சென்னை, ஜூலை 2 பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் 18.6.2018 அன்று மாலை 3.15 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்விற்கு திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் தலைமை தாங்கினார். மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு கூட்டத்தின் நோக்கம் பற்றியும், கலந்து கொண்டுள்ள தோழர் தோழியர்களின் கருத்துக்களை அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் கூறி கூட்டத்தினை தொடங்கிவைத்தார்.
கூட்டத்திற்கு தலைமை ஏற்ற கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் என்னும் அமைப்பு ஏற்கெனவே இருந்ததையும், பல்வேறு செயல்பாடுகளை அந்த அமைப்பு ஆற்றியதையும், மதுரையில் மறைந்த பேரா.பு.இராசதுரை அவர்கள் தலைவராக இருந்தபொழுது பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மாநில மாநாடு நடைபெற்ற தையும் குறிப்பிட்டார். முதலில் நமது தோழர்களை வாசகர் கடிதங்கள் எழுதச் சொல்லவேண்டும். அப்புறம் ஒவ்வொரு பக்கத்திற்கு தங்கள் கருத்துக்களை எழுதச்சொல்லவேண்டும். இவை பத் திரிகைகளில் வெளியானால் தோழர்க ளுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படும். தொடர்ந்து எழுத ஆரம்பிப்பார்கள். எழுத்தாளர்களை ஒன்றிணைக்கவேண் டும். பெரியார் இப்போது எங்கும் பரவி இருக்கின்றார். பெரியாரின் கருத்து களுக்கான தேவை இன்று மிகப்பெரிய அளவில் இருக்கிறது. எனக்குறிப்பிட்டு தனது அனுபவங்கள், தான் எழுத ஆரம் பித்தது எப்படி என்பதையெல்லாம் குறிப்பிட்டு மிக விரிவான ஆக்கபூர்வ மான கருத்துக்கள் அடங்கிய உரையினை அளித்தார்கள். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணைத்தலைவர் எழுத்தாளர் கோ.ஒளிவண்ணன் அவர்கள் , இன்றைய காலகட்டத்தில் நாம் எவ்வாறெல்லாம் செயல்படலாம் என்பதனை விரிவாக எடுத்துக்கூறியதோடு ஆங்கிலத்தில் எழுதுபவர்கள், மற்ற மொழிகளில் எழுதுபவர்கள் தேவை இன்றைக்கு இருக்கின்றது, புத்தகம் எழுதுபவர்களை ஊக்குவிக்க வேண்டும், இது ஒரு ஆரம்பம்தான், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒரு சரியான வழிகாட்டுதலை நமக்கு அளித்திருக்கின்றார்கள். கவிஞர் அவர்கள் பல செய்திகளை இங்கு எடுத்துரைத்தார்கள். மிக விரிவான திட்டங்களோடு நாம் செயல்படுவோம் எனக்குறிப்பிட்டார்.
தொடர்ந்து ஆவடி மாவட்ட கழக அமைப்பாளர் உடுமலை வடிவேல் 'இந்தக் கூட்டம் ஒரு ஆலமரத்திற்கு ஊன்றும் விதை போன்று தோன்றுகிறது என்றும் இன்னும் சில ஆண்டுகளில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் தனது கண்முன்னால் இப்போதே தோன்றுகிறது 'என்றும் குறிப்பிட்டு தனது எழுத்து அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். பேஸ்புக்கில் வந்த ஒரு கவிதை அரங்கம் தன்னை எப்படி ஈர்த்தது என்பதையும் அதனுடைய அனுபவங்களையும் பெரி யார் திடல் கலை பகிர்ந்துகொண்டார். வழக்குரைஞர் பா.மணியம்மை தான் ஒரு பேச்சாளர் என்ற நிலையில் இருந் தாலும் எழுத்தாளர் என்னும் நிலைக்கு உயர இந்தக்கூட்டம் நம்பிக்கை தரு கின்றது என்றார்.எழுத்தாளர் ந.தேன் மொழி அவர்கள் குடியாத்தம் நூலகத்தின் மாதாந்திரக் கூட்டம் பற்றியும் அதில் நடைபெறும் நூல் திறனாய்வு பற்றியும் குறிப்பிட்டார். எழுதுவதில் தனக்கு இருக்கும் ஈடுபாட்டையும் ,பெரியார் அரங்கம் போன்ற நிகழ்வையும் குறிப் பிட்டு விளைச்சலை எதிர்பார்ப்போம் என்றார்.
குறும்படங்கள் எடுக்க பயிற்சி
அன்புமதி குணசேகரன் அவர்கள், சிறுகுழந்தைகளை, பிள்ளைகளை ஈர்க் கும் விசயங்களைக் கண்டுபிடிக்கவேண் டும். பாட்டு & வீடியோ மூலம் எப்படி குழந்தைகள் ஈர்க்கப்படுகின்றார்கள் என் பதனைக் குறிப்பிட்டார். நாம் சின்னச் சின்ன குறும்படங்களை குழந்தைகளுக் காக உண்டாக்க வேண்டும். பழகுமுகாம் போன்றவைகளில் பிள்ளைகளை குறும் படம் எடுக்க பயிற்சிகொடுக்க வேண் டும். கதை சொல்லல் என்னும் கலையை நாம் ஊக்குவித்து ,அவர்களின் தனித் திறனை கண்டறிய வேண்டும், ஹிக் கிம்பாதம்ஸ் போன்ற புத்தகக்கடைகள் புதுமாதிரியான வழிமுறைகளைக் கையாளுகிறார்கள் எனக்குறிப்பிட்டார். மயிலாடுதுறை மாவட்டத்தின் திராவிடர் கழகத்தலைவர், கி.தளபதிராஜ், தூத் துக்குடி சு.காசி, சொ.நே.அன்புமணி, செந்துறை சா.இராசேந்திரன் ஆகியோர் தங்கள் கருத்துக்களை எடுத்துவைத்தனர். திராவிடர் கழக மாநில அமைப்புச் செய லாளர் மதுரை வே.செல்வம்- முதலில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் அமைப் பைக் கட்டவேண்டும். திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர் களைத் தொடர்புகொண்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள எழுத்தாளர்களை அடையாளம் காணவேண்டும் என்றார். திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் தர்மபுரி ஊமை.ஜெயராமன், கலை இலக்கிய இரவுகள் நடத்த வேண்டும். முக நூலில் எழுதும் நமது தோழர்களையே அழைத்து எழுத்தாளர் என்னும் அங்கீகாரத்தைக் கொடுத்து எழுதச்செய்ய வேண்டும் .ஆண்டிற்கு ஒருமுறை மிகப்பெரிய நிகழ்வாக நடத்தவேண்டும் எனக்குறிப்பிட்டார். மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரசு பெரியார் தனது உரையில், நாம் புதிய படைப்பாளிகளை எப்படி ஊக்கப்படுத்தலாம்? என்பதனை யோசிக்க வேண்டும், புத்தகமாக்கும் முயற்சிக்கு உறுதுணை செய்கின்றோம், இன்னும் செய்வோம், மண்டலப் பொறுப்பாளர்களை மட்டும் போட்டுக் கூட ஆட்களை அடையாளம் காணலாம். சிறுகதை எழுத பயிற்சி முகாம் நடத் தலாம். என்பனவற்றை குறிப்பிட்டுக் கருத்துரைத்தார்.
இணையத்தில் விழிப்புணர்வு
ப.க., மாநிலப்பொதுச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், மாவட்டந்தோறும் அமைப்பாளர்கள் போடவேண்டும். உண்மையுடன் இணைந்து கதை, கட் டுரைப்போட்டிகளை மாவட்டந்தோறும் பகுத்தறிவாளர் கழகத்தோடு இணைந்து ஏற்பாடு செய்யலாம். இலக்கிய அமைப் புகளில் உள்ளவர்களை அடையாளம் காணலாம். விருதுகள் வழங்கலாம்" எனக்குறிப்பிட்டார்.
மாநில மகளிர் அணி மகளிர் பாசறை அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி "மாநாடுகள் மாவட்டந்தோறும் நடத்த லாம். கலை இலக்கிய மாநாடாக அதனை நடத்தலாம். அதற்கு மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க வேண்
டும்" எனக்குறிப்பிட்டார்.
பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் தஞ்சை மா.அழகிரிசாமி "இணையத்தில் விழிப்புணர்வு ஏற் படுத்த வேண்டும். கவியரங்கங்கள் நடத்தலாம். மாவட்ட அளவில் அமைப் பாளர்களை நியமிக்கவேண்டும். எழுத்து ஈர்ப்பு கொடுக்கக்கூடியது. பயிற்சி கொடுக்கவேண்டும் "எனக் குறிப்பிட்டார்.
நிறைவாக பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு, ஏறத்தாழ 3 மணி நேரம் இந்தக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற் றுள்ளது. ஆக்கபூர்வமான பல கருத்துகள் கிடைக்கப்பெற்றோம். இதனை செயல் படுத்த அனைவரும் உறுதி ஏற்போம் என்று குறிப்பிட்டார்.
தர்மபுரி மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற அமைப்பாளராக பாவலர் பெரு.முல்லையரசு, பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற அமைப்பாளராக முனைவர். தங்க பிரகாசம் ஆகியோர் கூட்டத்தில் அறி விக்கப்பட்டனர்.
- விடுதலை நாளேடு, 2.7.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக