புதன், 2 டிசம்பர், 2015

மனித குலத்தின் பலகீனமே கடவுள் அயன்ஸ்டின் கடிதம் : ஏலத் தொடக்கம் 30 லட்சம் டாலர்



லாஸ் ஏஞ்செல்ஸ், அக். 9- கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பி விஞ்ஞானி ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் கைப்பட எழுதிய கடிதம் இப்போது ஆன்லைனில் ஏலம் விடப்பட உள்ளது. ஏல விலையின் தொடக்கம் 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1955 இல் அய்ன்ஸ்டீன் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்னர் அவர் ஜெர்மானிய மொழியில் எழுதிய இந்த  கடவுள் கடிதத்தில் மதம், கடவுள், ஓரினப் பண்புகள் ஆகி யவை பற்றிய தனது சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளார்.  வாழ்க்கையைத் தேர்ந்தெடு : புரட்சிக்காக  பைபிள் விடுக்கும் அறைகூவல் என்ற தத்துவஞானி குட்கின்ட் என்பவரின் நூலை அய்ன்ஸ்டீன் படித்த பிறகு, குட்கினுக்கு பிரின்ஸ்டன் பல்கலைக் கழக முகவரி அச்சடிக்கப்பட்ட கடிதத் தாளில் இக்கடிதம்  எழுதப்பட்டது என்று பாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
ஒரு வெளிப்பாடு மற்றும் மனிதகுலத்தின் பலவீனங்கள் என்பதை விட மேலான எது ஒன்றையும்  கடவுள் என்ற சொல் எனக்கு உணர்த்த வில்லை.  மரியாதைக்குரியதே ஆயினும் பைபிள், குழந்தைத் தனமான,  பழங்காலக் கட்டுக் கதைகளின் ஒரு தொகுப் பேயாகும்.  எந்த ஒரு விளக் கத்தாலும், அது எவ்வளவு தான் நுணுக்கமானதாக இருந்தாலும், இந்த எனது கருத்தை மாற்ற இயலாது என்று அய்ன்ஸ்டீன் அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.
1921 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றவர் அய்ன்ஸ்டீன்.
இக்கடிதம் தொடக்க விலையைப் போன்று மூன்று மடங்கு விலைக்கு ஏலம் கேட்கப்படலாம் என்று இந்த ஏலத்தை நடத்தும் லாஸ் ஏஞ்செல்சைச் சேர்ந்த ஏல நிறுவனத் தலைவர் காஜின் கூறுகிறார்.
வெப்பக் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்ட ஒரு அல மாரியில்  வைக்கப்பட்டிருக்கும் இந்தக் கடிதம் கடந்த முறை 40,400 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது. தற்போது அந்தக் கடிதம் அது அனுப்பப் பட்ட உறை, அஞ்சல் தலை, அஞ்சல் சீலுடன் இப்போது விற்பனை செய்யப்பட உள்ளது.
கடவுள் மற்றும் மதம் பற்றிய அவரது தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்தும் அறிவாற்றல் மிகுந்த தணிக்கை செய்யப்படாத அவரது சிந்தனைகளும், கருத்துகளும் இதுவரை வெகு சில மக்களுக்கு மட்டுமே எட்டக்கூடியவையாக இருந்தன என்று காஜின் கூறுகிறார். கடவுள் இருக்கிறாரா - இல்லையா என்ற கருத்தற்ற,  மதத்தினைப் பற்றிய    சிக்கல் நிறைந்த கண்ணோட்டம் கொண்டவர் அவர் என்ற வாதத்துக்கு இக்கடிதம் வலு சேர்க்கிறது என்று அய்ன்ஸ்டீன் பற்றிய  வல்லுநர்கள் நம்புகின்றனர். அமைப்பு ரீதியான மத நம்பிக்கையை நிராகரித்த அவர், பிரபஞ்சத்தில் ஓர் உணர்வு பூர்வமான ஆற்றல் செயல்படுவது பற்றி அடிக்கடி பேசியிருக்கிறார்.

(நன்றி: தி இந்து 7.10.2012)
-விடுதலை,9.10.12

திங்கள், 30 நவம்பர், 2015

குழந்தைகளிடம் மதத்தை போதிப்பது சட்ட விரோதமானதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு

பலே, பலே! வரவேற்கத்தக்கது
குழந்தைகளிடம் மதத்தை போதிப்பது சட்ட விரோதமானதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு
கான்பெர்ரா, நவ.18_ ஆஸ்திரேலியாவில் குறிப்பிடத்தக்க முடிவாக பன்னாட்டளவில் முதல் நாடாக ஆஸ்திரேலிய நாட்டில் குழந்தைகளுக்கு மதத்தை கற்பிப்பதை தடை செய்து அறிவித் துள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் தர்ன்புல் இதுகுறித்து தன்னுடைய டிவிட்டர் பதிவில் தகவ லைப் பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு மதத் தைப் போதிப்பது குற்றம் என விரைவில் சட்டம் கொண்டுவரப் பட உள் ளது. இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பவர் ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல். இரண்டு கோடியே 30 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஆஸ்திரேலியாவில் பல மதம் மற்றும் பல கலாச் சார மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் இது பற்றி அவர் கூறுகையில், இனிமேல் நம் குழந்தை களுக்கு ஆபத்தான, காலா வதியான (மதக்) கருத்துக் களை கற்பிக்க, நமது நாட் டைப் பிரிக்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.
இது தனி மனித சுதந் திரத்தையே கேள்விக்குள் ளாக்குவதாக ஒரு தரப்பி லும், மற்றொரு தரப்பில் இதற்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்துள் ளனர். ஆஸ்திரேலியா வின் அரசின் கொள்கை முடிவுகளில் மத ரீதியான கருத்துக்கள் தாக்கம் செலுத்துவதை இது தடுக்கும் என்று அவர் கள் வாதிடுகின்றனர்.
எல்லோரும் படிக்கும் அரசுப் பள்ளி நிறுவனங் களில், அது போன்ற பொதுக் கல்வி நிறுவனங் களில் சிறு குழந்தை களுக்கு மதம் சம்பந்தப் பட்ட பாடங்களைத் தவிர்த்தல் மிக நல்லது தானே என்கிறார்கள் அக் கருத்தை ஆதரிப்பவர்கள்.
-விடுதலை,18.11.15

திங்கள், 16 நவம்பர், 2015

மாமேதை ரஸ்ஸல் மணிமொழிகள்!


நான் யார்?
நான் முரண்பாடு களின் சின்னமாக விளங்கி வருவதாகப் பலர் மதிப்பிடுகிறார்கள். இது ஓரளவு உண்மை தான். என்னை நானே, பல்வேறு சந்தர்ப்பங் களில் ஒரு மிதவாதி யாகவும் சோஷலிஸ் டாகவும் சமாதானவாதி யாகவும் கருதியிருக்கிறேன். என்றாலும், இவை அனைத்துக்கும் மேலாக நான் ஒரு தனி மனித வாதி என்பதையே நான் கூற விரும்புகிறேன்.
பெண்களின் கற்பு
பெண்களின் உரிமைகள் அவர்களது ஒழுக்கம், அல்லது ஆண்களைவிட அவர்கள் மேலான வர்கள் என்பதைச் சார்ந்திருக்கவில்லை. அவர்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதின் பேரில் உள்ளது. ஆனால், அடக்கி வைக்கப்பட்டிருக்கும் இனம் தனது உரிமைகளைக் கோரும் போது பெண்களுக்கு சில தனிப்பட்ட தன்மைகள் உண்டு என்றும், இவை ஒழுக்கம் சம்பந்தப்பட்டவை என்றும் சிலர் வாதாடுகிறார்கள்.
முன்காலத்தில் பெண்களின் கற்பு என்பது நரகத்துக்குப்போக நேரிடும் என்ற பயம், கர்ப்பம் ஏற்பட்டு விடும் என்ற பயம் ஆகியவற்றை கருதியே இருந்தது.
ஆனால் பழமைவாதம் அழிந்துவிட்டதாலும், கருத்தடை சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாலும் இந்த பயம் நீங்கி விட்டது. தற்போதைய பெண்கள் ஆண்களுக்கு என்ன உரிமைகளோ அவை தங்களுக்கும் வேண்டும் என்று கோருகிறார்கள்.
பால் உணர்வும் கடை அடைப்பும்!
ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்ற மத சம்பிரதாயம் காரணமாக கடைகள் மூடப்பட்டு வந்தன. அதுஇப்போது பொருளாதார வாழ்க்கை முறையாகி விட்டது. இதைப் போலவே பால் உணர்வுக்கான பெரும்பாலான சட்டங்களும், சம்பிரதாயங்களும் இருந்துவருகின்றன.
குழந்தை பிறக்கும் ரகசியம்
ஆண் - பெண் உறவுபற்றிய பால் உணர்வு விவகாரங்களை குழந்தைகள் தெரிந்து கொள்ள விடாமல் மறைத்து வைப்பது சரியல்ல.
பாப்பாக்களை பறவை கொண்டுவந்து போட்டது என்றோ, புதரிலிருந்து தோண்டி எடுத்தோம் என்றோ குழந்தைகளுக்கு சொல்லப் படுகிறது. ஆனால் உண்மைகளை மற்ற குழந் தைகளிடம் இருந்து அவை தெரிந்து கொள் கின்றன. இதை ரகசியம்போல் அவை கருதுகின் றன. அசிங்கமானது என்று நினைக்கின்றன.
பெற்றோர்கள் தங்களிடம் பொய் சொல்லு வதாக ஒரு முடிவுக்கு குழந்தைகள் வந்துவிடு கின்றன. பெற்றோர்கள் ஒரு விவகாரத்தில் பொய் சொன்னால் அவை இன்னொரு பிரச்சினையில் பொய் சொல்கின்றன.
பால் உணர்வு விவகாரங்களில் தாங்களும் பொய்சொல்ல வேண்டும் என்ற முடிவுக்கு அவை வந்துவிடுகின்றன.
இதனால் குழந்தைகளின் ஒழுக்கம் சிதைந்து விடுகிறது.
-விடுதலை,8.2.14

ஞாயிறு, 15 நவம்பர், 2015

குவைத்தில் பெரியார்- அண்ணா பிறந்த நாள் விழா

எ
குவைத்தில் தந்தை பெரியார் நூலகம் சார்பில்
பெரியார்- அண்ணா பிறந்த நாள் விழா
குவைத், அக்.12- குவைத்தில் வைத் மன்சால் வா உணவகத்தில் பேராசிரியர்  கல்புர்கி நினைவு அரங்கில்,   கூடல் நகர் மிர்காப்பில், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாள் விழாக்கள் தந்தை பெரியார் நூலகம் சார்பில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
வெற்றியூர் அன்பரசன் கேக் வெட்டி விழாவை தொடங்கி வைக்க,  சத்திரமனை அசன் முஹம்மது  தலைமை  தாங்க, நூலக காப்பாளர் வரவேற்புரையாற்ற, டி.வி.எஸ். நிர்வாகி  அலாவுதீன்  முன்னிலை   வகித்து  தந்தை பெரியார், அறிஞர் அண்ணா தொண்டு, பணி குறித்து உரையாற்றினார்.
மிசால் சித்தார்த்தன், டாக்டர் அன்வர்பாஷா, கவிஞர் சாதிக், தஞ்சை  பாருக் மகராஜ் (தமுமுக மண்டலத் தலைவர்), பந்தல்குடி  சம்சுதின் (தமுமுக மண்டலச் செயலாளர்),  ‘இன்பதமிழ்’ மாத இதழ் ஆசிரியர்  அருவிகவி, அனந்த ரவி,  அறிவழகன் (விசிக),  முனைவர் விஞ்ஞானி குமார், தமிழோசை கவிஞர்  மன்றம் மற்றும் தமிழில் அறிஞர்கள் பெரியார், அண்ணா ஆகியோருக்குப்  புகழாரம் சூட்டி உரையாற்றினர்.
நூலகக் காப்பாளர்  நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு  பெற்றது. இத்தகவலை நூலகக் காப்பாளர்  ச.செல்லபெருமாள் தெரிவித்தார்.
-விடுதலை,9.10.15

சுயமரியாதை இயக்கத்தின் நீதி வாக்கியங்கள்!


1) அறிவைக் கெடுப்பது ஆத்திக மதமே.
ஆலயம் தன்னை அப்புறப் படுத்து.
இந்து மதத்தால் இடுக்கண் விளையும்.
ஈசன் என்பது மோசம் செய்வது.
உண்மைத் தெய்வம் உலகுயிராகும்.
ஊக்கம் என்பது உயிரினும் பெரிது.
என்றும் மக்களை ஒன்றாய்க் கருது.
ஏழை மக்களை ஏறிட்டு நோக்கு.
அய்யம் தெளிந்து செய்வன செய்க.
ஒற்றுமை இருப்பின் உலகு செழிக்கும்.
ஓதியுணர்ந்து நீதியைக் கைக்கொள்
அவ்வை வாக்கிலும் ஆராய்ந்து செய்க.

2) கல்லுத் தெய்வம் பொல்லாங்கு செய்யும்.
காசை வீணாய்க் கரியாக்காதே.
கிழிந்த பஞ்சாங்கம் ஒழிந்தால் நன்று.
கீழ்மைக் குணத்தை வாழ்விலகற்று.
குற்றம் களைவர் கற்றுணர்ந்தவர்கள்
கூற்றுவர் நமக்குக் கொடும் பார்ப்பனரே.
கெதியிழந்தாலும் மதியிழக்காதே.
கேள்வி ஞானம் வாழ்வில் நல்லது.
கைம்பெண் துயரம் கடிதில கற்று.
கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளு.
கோவில் நாட்டைக் கேவல மாக்கும்.

3)    சமத்துவம் நிறைந்தால் சமூகம் முன்னேறும்.
சிக்கன வாழ்க்கை கைக்கொள்வாயே
சீற்றம் ஒழிந்தால் ஏற்ற முறலாம்.
சுயமரியாதையே சுதந்திர வாழ்வு.
சூது நிறைந்தது வேதமென்றறிந்துகொள்.
செத்தவருக்குத் திதி கொடுக்காதே.
சேத்திரமென்று செலவு செய்யாதே.
சொர்க்கம் என்பது துட்டுப் பறிப்பதே,
சோதிடமகற்றின் நீதிடம் பெறலாம்.

4) தண்ணீர் யார்க்கும் தரணியில் சொந்தம்.
தாழ்ந்தவரென்று ஜாதியிலில்லை.
திருவிழா, மனிதரைத் தெருவில் விடுவதே
தீர்த்தமென்று நீ திரிந் தலையாதே.
துக்கமென்பதை இக்கணம் அகற்று.
தூய மனத்தால் தீயவை அகற்று.
தெய்வத்தை நினைத்து உய்வது கெடுதி.
- குடியரசு (30.3.1930)
விடுதலை,5.10.13

வெள்ளி, 13 நவம்பர், 2015

டார்வினின் கடிதம் ரூ.1.3 கோடிக்கு விற்பனை!


பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் சார்லஸ் டார்வின் எழுதிய கடிதம், அமெரிக்காவில் நடை பெற்ற ஏலத்தில் 1.97 லட் சம் டாலர்களுக்கு (சுமார் ரூ.1.3 கோடி) விற்பனை யானது. நியூயார்க் நகரி லுள்ள ஏல மய்யத்தில் அந்தக் கடிதம் ஏலத்துக்கு வரும்போது, அது 90,000 டாலர்களுக்கு விற்பனை யாகும் என எதிர்பார்க்கப் பட்டது.
எனினும், எதிர் பார்த்ததைவிட இரு மடங் குக்கும் அதிக விலையில் அந்தக் கடிதம் விற்பனை யானது. 1880-ஆம் ஆண்டு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், பைபிள் புத்த கத்தை தாம் புனித நூலா கக் கருதவில்லை எனவும், இயேசு கிறிஸ்துவை கட வுளின் குழந்தை என நம் பவில்லை எனவும் டார் வின் குறிப்பிட்டுள்ளார்.
மத நம்பிக்கையற்ற டார்வின், மத நம்பிக்கை கொண்ட தனது நண்பர் கள், உறவினர்களின் உணர் வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அது குறித்து வெளிப்படையாகப் பேசு வதைத் தவிர்த்து வந்தார். இந்த நிலையில், மதம் குறித்து தனது கருத்தைத் தெரிவிக்குமாறு டார்வி னின் நண்பர் மெக்டெர் மட் என்பவர் அவருக்கு கடிதம் எழுதினார்.
அது குறித்து ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னால் அதனை யாருக்கும் தெரிவிக்காமல் இருப்பதாகவும் மெக்டெர் மட் வாக்குறுதி அளித்தார். இதையடுத்து, பைபிள் மீதும், இயேசு கிறிஸ்து மீதும் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை கடிதம் மூலம் டார்வின் தெளிவு படுத்தினார்.
மெக்டெர் மட்டும் அந்தக் கடிதத்தை யாரிடமும் காட்டாமல் தனது வாக்குறுதியைக் காப்பாற்றினார். 100 ஆண்டுகள் கழித்து அந்தக் கடிதம் குறித்து வெளியுல குக்குத் தெரிய வந்தது.
-விடுதலை,25.9.15

அமெரிக்காவில்அய்ந்தாவது ஊரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா



தந்தை பெரியார் 137ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கலிபோர்னியா, வாசிங்டன், வர்ஜினியா, இலினாஸ் (சிகாகோ) கனடா ஆகிய இடங்களில் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் இப்போது கனெக்டிகட் மாநிலம் எலிங்டன் நகரில் கருத்துக் களஞ்சியமாக நடைபெற்றுள்ளது.
தந்தை பெரியார் அவர்களது 137 வது பிறந்த நாள் விழா அமெரிக்க கனெக்டிகட் மாநிலத்தில் எலிங்டன் நகரில் நூலகத்தில் அமெரிக்க மனித நேய அமைப்பால் கொண்டாடப்பட்டது.
இது ஒரு கருத்துப் பரிமாற்ற நிகழ்வாகக் கொண்டாடப்பட்டது. அதில் சில கருத்துக்கள் மனம் நிறைந்த மாட்சியாக இருந்தது.
தோழர் நாச்சிமுத்து சாக்ரட்டீசு வரவேற்புரை ஆற்றி அமெரிக்காவில் பெரியார் இயக்க வளர்ச்சி பற்றிப் பேசினார்.
பெரியாரின் கருத்துக் களம்!
முதலாவதாகப் பெட்சி எனும் இளைய பெண்மணி பெரியாரின் பெண்ணுரிமை கருத் துகள் இன்னும் முன்னேற்றமடைய வேண்டும். அதைப் பெண்கள் முன்னெடுக்க வேண்டும் என்று சொன்னார். அன்பு அவர்கள் பெரியாரின் கருத்துக் களம் ஆணிவேரைக் குறி வைத்தது.அதுதான் வெற்றிக்கு அடிப்படை என்றார். புரட்சிக் கவிஞரின் தொண்டு செய்து பழுத்த பழம் பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் ஆழமான பொருளுடையது என்றார். அஜய்குமார்  பெரி யாரினால் அவர் அனுபவிக்கும் தொல்லைகள் பற்றி நகைச்சுவையாகச்  சொன்னார். தேவதாசி முறை ஒழிந்ததால் அவர் குழந்தைகளை நாட்டிய வகுப்பிற்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. பெண்ணுரிமை என்பதால் இணையரை மரியாதை யுடன்  நடத்த வேண்டியுள்ளது. வட நாட்டார், மற்ற மாநிலங்கள் போல தனது சாதிப் பெயரை போட முடியவில்லை, வெட்கமாக இருக்கின்றது என்றார். திண்ணை இணைய இதழ் நடத்தும் தோழர் ராஜாராம் விதை விதைத்து வளர்ப்பவன் பழம் தின்பதில்லை. ஆனால் பழம் தின்பவனோ நன்றி இல்லா விட்டாலும் குறையாவது சொல் லாமல் தின்கின்றானா? பெரியாரைக் குறை கூறுவோர் இன்று பழம் தரும் மரத்தின் மீதே கல் வீசுகின்றனர். அறிவாளிகள் என்று சொல்லிக் கொள்வோர் எல்லோரும் அறிவாளிகள் அல்லர். பெரியார் போல அனுபவத்தில் அறிவு படைத்த வர்களே மதிக்கத் தக்க அறிவாளிகள் என்றார். முன்னுக்குப் பின் முரண் என்கின்றார்கள். அவர் அனைத் திற்கும் நன்றாக விளக்கமளித்துள்ளார். அதைப் படிக்காமல் அந்தக் காலத்தைப் போலவே சூனா மாநா என்ற மாதிரியில் வெறுப்பூட்டப் பார்க்கின்றனர் என்றார்.
பெரியார் அம்பேத்கர் உறவு!
நாஞ்சில் நாட்டுத் தோழர் லாரன்சு பல பக்தகோடி இளைஞர்களை மென்மையாகப் பேசி மாற்றியுள்ளவர். மாட்டுக்கறி அரசியல் அதன் அடிப்படை பற்றி நன்கு பேசினார். போலித் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் பற்றி செல்வராஜ் முருகைய்யன் பேசி பெரியார் அம்பேத்கர் உறவினை எடுத்துரைத்தார்.
அய்யா இமயவரம்பனின் உறவினர் ராசேந் திரன்  அவர்கள் அவர் குடந்தையில் படித்த போது குறைந்த எண்ணிக்கையில் உள்ள பார்ப்பனர்களுக்குக் குடிக்க ஒரு தண்ணீர்ப் பானையும் நிறைய எண்ணிக்கையில் வரிசையில் நின்று கொண்டிருக்கும் படி பெரும்பான்மையி னருக்கு ஒரு தண்ணீர்ப் பானையும் வைத்திருந் ததை எடுத்துச் சொன்னார். அவர் அன்று படித்த உயிர் வேதியியல் பார்ப்பனர் கூடாரமாகவும், இருந்த நிலையில் தாம் முன்னணியில் விளங்கு வதற்குக் காரணமே. தந்தை பெரியார் கொடுத்த தன்னம்பிக்கைதான் என்றுரைத்தார்.
இன்றும் நாம் யாரையும் எதிரிகளாகக் கருதவில்லை; ஆனால் அவர்கள் அந்த எதிரியான எண்ணங்களை விட்டொழிக்க மறுப்பது தான் நம்மை அந்த எண்ணங்களுக்கு எதிரிகளாக்கிப் போராட வைக்கின்றது என்றார். பிரபு ராமகிருட்டிணன் கோவில் - பாவம் செய்தவர்கள் புண்ணியம் தேடி அலையும் இடமாகி விட்டது. அங்கே நல்லவர்கள் இருக்கின்றார்களா என்பதே பெரிய கேள்வியாக இருக்கின்றது என்றார். இளைஞர் கணேசன் பெரியாரைப் பற்றி அறிந்து கொள்ளாமல் சென்னையில் வளர்ந்து விட்டேன். அது போல நிறைய இளைஞர்கள் உள்ளனர். இப்போதுதான் படித்து அறிந்து கொள்கின்றேன். இவ்வளவு பெரிய தலைவரை எப்படி  மூடி மறைத்தனர்? அவருக்குள்ள மரியாதையை அனைவரும் நினைத்துக் கொண்டாட வழி வகுக்க வேண்டும் என்றார். சாம்ராஜ் அவர்கள் பெரியாரின் சிக்கனம் பற்றிப் பேசினார். தர்மபுரி தோழர் விநோத்குமார் அவர் அப்பாவிடமிருந்து எப்படி மருத்துவக் கல்லூரியே பார்ப்பனக் கூடாரமாக இருந்தது என்பது பற்றி அறிந்து அதிர்ச்சியுற்றேன் என்றும், இன்றைய நிலைமைக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் என்றார்.
இளைய தலைமுறையைச் சேர்ந்த திருமதி வர்ஷா நாகர்கோவில்காரர். நம்பூதிரிகளின் அநியாயங்களை நேரில் பார்த்தவர். கோவிலில் அவர்கள் தூக்கையில் தூக்கி எறிவதை அம்மா விடம் கூறி வாங்க மறுத்ததில் ஆரம்பித்தது அவரது சுய மரியாதைச் சிந்தனைகள். இன்றும் நடை முறையில் உள்ள இழுக்குகளை எடுத்துச் சொல்லி எதிர்க்க வேண்டும் என்றார். பெரியாரின் சிக்கனம் ஒவ்வொருவராலும் கடை பிடிக்கப்பட வேண்டும் என்றார்.
போராட்டமே வாழ்க்கை!
தோழர் கார்த்திகேயன் பிரபு திராவிட இயக்கங்கள் தேர்தல் அரசியலால் எவ்வளவு கொள்கைகள் இழப்பிற்கு ஆளாகி உள்ளனர்.இன்று எவ்வாறு அரசியல் சீரழிந்துள்ளது, இப்போது புரிகின்றது - பெரியாரின் பணி. போராட்டம், போராட்டம், போராட்டமே வாழ்க்கை என்பது. திராவிடர் கழகம் என்றும் தேவை என்று கூறினார்.
மருத்துவர் சரோஜா இளங்கோவன் எப்படி அவரது வகுப்புப் பார்ப்பனப்  பெண் உனக்கெல்லாம் படிப்பு வராதடி என்று சொன்னதே பெரிய உந்துகோல் ஆகிவிட்டது. இன்றும் பார்ப்பனீயம் டில்லி பாம்நோலி பெரியார் மாளிகையை இடித்தது, உடல் துடித்தது என்றும்,இன்றும் நமக்கு உண்ர்வு வேண்டும், கோவிலுக் குப் போவதால் ஏதாவது பயனுண்டா என்று உணர வேண்டும் என்றார்.
உண்மை, பெரியார் பிஞ்சு இதழ்களைக் காண்பித்து அதிலிருந்து படித்துக் காட்டினார். அனைவரையும் விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு இதழ்களைப் படிக்கச் சொன்னார்.
தாலி பற்றிய சூடான விவாதம்
நண்பர் கார்த்திக் தெய்வீகராசன் தொகுத்து வழங்கி பங்கேற்றார். தாலி பற்றிய சூடான விவாதம் கிளம்பியது. அதைப் பற்றி விவாதிக்க இருந்த தொலைக் காட்சி நிறுவனத்தை அடித்ததால் தான் அந்தப் பிரச்சினையே உருவானது. யாருங் கேட்காததால் திராவிடர் கழகம் கேட்டு பின்னர் நிகழ்வுகள் நடந்தன். அது போலவே மாட்டிறைச்சிப் பிரச்சினை. இது மாதிரி இந்து மத வெறியர்களின் கொட்டம் அடக்கப் பட வேண்டும் என்று பலரும் பேசினர். விவாதங்களை சோம.இளங் கோவன் நடத்தினார். இப்போது என்ன செய்யப் படுகின்றது என்பதற்குப் பெரியார் ஆயிரம் வினா விடை மாநிலமெங்கும் லட்சக்கணக்கில் இளைய தலைமுறை பங்கேற்பது, 360க்கும் மேல் தொடர்ந்து திராவிடர் கழக நிகழ்ச்சிகள் நாடெங்கும்  நடப்பது, மானமிகு ஆசிரியர் வீரமணி பெயரில் பெரியார் பன்னாட்டு மய்யம் சமூக நீதி விருது நிகழ்ச்சி நடத்தி உலகெங்கும் பெரியாரியலைப் பரப்புவது, இணையத் தில், முக்கியமாக முகநூலில் நமது இளை யோர் செய்யும் பணி பாராட்டத்தக்கது என்றும், 2016 ஜூலையில்  ஜெர்மனி கொலோன் பல்கலைக் கழகத்தில்  மாநாடு நடக்கும் என்று எடுத்துரைத்தார்.
நமது இயக்க நூல்களை மக்கள் வாங்கிச் சென்றனர்.
இளைய தலைமுறை பெரியாரை அறிந்து கொள்ளும் துடிப்புடன் பங்கேற் றது மிக்க மன நிறைவாக இருந்தது மாட்சி தந்தது.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு.
-vsodlnr,19.10.15