திங்கள், 30 ஜூலை, 2018

சந்திரகிரகணம் குறித்து மக்களின் மூடநம்பிக்கை, அச்சங்களை தவிடு பொடியாக்குவது பகுத்தறிவாளர் கழகமே!





சென்னை, ஜூலை 28- சந்திர கிரகணம் குறித்த அறிவியல் விளக்கங்கள் மற்றும் சந்திர கிரகணம் குறித்த மூடநம் பிக்கைகள் குறித்த புரிந்துணர்வுக்கான நிகழ்வு பகுத்தறி வாளர் கழகம் சார்பில் நேற்று மாலை (27.7.2018) சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் ‘பூமி, நிலா சுற்றுவதை பார்க்கலாம் வாங்க’ எனும் தலைப்பில் நடைபெற்றது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பு ரையாற்றினார். புராணங்களுக்கும், அறிவியலுக்கும் உள்ள முரண்பாடுகளை விளக்கி உரையாற்றினார். மக் களின் மூடநம்பிக்கைகளை, அறியாமையை மூலதன மாக்கும் பிற்போக்கான மதவாதிகளின் முகமூடியை தகர்க்கும் வண்ணம் அறிவியல் வகுப்பாக விளக்க உரையாற்றினார். கிரகணம் என்று மூடநம்பிக்கைகள் பயத்தை உருவாக்குவது முட்டாள்தனமானது என்று தந்தை பெரியார் பேசியுள்ளார். திராவிடர் கழகம்தான் இதுபோன்ற மூடநம்பிக்கைகளை அவ்வப்போது முறி யடித்து வருகிறது. பகுத்தறிவாளர்கழகம் ஏற்பாட்டில் ஏராளமானவர்கள் பங்கேற்றுள்ளனர். இது பாராட்டுக் குரியது என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற் றோர், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் உள்பட பலரும் பெரிதும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மாலை தொடங்கிய நிகழ்வு நள்ளிரவைக் கடந்து அதிகாலை வரை தொடர்ந் தது.

திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன் தலைமையில் பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் அ.தா.சண்முகசுந்தரம் வரவேற்றார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார்.

கும்பகோணம் மாணவர் கழக மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த தோழர்களைப் பாராட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் கும்பகோணத்திலிருந்து காணொலி மூலமாக கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர் கள் சூரியன், பூமி, நிலவு அறிவியல் விளையாட்டுகள் ஒநிகழ்வைத் தொடங்கிவைத்து உரையாற்றினார்.



அறிவியலாளர்கள்  படத்திறப்பு, விண்வெளி அறி வியல் திரையிடல், பாராட்டரங்கம், இசையரங்கம், நிலாச்சோறு, தொலைநோக்கி மூலம் பூமியின் நிழல், நிலவில் படர்ந்து விலகுவதையும் மற்றும் செவ்வாய், வியாழன், சனி ஆகிய கோள்களைக் காணுதல் நிகழ்ச்சி கள் அடுத்தடுத்து களைகட்டின.

அறிவியல் ஆர்வலர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து பாராட்டி, நிகழ்வில் சிறப்புரையாற்றினார்.

டைகோ பிராகே, நிக்கோலஸ் கோபர்நிகஸ், புரூனோ, அய்சக் நியூட்டன், எரடோஸ்தனிஸ், கலி லியோ ஆகிய அறிவியலாளர்களின் படங்கள் திறந்து வைக்கப்பட்டன. அறிவியலாளர்களின் அரும்பெரும் பணிகள்குறித்து விளக்கப்பட்டது-.

ராசிபலன், மூடநம்பிக்கைஒழிப்புக் கருத்தரங்கத்தை பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் இரா.தமிழ்செல்வன் தொடங்கிவைத்தார். 12இராசிகள், 27 நட்சத்திரங்கள், திதிகள், நேரம், காலம், ஏழரைச்சனி,  மண்டலம், 108 தேங்காய¢, 16ஆம் நாள் காரியம் ஆகி யவை குறித்த அறிவியல் விளக்க ஒலி,ஒளிக் காட்சிகளை திரையிட்டு, பூமி நிலா சுழற்சி பெயர்ச்சிப் பேரவை அமைப்பாளர் பெ.செந்தமிழ்ச்செல்வன் விளக்க உரை யாற்றினார்.

திரைத்துறை கலைஞர் செ.கனகா, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் கோவி.கோபால், மா.ஆறுமுகம், மு.இரா.மாணிக்கம், சிறீ.அருள்செல்வன், வானவிய லாளர்கள் குழுமம் அ.த.அரசு, முனைவர் இரா.சம்பத் குமார்,  மா.ஆறுமுகம், இராமு, உடுமலை வடிவேல், ஆ.செ.வசந்தன், மு.கவுதம் உள்பட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

ப.முத்தையன், அம்பேத்கர் ரவி, தாமோதரன், மா. குணசேகரன், சு.மோகன்ராசு, மாலா பாண்டியன் ஆனந்தி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டப்பெற்றனர்.

‘காதல்பூமி’ எனும் தலைப்பில் பாவலர் கீர்த்தி மற்றும் பாடகர்கள் இசைநிகழ்ச்சிகளை வழங்கினார்கள்.



- விடுதலை நாளேடு 28.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக