இவர் பகுத்தறிவாளர்
பெயர் தாமஸ் ஜெபர்சன்
(Thomas Jefferson)
பிறப்பு : ஏப்ரல் 13, 1743 ஷாடுவெல்,வர்ஜீனியா,அமெரிக்கா இறப்பு ஜூலை 4, 1826,
துறை :அரசியல், ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், கல்வியாளர், கட்டடக்கலை நிபுணர் சிறப்பு அமெரிக்க நாட்டின் மூன்றாவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றியவர் (மார்ச் 4, 1801 முதல் மார்ச் 4, 1809 வரை).
இவர் 1776 இல் எழுதிய சுதந்திரத்தின் பிரகடனம் என்னும் நூல் புகழ்பெற்றதாகும். அய்க்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் விடுதலையையும் தனிமனித உரிமைகளையும் போற்றும் ரிப்பப்லிக்கனிசம் என்னும் அரசியல் கொள்கையை செல்வாக்குடன் முன்நிறுத்தியவர்களில் ஒருவர். மனிதசமூகத்தில் நிலவிய அடிமை முறையை ஒழிக்க அரும்பாடுபட்டவர்
நாத்திக குத்து உலகில் உள்ள எல்லா மதங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. பொய்யான கதைகளாலும், புராண இதிகாசங்களாலும் அவை உருவாக்கப்பட்டன.
எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் குருமார்கள் அனைவருமே விடுதலைக்கு எதிராகவே இருந்து வந்திருக்கின்றனர். அவர்கள் எப்பொழுதும் கொடுங்கோன்மையோடு கூட்டணி வைத்துள்ளனர். அவர்கள் தவறுகளின் மூலமே தங்களுடைய அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர்.
-புருனோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக