செவ்வாய், 10 அக்டோபர், 2017

எங்கும் பெரியார்! பெரியார்! ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தந்தை பெரியாரின் 139 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா!



விசாகப்பட்டினம், அக்.2 ஆந்திர மாநிலத்திலுள்ள ராயல சீமா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள பல பகுதிகளில்  தந்தை பெரியாரின் 139 ஆவது பிறந்த நாள் விழா, பிரஜா நாஸ்திக சமாஜம் சார்பில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டிருக்கிறது.

மண்டைச்சுரப்பை உலகு தொழும் என்று தொலை நோக்குப் பார் வையுடன் எழுதிய புரட் சிக்கவிஞரின் கவிதைக் கேற்ப தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா உல கெங்கிலும் கொண்டா டப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஆந் திரா, தெலங்கானா மாநி லங்களில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவை பிரஜா நாஸ்திக சங் கத்தின் (மக்கள் நாத்திக சங்கம்) சார்பில் செப்டம்பர் 17 ஆம் தேதி அன்று மிகச் சிறப் பாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது.

தெலங்கானா மாநிலத்திலுள்ள வாரங்கல் மாவட்டத்தில் பிறந்த ஜி.டி. சாரய்யாவை தலைவராகக் கொண்டு இயங்கி வரும் இந்த அமைப்பானது ஆண்டு முழுவதும் தந்தை பெரியாரின் கருத்துக் களை மக்களிடம் கொண்டு செல்லும் பணிகளைச் செய்து வந்தாலும், இந்த ஆண்டு இதுவரையிலும் இல்லாத வகையில் தந்தை பெரியாரின் கருத்துகள் அறிமுகமே இல்லாத குக் கிராமங்களுக்கும் சென்று அங்கி ருக்கும் மக்களுக்கு பாயாசம் கொடுத்து, தெருமுனைக் கூட்டங்களாக ஆங்காங்கே அவரது கொள்கைகளைப் பேசி பிரச்சாரம் செய்திருக் கின்றனர்.

ஆந்திரா, தெலங்கானா கிராமங்களில் பெரியார்!

தெலங்கானா மாநிலம் உள்ள விசாகபட்டினம், கரீம் நகர், உசாரா பாத், பெல்லம்பள்ளி, வாரங்கல் மாவட்டம் கமலாபுரம், ஜெமிகுண்டா, பூபால பள்ளி மாவட்டம் ஏட்டூர் நாகரம் மற்றும் பத்ரதிரி ஜில்லா, கடப்பா, பொத்துட்டூர் மற்றும் கொத்தகுடம் ஆகிய பகுதிகளில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டிருக்கிறது.

கரீம்நகர் பகுதியில் நடைபெற்ற விழாவில் அதன் முனிசிபல் சேர்மன் கலந்துகொண்டு சிறப் பித்திருக்கிறார்.

அதேபோல ஜெமிகுண்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அங் குள்ள சர்க்கிள் இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் திருப்பதி அய்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கின்றனர்.

இதே பிரஜா நாஸ்திக சங்கம் தன்னுடைய பிரச்சாரத்தை விரிவு படுத்துகிற விதமாக ஆந்திர மாநிலத்திலுள்ள ராயலசீமாவிலும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பிரச்சாரம் கரீம் நகரில் தொடங்கி கொத்தகூடம் வரையிலும் மிகச் சிறப்பாக நடை பெற்றிருக்கிறது.

இவர்களின் பிரச்சாரம் உரைகளோடு கூடிய இசையும், நடனமும் சேர்ந்தாகும். இந்த ஆண்டு பிரச்சாரம் செய்த பகுதிகள் அனைத்தும் பெரியாரைப்பற்றி அறிமுகம் இல்லாத பகுதிகள் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தப் பிரச்சாரத்தில் பிரஜா நாஸ்திக சமாஜத்துடன் உள் ளூரிலிருக்கும் பல மக்கள் நலப்பணி அமைப்புகளும் கலந்து கொண் டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பகுத்தறிவு பிதாமகன்  தந்தை பெரியார்!

கிராமப்பிரச்சாரத்தைத் தொடர்ந்து பிரஜா நாஸ்திக சங்கமானது செப்டம்பர் 20 ஆம் தேதி விசாகபட்டினத்திலுள்ள பத்திரிகையாளர் சங்கக் கட்டடத்தில் (க்ஷியிதி றிக்ஷீமீss சிறீuதீ) நாஸ்திக கேதுவாதி பிதாமகடு (பகுத்தறிவு பிதா மகன் தந்தை பெரியார்) என்ற தலைப்பில், தந்தை பெரியார் பற்றிய ஒரு கருத்தரங்கத்தையும் நடத்தி முடித்திருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் ஜி.டி. சாரய்யா தலைமையேற்று சிறப்பித்திருக் கிறார்.  நிகழ்வில் பிரகதீசீலா மகிளா சங்கத்தின் (மகளிர் முற்போக்கு அமைப்பு) தலைவர் லட்சுமி, தலித்த விமுக்தி அமைப்பின் தலைவர் ரமணா, ஆந்திர பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியர் சரோஜா ராஜ் மற்றும் பேராசிரியர் கே.பி.சுப்பாராவ் ஆகி யோரும் ஏராளமான மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கவுரி லங்கேஷ் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது. -------
- விடுதலை நாளேடு2.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக