வெள்ளி, 27 அக்டோபர், 2017

மலேசியாவில் - பினாங்கு, மலாக்கா, சிலாங்கூர் மாநிலங்களில் தந்தை பெரியார் 139ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா








கோலாலம்பூர், அக்.13  உலகத் தலைவர் தந்தை பெரி யாரின் 139ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பன்னாட்டளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மலேசியா வில் உள்ள பல்வேறு மாநிலங் களில்  மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

பினாங்கு

மலேசிய திராவிடர் கழகம் பினாங்கு மாநில பெரியார் விழா,  மாநிலத்தலைவர் மானமிகு ச.த.அண்ணாமலை அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்துக்கொண்ட தொழில் அதிபரும் மலேசிய இந்திய காங்கரசின் மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ.ஜெ.தினகரன் அவர்கள் அறிவாசான் தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.

கழகத்தின் தேசிய துணைத் தலைவர் மானமிகு.டாக்டர். மு.முரளி அவர்கள், நம் தமிழ் சமுதாயத்தில் இனமானவு ணர்வுக்கு தூண்டுகோளாகவும், விடிவெள்ளி யாகவும் இருந்து இனமீட்பு போராட்டத்தை முன்னெடுத்தவர் தந்தை பெரியாரே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்றார். இனம்,மொழி,பண்பாடு என்ற கூறுகளை கூறுபோட்டு வைத்திருந்த ஆரிய மாயையில் இருந்து மீட்சிப்பெற பெரியாரின் கைத்தடியே தமிழனுக்கு ஊன்றுக்கோளாக இருந்தது என்பது வரலாற்று உண்மையாகும் என்று கொள்கை உரை நிகழ்த்தினார்.

பெரியார் விழாவில் ம.தி.க தேசிய உதவித்தலைவர் மானமிகு.செ.குணாளன் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் சிறப்புகளை மிகவும் அழகாக எடுத்துரைத்தார்.மாணவி அறிவம்மை-தமிழ்வாணன், கலைமகள்-சின்னகருப்பன் இருவரும் பெரியார் எழுச்சிப் பாடலை பாடி விழாவுக்கு சிறப்பு சேர்தனர். மேலும், பெரியார் பெருந்தொண்டர் சா.வடிவேலு, டாக்டர் அபிப் ரகுமான், இரா.ப.தங்கமணி, அண்ணா குரலோன் ஜுரு இராசகோபால் போன்றோர் பெரியார் - அண்ணாவைப் பற்றி தங்கள் பாணியில் உரையாற்றி விழாவை நிறைவுசெய்தனர்.

மலாக்கா

மலாக்கா மாநில, தேகேல் பொது அரங்கில் அறிவாசான் தந்தை பெரியார் 139ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வின் ஏற்பாட்டு குழுத் தலைவரும் ம.தி.க மலாக்கா மாநில துணைத் தலைவருமான கு.பீட்டர் தனது தலைமையுரையில், முதல் முறையாக மலாக்கா மாநிலத்தில் பெரியார் பிறந்தநாள் விழா தமது தலைமையில் நடைபெறுவதாக கூறினார். இங்குள்ள தமிழர்கள் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள்,தமிழினத்திற்காக ஆற்றிய பெரும் பணிகளை உணர செய்துவதோடு,நமது குழந்தைகளும் அய்யாவை பற்றி தெரிந்துகொள்ளவே இந்நிகழ்வை இங்கு ஏற்பாடு செய்ததாக தெளிவுபடுத்தினார்.

மலாக்கா பெம்பான் சட்ட மன்ற உறப்பினர் மாண்புமிகு டத்தோ எங் சூன் கூன் அவர்களின் சிறப்பு அதிகாரி புவான் சித்தி சலேகா அவர்கள்,மக்களுக்கா நன்மை செய்த தலைவர்களை நினைவு கூர்ந்து, அவர்கள் ஆற்றிய தன்னலமற்ற பணிகளை இங்குள்ள மக்களும்,குழந்தைகளும் அறிய வேண்டும் என்பதற்காக  இந்நிகழ்வை ஏற்பாடு செய்த கழகத்தினரை வெகுவாக பாராட்டினார்.

மலேசிய திராவிடர் கழகம் தலைமையாக சார்பாக கலந்துக்கொண்ட கழகத்தின் பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம் அவர்கள், உலகத் தலைவர் தந்தை பெரியாரை நம் குழந்தைகளும்,பெற்றோர்களும் அறியும் வகையில் பெரியார் கொள்கைகளை தெளிவுரைத்தார்.கழக தேசிய பொருளாளர் அவர்கள் பெண் உரிமைக்காக போராடிய தந்தை பெரியார் சிறப்புகளை மிகவும் சிறப்பாக விளக்கினார். இவ்விழாவில் பெரியார் உருவபடத்தை வண்ணம் தீட்டும் போட்டியில் மாணவர்கள் கலந்து கொண்டனர். பெரியார் சிறப்புகளும் - கலந்துரையாடல்களும் இந்நிகழ் வுக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

சிலாங்கூர்



ம.தி.க சிலாங்கூர் மாநில இளைஞர்,மகளிர் ஏற்பாட்டில் பெரியார் பிறந்தநாள் விழா,மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் மானமிகு கு.கோபி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சாதி எதிர்ப்பு மற்றும் சீர்திருத்த திருமணங் களை இளைஞர்கள் ஆதறிக்கும் வகையில் சிறப்பு நாடகம் நடந்தேறியது. கழகத்தின் தேசியத் தலைவர்  எப்.காந்தராஜ் அவர்கள் இளைஞரும்,மகளிரும் சாதி வேற்றுமைகளை களைந்து சீர்திருத்த திருமணங்களை ஏற்றுக்கொண்டால் நம் சமுதாயத்தில் சாதி உணர்வுகள் குறைவதற்கு இது ஒரு அடித்தளமாக அமையலாம் என்று தமதுரையில் கூறினார்.

பெரியார் பற்றிய கவிதைகள், பாடல்கள்,கட்டுரைகள் மாணவ-மாணவிகளால் சிறப்பாக இந்நிகழ்வில் படைக்கப் பட்டது.  பெரியார் கொள்கைகள் பரப்புவதற்காகவும், மாநிலத் திற்கு நிதிகள் சேர்ப்பதற்காகவும், பெரியாரியம் நூல் மற்றும் பெரியார் குறுவெட்டை ம.தி.க சிலாங்கூர் மாநிலம் வெளியீடு செய்தது. மலேசியாவில் முதல் முறையாக மூன்று மாநிலங்களில் ஒரே நாளில் தந்தை பெரியார் 139ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் இரண்டு மாநிலங்களில் பெரியார் விழாவை நடத்தவுள்ளதாக கழகத்தின் தேசிய பொதுச்செயலாளர் பொன்.பொன்வாசகம் தெரிவித்துக் கொண்டார்.



-விடுதலை நாளேடு, 13.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக