சனி, 28 ஜூலை, 2018

சுடுகாட்டிலேயே திருமண நாள் கொண்டாடிய  பகுத்தறிவாளர்கள்



கருநாடக மாநிலம் கலபுராகி மாவட்டத்தில் நந்திகூர் கிராமத்தில் மூடநம்பிக் கைகளை ஒழிக்கின்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக அனிதா, பவன்குமார் வல கேரி இணையர் சுடுகாட்டில் தங்களின் 18ஆம் திருமண நாளைக் கொண்டாடி னார்கள்.

பவன்குமார் வலகேரி சமூகப்பணிகளில் அதிகம் நாட்டம்கொண்டு சமூக அக்கறை யுடன் செயல்பட்டுவருபவர் ஆவார். அவர் வாழ்விணையர் அனிதாவும் அவருடன் இணைந்து சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும், அவர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராகவும் பணியாற்றிவருகிறார்.

சமுதாயத்தில் புரையோடிப்போய் இருக்கின்ற மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மக்களிடையே விழிப்பை ஏற்படுத்தி வரும் அனிதா மற்றும் அவர் கணவர் பவன்குமார் வலகேரி இணையர் இருவரும் தங்களின் 18ஆம் திருமண நாளில் மூடநம்பிக்கை ஒழிப்பை செயல்முறையில்  நடைமுறைப் படுத்த விரும்பினார்கள்.



சுடுகாட்டில் மணவிழாக் கொண்டாட்டம்


அதன்படி, தங்கள் திருமண நாளில் நந்திகூர் கிராமத்திலுள்ள சுடுகாட்டுக்கு உறவினர்கள், நண்பர்களுடன் சென்ற அனிதா, பவன்குமார் வலகேரி இணையர் சுடுகாட்டுப்பகுதி முழுவதும் சுத்தப்படுத்தினார்கள். சுடுகாட்டுப்பகுதியில்  மரக்கன்றுகளை நட்டார்கள்.

பெண்களுக்கு தையல் பயிற்சி, குருதிக்கொடை


இதுகுறித்து பவன்குமார் வலகேரி கூறியதாவது:

சுடுகாட்டுப்பகுதி கேட்பாரற்று தூய்மைக் கேடாக இருந்து வந்தது. எங்கள் திருமண நாளில் சுடுகாட்டை தூய்மைப்படுத்த விரும்பினோம். இதுகுறித்து எங்களின் உறவினர்கள், நண்பர்களுக்கு தெரிவித்த போது, அவர்கள் முதலில் உடன்பட மறுத்தார்கள். பின்னர் ஒப்புக்கொண்டு வந்தார்கள். நாங்கள் அனைவரும் சேர்ந்து சுடுகாட்டுப்பகுதியை சுத்தப்படுத்தினோம்.  பின்பு மரக்கன்றுகளை நட்டோம்.

அதன்பின்னர் சுடுகாட்டிலேயே எங்களின் திருமண நாளைக் கொண் டாடுவதையொட்டி, மாலை மாற்றிக் கொண்டோம். நண்பர்கள், உறவினர்கள், கிராமத்தினர் எங்களை வாழ்த்தினார்கள்.

முதல்நாளில் சுடுகாட்டை சுத்தப் படுத்தி, மரக்கன்றுகளை நட்டோம். அடுத்த நாளில் சுற்றியுள்ள கிராமங்களான கோட்நூர், கானாதல், பனேகாம், இட்டாகா, சித்தானூர் மற்றும் நந்திகூர் ஆகிய கிராமங்களிலுள்ள பெண்களுக்கு தையல்பயிற்சி அளித்தோம். எங்களையும் சேர்த்து 30 பேர் குருதிக்கொடை வழங் கினோம். தனியார் மருத்துவமனை யிலுள்ள குருதிவங்கியிலிருந்து குருதி யைப் பெற்றுக்கொண்டார்கள்.

இவ்வாறு பவன்குமார் வலகேரி கூறினார்.

- விடுதலை ஞாயிறுமலர் -14.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக