வியாழன், 12 அக்டோபர், 2017

அமெரிக்கா நியூ ஜெர்சியிலும், தெ.ஆ. கானாவிலும்

கருத்தரங்கம் - கல்விப் பணிகள் கலகலப்பாக...

தந்தை பெரியார் பிறந்த நாள் பெருவிழா கொண்டாட்டங்கள்



நியூஜெர்சி, செப்.26 அமெரிக்காவின் நியூஜெர்சி யிலும், தென்னாப்பிரிக்காவின் கானா நாட்டிலும் தந்தை பெரியார் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழாவாகக் கொண்டாடபட்டது.

அமெரிக்கா: நியூஜெர்சியில்...

நியு ஜெர்சி மாநிலத்தில் செப்டம்பர் 23 ஆம் தேதி தந்தை பெரியார் அவர்களின் 139 ஆவது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண் டாடப்பட்டது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ‘நீட்’ எனும் சமூக அநீதியால் உயிரிழந்த மாணவி அனிதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். மதவெறியால் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ் ஆகியோருக்கு அமைதி காத்து மரியாதை செலுத்தப்பட்டது.

சுபாசு சந்திரன் வரவேற்புரை நிகழ்த்தி வந்திருந்தோரை நிகழ்ச்சிக்கு வரவேற்றார். தந்தை பெரியாரின் கருத்துகளை பகிரக்கூடிய கருத்தரங்கை பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மருத்துவர்  சோம.இளங்கோவன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.

‘பெரியாரும் பெண்ணியமும்’ என்ற தலைப் பில் சுபா செல்லப்பன் தந்தை பெரியார் எவ்வாறு பெண் விடுதலைக்காகப் பாடுபட்டார், தன் வீட்டுப் பெண்களை போராட்டக்களத்திற்கு எவ்வாறு தயார் செய்தார் என பல கருத்துகளை எடுத்துரைத்தார்.

கருத்தரங்கம்

‘பெரியாரும் தமிழ்மொழியும்’ என்ற தலைப் பில் மருத்துவர் சரோஜா இளங்கோவன் தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்த்திருத்தம் எத்தகைய நன்மையை தமிழ் மொழிக்கு நல்கியது எனவும், பெரியார் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் குறித்தும் சிறப்புற எடுத்து இயம்பினார்.

‘பெரியாரும் மத எதிர்ப்பும்’ என்ற தலைப்பில் செந்தில்நாதன் எப்படி தந்தை பெரியார் தன் இந்து மத எதிர்ப்பை காசியில் இருந்து தொடங்கினார், எவ்வாறு இந்து மதம் ஜாதியத்தைப் பாதுகாக் கின்றது என எடுத்துரைத்தார்.

‘பெரியாரும் ஜாதி ஒழிப்பும்’ என்ற தலைப்பில் பார்த்திபன் சுந்தரம் ஜாதியின் படிநிலைகள் எவ்வாறு மக்களைப் பிளவுபடுத்தியுள்ளது, சக மனிதனை இழிவாக நடத்துகின்றது என எழுச்சி யாக எடுத்துரைத்தார்.

‘பெரியாரும் பகுத்தறிவும்’ என்ற தலைப் பில் வழக்குரைஞர் கனிமொழி தந்தை பெரி யாரின் பகுத்தறிவில் ஏன் கடவுள் மறுப்பு அணுகுமுறையை கையாண்டார் என்பதை விளக்கி சிறப்பாக உரையாற்றினார். அதே போல் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களும் தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு உரையை தந்தை பெரியார் அவர்களின் குரலில் பேசினார்.

சென்னையில் இருந்து திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் நெய்வேலி வெ.ஞான சேகரன் நிகழ்வில் கலந்து கொண்டு தந்தை பெரியாருக்குப் பின் எப்படி திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் தந்தை பெரியாரை முன்னிலைப்படுத்தி அவர்களை உலகெங்கிலும் கொண்டுச் சென்று வருகிறார் என்பதை எடுத்துரைத்தார். அதே போல பெரியார் பிஞ்சுகள் இனியா பெண்ணுரிமை பற்றியும், இதயா சுயமரியாதை பற்றியும், பிரியன் என் பார்வையில் பெரியார் என்பதை பற்றியும் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார்கள்.

பெரியார் பிஞ்சுகள் இலக்கணன், எயினி  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைகளை ஒப்பு வித்தனர்.  சசிக்குமார் நன்றி உரை நல்கினார்.

இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பை நியு ஜெர்சியில் வாழும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத் தோழர்கள் ஓம் பிரசாத், பாலா, செந்தில், சுபாசு சந்திரன், தாமஸ் ஆகியோர் சிறப்பாகச் செய்தனர். வந்திருந்த இன உணர்வாளர்கள், பெரியார் பற்றாளர்கள் தந்தை பெரியாரின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்த வேண்டுகோள் வைத்தனர்.

தெ.ஆ. கானாவில்...

ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் ஜனநாயக குடியரசு நாடாக கானா நாடு திகழ்ந்து வருகிறது. கானா நாட்டின் தலைநகராக அக்ரா உள்ளது. அய்க்கியப் பேரரசான இங்கிலாந்திடமிருந்து 1957 ஆம் ஆண்டில் விடுதலை பெற்ற முதல் ஆப்பிரிக்க நாடு கானா ஆகும். தற்போது தந்தை பெரியார் பெயரில் கானா நாட்டு அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக இளைஞர்களின், மாணவர்களின் கல்வி, தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் பணிகளை சிறப்பாக பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேஷன் செய்து வருகிறது.

கானா நாட்டில் பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேஷன் சார்பில் தந்தைபெரியார் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

கல்வி உதவித் தொகை

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கானா நாட்டில் கிராமப்புற இளைஞர்களுக்கான கல்வி மற்றும் அதிகாரத்துவத்துக்கான பயிற்சியை பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேஷன் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் அமராவதி  எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துடன் இணைந்து, இளைஞர்களின்முன்னேற்றத்துக்கானசெயல் பாடுகளில் பெரியார் ஆப்பிரிக்கன்  பவுண்டேஷன் Ôவேற்றுமையில் ஒற்றுமைÕ எனும் கொள்கையை வலியுறுத்தி பரப்பியும் வருகிறது. மேலும், 10 இளைஞர்களைத் தேர்வு செய்து நூறு விழுக்காடு அவர்களின் கல்வி மற்றும் விடுதிக்கான கட்டணங்களை நான்கு ஆண்டுகளுக்கு பொறுப் பேற்று செயல்படுத்தி வருகிறது.

பன்னாட்டளவில் அதிகார மளித்தல் மற்றும் மனிதநேயம், சமத்துவம் வழிகளில் தந்தை பெரியார் கொள்கைகளைப் பின்பற்றி நடப்பதன்மூலமாக, தந்தை பெரியார் 139 ஆம் ஆண்டு பிறந்த நாளில் தந்தை பெரியார் கொள்கைகளைப் பரப்புவதில் பெரியார் ஆப் பிரிக்கன் பவுண்டேஷன் பெருமை கொள்கிறது.

குறுகிய கால அவகாசத்தில் தேர்வுசெய்யப்பட்டமாண வப்பயனாளிகள் 10பேரும் ஒன்றுகூடினார்கள்.அவர்களிடம் பெரியார் ஆப் பிரிக்கன்பவுண்டேஷன்தலை வர் கே.சி.எழிலரசன், துணைத் தலைவர் அலுவலகப் பிரதி நிதிகள், எஸ்ஆர்எம் மேனாள் மாணவரும், அனைத்து நாடு களின் பல்கலைக்கழக கல்லூரி விரிவுரையாளருமாகிய ஓவுசு அன்சா உள்ளிட்டவர்கள்  பெரியார் ஆப்பிரிக்கன் பவுண் டேஷன் நோக்கங்களையும், தந்தை பெரியார் கொள்கை களையும் விளக்கி உரையாற் றினார்கள்.

கானாவில் உள்ள புளூ கிரெஸ்ட் கல்லூரியில் பணி யாற்றும் இந்திய பேராசிரியர்கள், கல்வி மற்றும் மதிப்பீடுகள் தலைவர் முனைவர் பால முருகன், பேஷன் டிசைன் துறைத்தலைவர் ராஜேஷ்குமார், கல்வி விவகாரங்களுக்கான உதவிப்பதிவாளர் சத்தீஷ்குமார் ஆகியோர் மாணவர்களிடையே இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் கல்வி குறித்துவிரிவாக எடுத்துரைத்தார்கள்.

பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேஷன்வளர்ச்சிப் பணிகளில்பணியாற்றி வருபவரும், பயணத்திட்டங் களுக்கான ஆலோசகருமாகிய டாக்டர் சுலமனா அபுதுலாய் கானா நாட்டில் பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேஷன் துணைத் தலைவர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேஷன் உதவியுடன் பயன்பெற்று பொறியியல் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் பேசுகையில் சிறந்த அளவில் கல்வி பயின்று, நன்கு தேர்ச்சி பெற்று  சிறப்பானதொரு நிலைக்கு உயர்ந்து காட்டுவோம் என்று உறுதிபடப் பேசினார்கள்.



-விடுதலை நாளேடு, 26.9.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக