புதன், 2 டிசம்பர், 2015

மனித குலத்தின் பலகீனமே கடவுள் அயன்ஸ்டின் கடிதம் : ஏலத் தொடக்கம் 30 லட்சம் டாலர்



லாஸ் ஏஞ்செல்ஸ், அக். 9- கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பி விஞ்ஞானி ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் கைப்பட எழுதிய கடிதம் இப்போது ஆன்லைனில் ஏலம் விடப்பட உள்ளது. ஏல விலையின் தொடக்கம் 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1955 இல் அய்ன்ஸ்டீன் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்னர் அவர் ஜெர்மானிய மொழியில் எழுதிய இந்த  கடவுள் கடிதத்தில் மதம், கடவுள், ஓரினப் பண்புகள் ஆகி யவை பற்றிய தனது சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளார்.  வாழ்க்கையைத் தேர்ந்தெடு : புரட்சிக்காக  பைபிள் விடுக்கும் அறைகூவல் என்ற தத்துவஞானி குட்கின்ட் என்பவரின் நூலை அய்ன்ஸ்டீன் படித்த பிறகு, குட்கினுக்கு பிரின்ஸ்டன் பல்கலைக் கழக முகவரி அச்சடிக்கப்பட்ட கடிதத் தாளில் இக்கடிதம்  எழுதப்பட்டது என்று பாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
ஒரு வெளிப்பாடு மற்றும் மனிதகுலத்தின் பலவீனங்கள் என்பதை விட மேலான எது ஒன்றையும்  கடவுள் என்ற சொல் எனக்கு உணர்த்த வில்லை.  மரியாதைக்குரியதே ஆயினும் பைபிள், குழந்தைத் தனமான,  பழங்காலக் கட்டுக் கதைகளின் ஒரு தொகுப் பேயாகும்.  எந்த ஒரு விளக் கத்தாலும், அது எவ்வளவு தான் நுணுக்கமானதாக இருந்தாலும், இந்த எனது கருத்தை மாற்ற இயலாது என்று அய்ன்ஸ்டீன் அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.
1921 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றவர் அய்ன்ஸ்டீன்.
இக்கடிதம் தொடக்க விலையைப் போன்று மூன்று மடங்கு விலைக்கு ஏலம் கேட்கப்படலாம் என்று இந்த ஏலத்தை நடத்தும் லாஸ் ஏஞ்செல்சைச் சேர்ந்த ஏல நிறுவனத் தலைவர் காஜின் கூறுகிறார்.
வெப்பக் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்ட ஒரு அல மாரியில்  வைக்கப்பட்டிருக்கும் இந்தக் கடிதம் கடந்த முறை 40,400 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது. தற்போது அந்தக் கடிதம் அது அனுப்பப் பட்ட உறை, அஞ்சல் தலை, அஞ்சல் சீலுடன் இப்போது விற்பனை செய்யப்பட உள்ளது.
கடவுள் மற்றும் மதம் பற்றிய அவரது தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்தும் அறிவாற்றல் மிகுந்த தணிக்கை செய்யப்படாத அவரது சிந்தனைகளும், கருத்துகளும் இதுவரை வெகு சில மக்களுக்கு மட்டுமே எட்டக்கூடியவையாக இருந்தன என்று காஜின் கூறுகிறார். கடவுள் இருக்கிறாரா - இல்லையா என்ற கருத்தற்ற,  மதத்தினைப் பற்றிய    சிக்கல் நிறைந்த கண்ணோட்டம் கொண்டவர் அவர் என்ற வாதத்துக்கு இக்கடிதம் வலு சேர்க்கிறது என்று அய்ன்ஸ்டீன் பற்றிய  வல்லுநர்கள் நம்புகின்றனர். அமைப்பு ரீதியான மத நம்பிக்கையை நிராகரித்த அவர், பிரபஞ்சத்தில் ஓர் உணர்வு பூர்வமான ஆற்றல் செயல்படுவது பற்றி அடிக்கடி பேசியிருக்கிறார்.

(நன்றி: தி இந்து 7.10.2012)
-விடுதலை,9.10.12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக