்திகேயன் பிரபு திராவிட இயக்கங்கள் தேர்தல் அரசியலால் எவ்வளவு கொள்கைகள் இழப்பிற்கு ஆளாகி உள்ளனர்.இன்று எவ்வாறு அரசியல் சீரழிந்துள்ளது, இப்போது புரிகின்றது - பெரியாரின் பணி. போராட்டம், போராட்டம், போராட்டமே வாழ்க்கை என்பது. திராவிடர் கழகம் என்றும் தேவை என்று கூறினார்.
மருத்துவர் சரோஜா இளங்கோவன் எப்படி அவரது வகுப்புப் பார்ப்பனப்  பெண் உனக்கெல்லாம் படிப்பு வராதடி என்று சொன்னதே பெரிய உந்துகோல் ஆகிவிட்டது. இன்றும் பார்ப்பனீயம் டில்லி பாம்நோலி பெரியார் மாளிகையை இடித்தது, உடல் துடித்தது என்றும்,இன்றும் நமக்கு உண்ர்வு வேண்டும், கோவிலுக் குப் போவதால் ஏதாவது பயனுண்டா என்று உணர வேண்டும் என்றார்.
உண்மை, பெரியார் பிஞ்சு இதழ்களைக் காண்பித்து அதிலிருந்து படித்துக் காட்டினார். அனைவரையும் விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு இதழ்களைப் படிக்கச் சொன்னார்.
தாலி பற்றிய சூடான விவாதம்
நண்பர் கார்த்திக் தெய்வீகராசன் தொகுத்து வழங்கி பங்கேற்றார். தாலி பற்றிய சூடான விவாதம் கிளம்பியது. அதைப் பற்றி விவாதிக்க இருந்த தொலைக் காட்சி நிறுவனத்தை அடித்ததால் தான் அந்தப் பிரச்சினையே உருவானது. யாருங் கேட்காததால் திராவிடர் கழகம் கேட்டு பின்னர் நிகழ்வுகள் நடந்தன். அது போலவே மாட்டிறைச்சிப் பிரச்சினை. இது மாதிரி இந்து மத வெறியர்களின் கொட்டம் அடக்கப் பட வேண்டும் என்று பலரும் பேசினர். விவாதங்களை சோம.இளங் கோவன் நடத்தினார். இப்போது என்ன செய்யப் படுகின்றது என்பதற்குப் பெரியார் ஆயிரம் வினா விடை மாநிலமெங்கும் லட்சக்கணக்கில் இளைய தலைமுறை பங்கேற்பது, 360க்கும் மேல் தொடர்ந்து திராவிடர் கழக நிகழ்ச்சிகள் நாடெங்கும்  நடப்பது, மானமிகு ஆசிரியர் வீரமணி பெயரில் பெரியார் பன்னாட்டு மய்யம் சமூக நீதி விருது நிகழ்ச்சி நடத்தி உலகெங்கும் பெரியாரியலைப் பரப்புவது, இணையத் தில், முக்கியமாக முகநூலில் நமது இளை யோர் செய்யும் பணி பாராட்டத்தக்கது என்றும், 2016 ஜூலையில்  ஜெர்மனி கொலோன் பல்கலைக் கழகத்தில்  மாநாடு நடக்கும் என்று எடுத்துரைத்தார்.
நமது இயக்க நூல்களை மக்கள் வாங்கிச் சென்றனர்.
இளைய தலைமுறை பெரியாரை அறிந்து கொள்ளும் துடிப்புடன் பங்கேற் றது மிக்க மன நிறைவாக இருந்தது மாட்சி தந்தது.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு.
-vsodlnr,19.10.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக