புதன், 25 அக்டோபர், 2017

விசாகப்பட்டினத்தில் வெண்தாடி வேந்தர் அய்யாவின் மூன்று நாள் பிறந்தநாள் பெருவிழா






விசாகப்பட்டினம், அக்.16  விசாகப் பட்டினத்தில் தெலங்கானா, ஆந்திரப் பிரதேச பகுதிகளிலிருந்து ஏராளமான வர்கள் கலந்துகொண்டு சிறப்பித்த தந்தை பெரி யார் 139ஆவது பிறந்த நாள் விழா மூன்று நாள்களும் எழுச்சியாக நடைபெற்றது.

விசாகப்பட்டினத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பவனில் தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா செப்டம்பர் 15, 16, 17 ஆகிய மூன்று நாள்கள் சிறப்புடன் கொண்டாடப் பட்டது.

விழா ஏற்பாட்டினை இந்திய நாத்திக சங்கம் செய்தது. விழாவில் ஏராளமான ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் சுயமரியாதைக்கான கருப் புடையாக கருப்புநிற சட்டைகள், கருப்பு நிற சேலைகள் அணிந்து ஆர்வத் துடன் பங்கேற்றனர்.

பொதுக்கூட்டம்

விசாகப்பட்டினம் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பவனில் முதல் நாள் நிகழ்வாக 15.9.2017 அன்று தந்தை பெரியார்குறித்த பொதுக்கூட்டம் நடை பெற்றது.

விசாகப்பட்டினத்தில் தந்தை பெரியார் சிலை அமைப்புக்குழுவில் இடம்பெற்றவரும், இந்திய நாத்திக சங்கம் மற்றும் அறிவியல் மாணவர் கூட்டமைப்பு நிறுவனருமாகிய ஜெயகோபால் விழாவில் பங்கேற்ற அனை வருக்கும் வாழ்த்துகளை நேரில் தெரிவித்துக்கொண்டார். தந்தைபெரியார் கருத்துகளை  ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா மாநிலங்களைக் கடந்து கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

"பாஸ்"  அமைப்பின் செயலாளர் பால் டெட்டி பெண்டாரோ, தாழ்த்தப் பட்ட பெண்கள் நல செயற்பாட்டாளர் நாகமணி ஆகியோர் தந்தைபெரியார், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் குறித்தும்,   அவர்கள் தம் வாழ்நாளில் நண்பர் களாகவும், சிந்தனைகளிலும், கொள்கை களிலும் ஒத்த கருத்துள்ளவர்களாக இருந்தார்கள் என்றும் குறிப்பி1ட்டார்கள்.
'பாஸ்' அமைப்பின் துணைத் தலைவர் மருத்துவர் ஜி.அர்ஜூன், கல்லூரி முதல்வர் மருத்துவர் சத்யராஜ், வழக்குரைஞர் காந்தா மோகன் உள் ளிட்ட பலரும் முதல் நாள் நிகழ்வில் பங்கேற்றனர்.

பேரணி

இரண்டாம் நாள் நிகழ்வாக 16.9.2017 அன்று அரக்கு பள்ளத்தாக்கு பகுதியில் தெலங்கானா நாத்திகர்கள் அமைப்பின் சார்பில் பேரணி நடைபெற்றது.

அறிவியலுக்கான ஓட்டம்

மூன்றாம் நாள் நிகழ்வாக 17.9.2017 அன்று நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங் கேற்ற  "பெரியார், அறிவியலுக்கான ஓட்டம்" நடைபெற்றது. ஆர்.கே. கடற் கரையிலிருந்து தொடங்கி ஒய்.எம்.சி.ஏ. எதிரில் காளி கோயில் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை அமைந்துள்ள பகுதியில் ஓட்டம் நிறைவு பெற்றது.

மதசார்பற்ற நாட்டில் மதத்தை ஒழிப்போம், மூடநம்பிக்கைகளை ஒழிப்போம், மதக்   கற்பனைகளால் தாழ்த்தப்பட்டவர்கள்மீதான வன் கொடுமைகள் நிறுத்து, தாழ்த்தப்பட்ட பெண்கள்மீதான வன் கொடுமைகளை நிறுத்து, ஜாதி ஒழிப்பு திருமணங்களை முன்னெடுப்போம், மத மறுப்பு திருமணங்களை முன்னெடுப்போம் உள்ளிட்ட முழக்கங்களை பெரியாருக் கான, அறிவியலுக்கான ஓட்டத்தின் போது பங் கேற்பாளர்கள் அனைவரும் முழங்கி னார்கள்.

மருத்துவர் பி.சுப்பாராவ், மருத்துவர் கே.பி.சுப்பாராவ், ஆந்திரப் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் மஞ்சுலதா, தெலங்கானா மாநில இந்திய நாத்திக சங்கத்தின் பிரச்சாரச் செயலாளர் பைரி நரேஷ் ஆகி யோர் பெரியார், அறிவியலுக்கான ஓட்டத் தினை சிறப்பாக ஏற்பாடு செய்தார்கள். மூன்று நாள்கள் விழாவுக்கான ஏற்பாடு களை அஜய், ஒய்.நூகாராஜூ ஆகியோர் இந்திய நாத்திக சங்கம் மற்றும் பாஸ் அமைப்பின் சார்பில் சிறப்பாக செய்திருந்தார்கள்.

மூன்றாம் நாளில் 17.9.2017 அன்று மாலை 5 மணியளவில் விசாகப் பட்டினம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பவனில் பெரியார் குறித்த பேச்சுகளைக் கேட்பதற்கு பெருந்திரளானவர்கள் குழுமியிருந்தார்கள்.

டிசிடிஓ மருத்துவர் பி.சுப்பாராவ், பி.பென்டாராவ், ஒய்.நூகாராஜூ, அஜய், பேராசிரியர் சுப்பாராவ், பி.நரேஷ் உள்ளிட்ட பலரும் தந்தை பெரியார் கொள்கைகள், தத்துவங்கள்  ஆகியவற்றின் தேவைகுறித்தும், நாடு முழுவதும் பரவ வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக எடுத்து ரைத்தார்கள்.

விழா முடிவில் அஜய் நன்றி கூறினார். பதாகைகள் அமைப் பதற்கு நகரில் காவல்துறையின் கட்டுப் பாடு களிடையே, விழா நடைபெறு மிடங் களில் வெகு சிறப்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பதாகைகள் அமைக் கப்பட்டிருந்தன.

மேலும், தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சுவ ரொட்டிகள் தெலங்கானா மாநிலத்தில் உள்ள பொறுப்பாளர்கள் மூலமாக பல்வேறு பகுதிகளில் காட் சிப்படுத்தப்பட்டன.

இந்திய நாத்திக சங்கத்தின் சார்பில் ஜெயகோபால் கூறியதாவது:

விசாகப்பட்டினத்திலிருந்து செயற்பாட்டாளர் வர்மா தலைமையிலான அய்ந்து பேர் கொண்ட குழு சென்னையில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் நேரில் மரியாதை செலுத்துவதற்கு வருகை தரு
கிறார்கள்.

விசாகப்பட்டினத்தில் எழுச்சியுடன் தந்தை பெரியார் விழாவையடுத்து,  விரைவில் மதம் மற்றும் ஜாதிக்கு எதிரான நம்முடைய போராட்டம் நடத்தப்பட உள் ளது.

இவ்வாறு இந்திய நாத்திக சங்கத் தின் பொறுப்பாளர் ஜெயகோபால் குறிப்பிட்டார்.
-விடுதலை நாளேடு, 16.9.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக