பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவலரான தமிழர் தலைவருடன் பெரியார் பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி கிளை) என்ற அமைப்பின் தலைவர் பேரா. டாக்டர் யுர்லிக் நிக்லசும், துணைத் தலைவர் திரு. சுவன்வோர்ட், செயலாளர் டாக்டர் கிளவுடியா வெப்பர் ஆகியோர் உள்ளனர்.
கொலோன் (ஜெர்மனி) ஜூன் 8- பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு கொள்கைகள் தமிழர் தலைவரின் சீரிய முயற்சியால் உலகமயமாக்கலின் தொடர்ச்சியாக தற்போது ஜெர்மனி நாட்டில் கொலோன் நகரில் பெரியார் பன்னாட்டு அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.
பெரியார் பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி) 6.6.2014 (Periyar International Germany Chapter Inc) தொடங் கப்பட்டது.
ஜெர்மனி, கொலோன் மாநகரில் ஜூன் மாதம் 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை இந்திய வாரம் நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தன. பல்வேறு நிகழ்ச்சிகளில், ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக தமிழர் தலைவர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் 3ஆம் தேதி மாலை, பொது மக்களுக்கு திராவிட இயக்கமும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையின் தத்துவமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்தி எதிர்ப்பு இயக்கம்
4ஆம் தேதி கொலோன் பல்கலைக் கழகத்தில் இந்தி எதிர்ப்பு இயக்கம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பவர் பாய்ன்ட் மூலம் ஆய்வுரை நிகழ்த்தினார்.
5ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்தியயியல் மற்றும் தமிழ்த் துறை மாணவர்களுக்கு தந்தை பெரியாரின் தன்மான இயக்கமான திராவிடர் கழக வரலாற்றையும், அதன் தொடர் பணிகள் குறித்தும் மாணவர்களுக்கு வகுப்பும் எடுத்தார்கள்.
இப்படி பல்வேறு நிகழ்வுகளின் மூலம், தந்தை பெரியாரின் பணியினால் தமிழகத்திலும் உலகின் பிற பகுதிகளிலும் அடைந்திருக்கும் மாற்றங்களையும், அதனால் மக்கள் விடுதலை அடைந்த நிலையையும் அறிந்ததன் விளைவாக பெரியாரின் பணிகளை ஜெர்மனியிலும் தொடர வேண்டுகோள் விடுத்தனர்.
பெரியார் பன்னாட்டு அமைப்பு
பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவலரான தமிழர் தலைவர் மற்றும் அதன் இயக்குநர்களின் ஒப்புதலோடு பெரியார் பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி கிளை) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்தக் கிளையின் தலைவராக பேரா. டாக்டர் யுர்லிக் நிக்லசும், துணைத் தலைவராக திரு. சுவன்வோர்ட், செயலாளராக டாக்டர் கிளவுடியா வெப்பரும் நியமிக்கப்பட் டுள்ளார்கள்.
இந்த ஜெர்மானிய அமைப்பானது பெரியார் பன்னாட்டு அமைப்பு (அமெரிக்கா) வின் வழிகாட்டுதலில் அவர்களோடு இணைந்தும் தங்கள் நாட்டில் பெரியார் தத்துவக் கொள்கைகளை அவர் காண விரும்பிய சமுதாயத்தை படைக்க, தன் பணியை செய்யும் என பொறுப்பேற்றுள்ள தலைவர், துணைத் தலைவர் மற்றும் செய லாளர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.
புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகளுக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் சால்வை அணிவித்தும், இயக்கப் புத்தகங் களை வழங்கியும் பாராட்டினார்கள்.
பெரியாரின் ஜெர்மன் பயணம்
இந்நிகழ்வு இயக்க வரலாற்றின் பொன்னேடுகளில் பதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். தந்தை பெரியார் அவர்கள் 1932-இல் ஜெர்மனி பயணம், அதனைத் தொடர்ந்து தமிழர் தலைவர் 2014-இல் கொலோன் பல்கலைக் கழக அழைப்பின் பேரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது.
இவைகளை உற்று நோக் கும்போது மண்டைச் சுரப்பை உலகு தொழுவதும் இதுவே பெரியார் உலக மயமாக்கப்பட வேண்டும் என்ற உன்னத கோட்பாட்டை எடுத்துச் செல்லும் தமிழர் தலைவருக்கும், பெரியார் பெருந் தொண் டர்களுக்கும் ஒரு மிகப் பெரிய வெற்றி என்று சொன்னால் அது மிகையாகாது. வாழ்க பெரியார்! வளர்க அவர் தம் கொள்கை.
பெரியார் பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி கிளை) என்ற அமைப்பின் தலைவராக பேரா. டாக்டர் யுர்லிக் நிக்லசும், துணைத் தலைவராக திரு. சுவன்வோர்ட், செயலாளராக டாக்டர் கிளவுடியா வெப்பரும் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவலரான தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
-விடுதலை,8.6.14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக