புதன், 3 ஜனவரி, 2018

ஜனவரி 5, 6, 7 மூன்று நாள்கள் உலக நாத்திகர் மாநாடு

திராவிடர் கழகம், விஷயவாடா நாத்திகர் மய்யம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் சார்பில்

ஜனவரி 5, 6, 7 மூன்று நாள்கள் உலக நாத்திகர் மாநாடு



சென்னை, டிச.31 திராவிடர் கழகம், விஜயவாடா நாத்திகர் மய்யம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ஜனவரி 5,6,7 ஆகிய மூன்று நாள்கள் உலக நாத்திகர் மாநாடு திருச்சி, தஞ்சாவூர் மற்றும் சிறுகனூர் பெரியார் உலகம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியார் கொள்கைகளை உலக மயமாக்கும் பணிகளில் தம்மை ஒப்படைத்துக்கொண்டு அயராது ஓய்வுஒழிச்சலின்றி பணியாற்றி வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஒப்பற்ற தலைமையில் கட்டுப்பாடான இராணுவமாக செயலாற்றிவரும் கருஞ்சட்டைப் படையினர் திருச்சியில் நடைபெறுகின்ற உலக நாத்திகர் மாநாட்டில்  பங்கேற்றிட அலைகடலென திரள்கிறார்கள்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், பன்னாட் டளவிலும் பகுத்தறிவாளர், மனித நேயர், மனித உரிமை ஆர்வலர், நாத்திகர் பலரும் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

முதல் நாள்

5.1.2018 வெள்ளிக்கிழமை

திருச்சி, கே.சாத்தனூர் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் என்.எஸ்.கே. அரங்கத்தில் 5.1.2018 அன்று காலை 9 மணியளவில் மாநாட்டுக்கு வருகை தருவோருக் கான பதிவு (Registration)  நடைபெறுகிறது.

மாநாடு தொடக்கம்

பன்னாட்டளவில் பேராளர் பெருமளவில் பங்கேற்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த Ôஉலக நாத்திகர் மாநாடுÕ காலை 11 மணியளவில் எழுச்சியுடன் தொடங்குகிறது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து மாநாட்டில் பேராளரிடையே எழுச்சியுரை ஆற்றுகிறார்.  கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்பு ரையாற்று கிறார். பெரியார் பன்னாட்டு மய்யத்தின் பொறுப்பாளர் (அமெரிக்கா) டாக்டர் இலக்குவன்தமிழ் தொடக்க உரை யாற்றுகிறார். ஆந்திரப்பிரதேச மாநிலம், விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநர் டாக்டர் கோ.விஜயம் மாநாட்டின் நோக்கம்பற்றி உரையாற்றுகிறார்.

புத்தகக் காட்சி திறப்பு

பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் பன்னாட்டு மனிதநேய மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் ஆலோசனைக்குழு இயக்குநர் எலிசபெத் ஓ’காசே புத்தகக் கண்காட்சியைத்  திறந்துவைக்கிறார்.

பகுத்தறிவாளர்களின் படத்திறப்பு

பகுத்தறிவு, நாத்திகக் கருத்துகளை துணிவுடன் பேசியும், எழுதியும் வந்த அறிஞர்கள் இந்துத்துவ வன் முறையால் பலியானார்கள். அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் டாக்டர் நரேந்திர தபோல்கர், தோழர் கோவிந்த் பன்சாரே, பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோரின் படத்திறப்பு மற்றும் போற்றுதல் நிகழ்வு நடைபெறுகிறது.

புத்தகங்கள் வெளியீடு

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ஆங்கில நூல்களான Bhagavad Gita - Myth or Mirage 
(பகவத் கீதை கற்பனை அல்லது புரட்டு) மற்றும் March of Atheism (நாத்திகத்தை நோக்கிய நடைப்பயணம்) ஆகிய நூல்களுடன், பேராசிரியர் சுரேந்தரா அஜ்நாத் எழுதிய Compilation of ‘Old Testament of Indian Atheism’- 
இந்திய நாத்திக தொன்மையான கருத்துகளின் தொகுப்பு எனும் ஆங்கில நூல், வரியியல் வல்லுநர் ச.ராசரத்தினம் எழுதிய Essays on Matters which Matter (A Rationalist’s Perception) 
முக்கியத்துவம் மிக்க கட்டுரைக் கோவை (ஒரு பகுத்தறிவாளரின் பார்வையில்) ஆங்கில நூல், தந்தை பெரியார் 1928, மற்றும் 1929ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட ஆங்கில ஏடு Ôரிவோல்ட்Õ இதழ்களின் தொகுப்பு நூலாக Compilation of ‘Revolt’-Published by Periyar in 1928 &1929  ஆகிய நூல்கள் உலக நாத்திகர் மாநாட்டில் வெளியிடப்பட உள்ளன.

மாநாட்டில் உரையாற்றும் சிறப்பு விருந்தினர்கள், அறிஞர் பெருமக்கள்

லண்டன் பன்னாட்டு மனிதநேய மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் தலைமை செயல் அலுவலர் கேரி மெக்கலாண்ட், மேனாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் மற்றும் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.இராசா, மராட்டிய மாநிலம் புனே பகுதியிலிருந்து மகாராட்டிரா அந்தராஷ்ரதா நிர்மூலன் சமிதி அமைப்பின் செயல்தலைவர் அவினாஷ் பாட்டில், பன்னாட்டு நாத்திகர் கூட்டமைப்பின் (அமெரிக்கா) ரஸ்டம் சிங், திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவன(நிகர்நிலை பல்கலைக் கழகம்) இணைவேந்தர் ச.ராசரத்தினம் ஆகியோர் மாநாட் டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். பகுத்தறிவாளர் கழகத் தலைவர் முனைவர் வா.நேரு நன்றி கூறுகிறார்.

மதியம் ஒரு மணி முதல் மதியம் 2 மணி முடிய உணவு இடைவேளையையடுத்து, பிற்பகல் நிகழ்வு தொடங்குகிறது.

பொது அரங்கம்- முதல் அமர்வு

திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் பெரியார் மருந்தியல் கல்லூரி அரங்கில் மதியம் 2 மணி முதல் மதியம் 3.15மணி முடிய முதல் அமர்வு ஆய்வரங்கம் தொடங்குகிறது.  மதியம் 3.15மணி முதல் பிற்பகல் 3.30மணி முடிய தேநீர் இடைவேளையையடுத்து, தொடர்ந்து மதியம் 3.30மணி முதல் மாலை 5மணி முடிய முதல் அமர்வு ஆய்வரங்கம் தொடங்குகிறது.  இரண்டு ஆய்வ ரங்குகளிலும் ஆய்வாளர்கள் ஆய்வுக்கட்டுரைகளை அளித்து கலந்துறவாடுகிறார்கள்.

பொது அரங்கம் முதல் அமர்வில் பஞ்சாப் தர்க்கசீல சங்கத்தின் பல்வீந்தர் பர்னாலா தலைமை வகிக்க, விஜய வாடா நாத்திகர் மய்யம் டாக்டர் கோ.சமரம் ஒருங்கிணைக் கிறார். மகாராட்டிரா அந்தராஷ்ரதா நிர்மூலன் சமிதியின் பொறுப்பாளர் டாக்டர் சுதேஷ் கோதராவ் Ôமனிதத்தை முன்னேற்றுவதற்கான நாத்திகம்Õ எனும் தலைப்பிலும், மும்பை Ôதமிழ் லெமுரியாÕ இதழின் முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் Ôமத அடிப்படைவாதிகளின் பிரச்சினையும், தீர்வும்Õ எனும் தலைப்பிலும், பெரியார் மருத்துவக் குழு மத்தின் இயக்குநர் மருத்துவர் ஆர்.கவுதமன் Ôமருத் துவமும், நாத்திகமும்Õ எனும் தலைப்பிலும், குவைத் நாட்டில் இயங்கிவரும் பெரியார் நூலக பொறுப்பாளர் லதாராணி Ôமதத்தில் அறநெறி பற்றாக்குறைÕ எனும் தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.

பொது அரங்கம் இரண்டாம் அமர்வில் பெரியார் பன்னாட்டு மய்யத்தின் பொறுப்பாளர் (அமெரிக்கா) பேராசிரியர் டாக்டர் லட்சுமண்தமிழ் தலைமை வகிக் கிறார். அய்தராபாத்  மாணவ விகாசா வேதிகா அமைப்பின் பொருளாளர் சாம்பசிவ ராவ் ஒருங்கிணைக்கிறார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியின் மேனாள் பேராசிரியர் சாம் ஜார்ஜ் Ôநாத்திகம்-ஒரு வாழ்க்கை முறைÕ எனும் தலைப்பிலும், திராவிடர் கழகப் பிரச்சார செய லாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி Ôமனிதர்களைவிட பசுக்களே அதிகம் பாதுகாக்கப்படுகின்றனÕ எனும் தலைப்பிலும், மலேசியா, கோலாலம்பூர் மலேசியன் திரா விடர் சங்கப் பொறுப்பாளர் எம்.கோவிந்தசாமி Ôமலா யாவில் (மலேசியா) திராவிட இயக்கம்Õ எனும் தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள். ,

மாலை 5 மணி முதல் மாலை 6 மணி முடிய  உரை யரங்கில், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக  மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் பெ.செகதீசன் அறிமுகவுரையாற்றுகிறார்.

Ôஇந்திய  நாத்திக இயக்க தொன்மை வரலாறுÕ எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  டாக்டர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரை ஆற்றுகிறார். மாலை 6.45 மணியளவில் Ôபெரியார்Õ திரைப்படம் திரையிடப் படுகிறது.

இரண்டாம் நாள்

6.1.2018 சனிக்கிழமை

தஞ்சை  வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவன (நிகர்நிலை பல்கலைக்கழகம்) வளாகத்தில் இரண்டாம் நாள் (6.1.2018) நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

காலை 10 மணி முதல் காலை 11 மணி முடிய நடை பெறுகிறது.  உலக நாத்திகர் மாநாடு - 2018இன் பேராளர்கள் மரக்கன்றுகள் நடும் விழாவில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடுகின்றனர்.

காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி முடிய Ôகுழந் தைகள், மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மை கட்டமைத்தல்Õ எனும் தலைப்பிலான சிறப்பு அமர்வு நடை பெறுகிறது. பேராசிரியர் எஸ் தேவதாஸ் வரவேற்கிறார்.

பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்(நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வேந்தர், தமிழர் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி தலைமையுரை யாற்றுகிறார்.

பெல்ஜியம் பிரசல்ஸ் பன்னாட்டு மனிதநேய மற்றும் நன்னெறி ஒன்றியம் ஆலோசனைக்குழு இயக்குநர் எலிசபெத் ஓ’காசே சிறப்புரையாற்றுகிறார்.

இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் தலைமையில், ஒடிசா பகுத்தறிவாளர் சங்கப் பொறுப்பாளர் பேராசிரியர் தானேஸ்வர சாகு, தலைவர் Ôஅறிவியல், அறிவியல் மனப்பான்மை ஒரு பார்வைÕ எனும் தலைப்பிலும், பகுத்தறிவு ஆசிரியர் அணியைச் சார்ந்த கே.ராஜா கென்னடி Ôகுழந்தைகளிடையே அறிவியல் மனப்பான்மையைக் கட்டமைத்தல்Õ எனும் தலைப்பிலும், மதுரை பகுத்தறிவாளர் பேராசிரியர் டாக்டர் இ.கே.ராமசாமி Ôபெரியாரும், கோராவும்-நாத்திக செம்மல்கள் மற்றும் மனிதநேய இயக்கங்கள்Õ எனும் தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள். பகுத்தறிவாளர் மன்றத் துணைத் தலைவர் வி.கவிநிலா நன்றி கூறுகிறார்.  ,

காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி முடிய தஞ்சாவூர், வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் ஏற்பாட்டில்  இணை அமர்வில் ஆய்வாளர்கள் ஆய்வுகளை அளிக் கிறார்கள்.

மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி முடிய உணவு இடைவேளையையடுத்து மதியம் 2.30 மணி முதல் மாலை 4.00 முடிய பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) வளாகப்பகுதியை மாநாட்டின் பேராளர்கள் பார்வையிடு கிறார்கள்.

திருச்சி பெரியார் மாளிகையில் பொதுக்கூட்டம்

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி முடிய கலை நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றுகிறார். திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி.வீரமணி தலைமையுரையாற்றுகிறார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், லண்டன் பன்னாட்டு மனிதநேய மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் தலைமை செயல் அலுவலர் கேரி மெக்கல்லாண்ட், பெல்ஜியம் பிரசல்ஸ் பன்னாட்டு மனிதநேய மற்றும் நன்னெறி ஒன்றிய ஆலோசனைக்குழு இயக்குநர் எலிசபெத் ஓ’காசே, பன்னாட்டு நாத்திகர் கூட்டமைப்பின் (அமெரிக்கா) ரஸ்டம் சிங், ஆந்திரப்பிரதேச மாநிலம், விஜயவாடா நாத்திகர் மய்ய செயல் இயக்குநர் டாக்டர் கோ.விஜயம் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் ஜி.ஆரோக்கியராஜ் நன்றி கூறுகிறார்.

மூன்றாம் நாள்

7.1.2018 ஞாயிற்றுக்கிழமை

காலை 6.30 மணி முதல் காலை 8 மணி முடிய நாத்திகர் நடைப்பயணம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா திருச்சி, சிறுகனூர் பெரியார் உலகத்தில் நடைபெறுகின்றன.

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி அரங்கில் பொது அரங்கின் மூன்றாம் அமர்வு காலை 9.30 மணி முதல் காலை 11 மணி முடிய  நடைபெறுகிறது. ஒடிசா பகுத்தறி வாளர் சங்கப் பொறுப்பாளர் பேராசிரியர் தானேஸ்வர சாகு தலைமையில் விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் பொறுப்பாளர் விகாஸ் கோரா ஒருங்கிணைக்கிறார். பகுத் தறிவாளர் கழகத் துணைத் தலைவர், கோ.ஒளிவண்ணன் Ôவிமர்சன சிந்தனையும், கல்வியில்  தடையற்ற கேள்வி கேட்பதும்Õ எனும் தலைப்பிலும், புதுமும்பை நாத்திகரும் கல்வியாளருமாகிய சந்த்ரமா மஜும்தார் Ôஆத்திகத்தி லிருந்து நாத்திகத்துக்குÕ எனும் தலைப்பிலும், திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் Ôபெரியாரின் மாபெரும் மக்கள் பகுத்தறிவு இயக்கம்Õ எனும் தலைப்பிலும், திருச்சிராப்பள்ளி ஆய்வாளர் டாக்டர் ஒய்.சிறீனிவாச ராவ் Ôபெரியாரியத்தின் பொருத்தப்பாடுÕ எனும் தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.

மாநாட்டு நிறைவு விழா

உலக நாத்திகர் மாநாட்டின் மூன்றாம் நாள் நிறைவு விழா நிகழ்ச்சிகள் திருச்சிராப்பள்ளி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்திலுள்ள என்.எஸ்.கே. அரங்கில் காலை 11.15 மணி முதல் மதியம் 12.30 மணி முடிய நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசின் திட்டக்குழு மேனாள் துணைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் மு.நாகநாதன், கருநாடகா மாநிலம் பெங்களூரு மூத்த வழக்குரைஞர் டாக்டர் ரவிவர்மக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். பெல்ஜியம் பிரசல்ஸ் பன்னாட்டு மனிதநேய மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் ஆலோசனைக்குழு இயக்குநர் எலிசபெத் ஓ’காசே நிறைவுரையாற்றுகிறார்.

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் உலக நாத்திகர் மாநாட்டின் நிறைவு விழா பேருரையாற்றுகிறார்.

பகுத்தறிவாளர் கழக செயலவைத் தலைவர் தகடூர் தமிழ்செல்வி நன்றி கூறுகிறார்.

பொங்கல் விழா

மதசார்பற்ற அறுவடைத்திருவிழாவான பொங்கல் விழா கொண்டாட்டம் மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி முடிய நடைபெறுகிறது.

உலக நாத்திகர் மாநாட்டையொட்டி www.worldatheistconference.com எனும் இணையதளம் தொடங்கப்பட்டு இயங்கிவருகிறது. மாநாட்டுக்கு வருகை தரும் பேராளர்கள் தங்களை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உலக நாத்திகர் மாநாட்டின் ஏற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொள்ள worldatheistconference@gmail.com 
மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

தொலைபேசிமூலம் தொடர்பு கொள்ள (91) 044 - 26618161, (+91) 94449 05633, (+91) 94861 01676 (+91) 99449 10521 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

திராவிடர் கழகம், பெரியார் திடல், 84/1, ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600 007 என்ற முகவரியில் மாநாடு குறித்த கூடுதல் தகவல்களை நேரிலும் பெறலாம்.

உலக நாத்திக மாநாட்டையொட்டி, ஆங்கிலம் மற்றும் தமிழில் மாணவர்களுக்கான  கட்டுரைப்போட்டி நடத்தப் படுகின்றன. கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரங்கள் உலக நாத்திகர் மாநாட்டில் அறிவிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக