ஞாயிறு, 1 நவம்பர், 2015

கடவுள் மறுப்பாளர் விஞ்ஞானி சந்திரசேகர்


சுப்பிரமணியன் சந்திரசேகர் (1910 - 1995) ஒரு வானியல் - இயற்பியல் விஞ் ஞானி. ஆங்கிலேயர் கால இந்தியாவில், இன்றைய பாகிஸ் தான் பகுதியான லாகூரில் சுப்பிரமணியன் - சீதாலட்சுமி தம்பதிக்குப் பிறந்த தமிழர்.
அவர் லாகூரிலும், பிறகு லக்னோ விலும் வாழ்ந்தபின், சென்னை வந்தடைந் தார். 11 வயதில் அவர் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். மாநிலக்கல்லூரியில் இயற்பியல் படித்தார். அப்போதுதான் அவரது சித்தப்பா சர்.சி. வி. ராமனுக்கு நோபல் பரிசு கிடைத்தது. சந்திரசேகரின் அம்மா உலகப் புகழ்பெற்ற நாடகாசிரியர் ஹென்ரிக் இப்சனின் நாடகத்தைத் தமிழாக்கியவர். அவரின் அறிவார்ந்த ஆற்றலும் இளம் சந்திர சேகருக்கு மாபெரும் தூண்டுதலாக இருந்தது.
சந்திரசேகர் 19 வயது மாணவராக இருக்கும்போதே ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். 1930 - ஆம் ஆண்டு, இந்திய அரசின் பண உதவி பெற்று, மேல்படிப் புக்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத் துக்குப் போனார்.
அவர் தனது 19ஆம் வயதில் ஐன்ஸ் டீனின் சார்பியல் தத்துவத்தையும் குவாண்டம் கோட்பாட்டையும் பயன் படுத்தி ஒரு வானியல் கோட்பாட்டை உருவாக்கினார்.
விண்வெளியில் உள்ள ஒரு நட்சத் திரத்தின் இறுதிக் காலம் அது எவ்வளவு பொருள்நிறையைக் கொண்டதாக உள்ளது என்பதைப் பொறுத்ததாக அமைகிறது. மிக அதிகமான பொருள் நிறையை கொண்டுள்ள நட்சத்திரங்கள் தங்களின் இறுதிநாளில் நியூட்ரான் நட்சத்திரங்களாகவோ அல்லது கருந் துளைகளாகவோ மாறுகின்றன.
பொருள்நிறை குறைவாக உள்ள அல்லது நடுத்தரமான பொருள்நிறை உள்ள நட்சத்திரங்கள் - உதாரணமாக - நமது சூரியனைவிட ஏறத்தாழ எட்டு மடங்கு பொருள்நிறை குறைவாக உள்ள நட்சத்திரங்கள் - வெள்ளைக் குள்ளன் எனும் ஒரு அடர்த்தியான நிலையை அடைகின்றன.
இந்த நிகழ்ச்சிப்போக்கை நாம் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு வரையறையை கணித அவதானிப்புகள் மூலம் அவர் அறிவித்தார். அவரது இந்த வரையறைதான் நட்சத்திரங்களின் பிறப்பு, வளர்ச்சி, இறப்பு பற்றிய ஆய்வில் இன்றும் வழிகாட்டுகிறது.
இந்த ஆய்வுக்காக இவருக்கு, 1983 - இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வில்லியம் பவுலர் என்பவரோடு இணைத்து வழங்கப்பட்டது.
1937 - இல் சந்திரசேகர் அமெரிக்கா வின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகச் சேர்ந்தார். 1995 - இல் 84 வயதில் இறக்கும்வரை அதே பல்கலைக்கழகத்திலேயே பணிபுரிந்தார். இவர் 1953 முதல் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்ந்தார். அமெ ரிக்காவில் 50 முனைவர் பட்டதாரிகளை உருவாக்கினார். அமெரிக்காவின் விண் வெளி ஆய்வு அமைப்பான நாசா உள் ளிட்ட பல இடங்களுக்கு அவரது நினை வாகப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. கடவுள் நம்பிக்கை இல்லாதவராக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நீடித்தார்.
நன்றி: தி இந்து (தமிழ்) 20.10.2014
-விடுதலை ஞா.ம.1.11.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக