செவ்வாய், 10 அக்டோபர், 2017

அண்ணா போலிட் கோவ்ஸ்கயா விருது கவுரி லங்கேஷ் தேர்வு


பெங்களூரு, அக்.7 ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அண்ணா போலிட்கோவ்ஸ்கயா பெயரில் லண்டனைச் சேர்ந்த ரீச் ஆல் உமன் இன் வார் (ரா இன் வார்) என்ற அமைப்பு வழங்கும்  விருதுக்கு அண்மை யில் துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து பெங்களூருவில் வியாழக்கிழமை கவிதா லங்கேஷ், செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

எனது சகோதரியும், மூத்த பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் கடந்த செப்.5- ஆம் தேதி அடை யாளம் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரது கொலை தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. விசா ரணை திருப்தியாக இருக்கிறது என்பதை காட் டிலும் கொலைக்காரர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம் எங்களுக்கு உள்ளது.

கடந்தாண்டு மாஸ்கோவில் பாகிஸ்தான் செயல்பாட்டாளர் குலாலாய் இஸ்மாயிலுடன் இணைந்து ரஷ்ய நாட்டைச் சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளர் அண்ணா போலிட் கோவ்ஸ்கயா நினைவாக அண்ணா போலிட்கோவ்ஸ்கயா விருது நிறுவப்பட்டுள்ளது.

இந்த விருதை லண்டனைச் சேர்ந்த ரீச் ஆல் உமன் இன் வார் (ரா இன் வார்) என்ற அமைப்பு வழங்குகிறது. இந்த விருக்கு கவுரி லங்கேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக எனக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இந்த விருதை பெறும் முதல் இந்தியர் கவுரி லங்கேஷ். எனது சகோதரியை போலவே அண்ணா போலிட் கோவ்ஸ்கயாவும் துணிச்சலான செயல்பாட்டு பெண் பத்திரிகை யாளர்.

2006, அக்.7- ஆம் தேதி மின் தூக்கியில் சென்று கொண்டிருந்த போது விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். ரஷ்யாவில் உள்ள செச்ன்யா மாகாணத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசியதற்காக அண்ணா போலிட் கோவ்ஸ்கயா என்ற பெண் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
எனவே, அவரது பெயரில் பெண் பத்திரி கையாளர்களை அடையாளம் கண்டு கவுரவிக்க விருது நிறுவப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு கவுரி லங்கேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிகவும் பொருத்தமானதாகும் என்றார். பேட்டியின் போது, கவுரி லங்கேஷின் தாய் இந்திரா, சகோதரர் இந்திரஜித் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- விடுதலை நாளேடு,7.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக