.நாத்திகம் பேசியதால்
பதவியேற்பு நிறுத்தப்பட்டு
நான்கு முறை நடந்த
மறுதேர்தல்களிலும் வென்ற
#பிடிவாத_பிராட்லா
இவரின் பிடிவாதத்தால் பிரிட்டனின் அரசியல் சட்டமே திருத்தப்பட்டது தெரியமா...??*
சார்லஸ்_பிராட்லா பிரிட்டனில் மிகவும் போற்றத்தக்க நாத்திகர்.
அவர் பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குத்
தேர்வு செய்யப்பட்டார். அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப் பட்டபோது, #கடவுளின்_சாட்சியாக என்று சொல்லிப் பதவி ஏற்குமாறு கூறினார்கள். ஆனால் அவரோ,
"இல்லாத கடவுளை நான்
சாட்சிக்கு அழைத்துவர முடியாது"
என்று கூறி, கடவுளின் பெயரால் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள உறுதியாக மறுத்துவிட்டார்.
"உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை; இந்தப் பேரவை நம்புகிறது, இந்த நாட்டின் அரசியல்சாசனம் நம்புகிறது, அதற்குக் கட்டுப்பட்டவர் நீங்கள்; எனவே, 'கடவுள் சாட்சியாக' என்று கூறித்தான் நீங்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும்; அதற்கு நீங்கள் மறுப்பீர் களேயானால் உங்கள் தேர்வு ரத்து செய்யப்படும்"
என்றார்கள். அதற்கு சார்லஸ் பிராட்லா,
"இந்த அவையின் ஆயுள்காலம் ஐந்து
ஆண்டுகள்தான்; இந்த ஐந்து ஆண்டுக ளுக்காக என் ஆயுள்முழுவதும் நான் கட்டிக்காத்துவரும் என்கொள்கைகளை
விட்டுவிடமுடியாது; என் தேர்வை நீங்கள் ரத்துசெய்ய விரும்பினால், தாராளமாக நீங்கள் ரத்து செய்து
கொள்ளுங்கள்"
என்று கூறிவிட்டார். கொஞ்சமும் தயவுதாட்சண்யம் இல்லாமல், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட அவரது தேர்வை ரத்து செய்தார்கள். அவருடைய தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடந்தது; மீண்டும் பிராட்லா போட்டியிட்டார்; மீண்டும் வெற்றிபெற்றார்; மீண்டும் அதே பிரச்சனை!
"எனக்கென்று ஒரு கொள்கை - ஒரு நம்பிக்கை இருக்கிறது அதை எந்தக்
காரணத்திற்காகவும் என்னால் விட்டுத்தர இயலாது"
என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார் பிராட்லா. மீண்டும் அவர்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
மீண்டும் அவர்
தொகுதிக்குத் தேர்தல் நடந்தது; மூன்றாவது முறையும் பிராட்லா போட்டியிட்டார்; இந்த முறை முந்தைய இரண்டுமுறை வாங்கிய வாக்குகளைவிட
அதிகவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் பிராட்லா!
இம்முறை கெஞ்ச ஆரம்பித்தார்கள்:
"தயவுசெய்து பிடிவாதம் பிடிக்காமல் இந்த அவையின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள்"
என்றார்கள்; பிராட்லா மிகவும் உறுதியாகச் சொன்னார்,
"நான் யார், என் கொள்கைகள் என்ன என்பதைத் தெரிந்துகொண்டுதான் என்
தொகுதிமக்கள் என்னை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள்; என் தேர்வை ரத்துசெய்வதன் மூலமாக என்னை தேர்ந்தெடுத்த மக்களை நீங்கள் அவமதிக்கிறீர்கள்;
அவர்களுடைய ஜனநாயக உரிமைகளை இழிவு செய்கிறீர்கள்; அவர்களுடைய தன்மானத்திற்கே சவால் விடுகிறீர்கள்"
என்று கடுமை காட்டிய பிராட்லா, "இதற்குமேல் பேச என்னிடம் எதுவுமில்லை"
என்று கூறி அமர்ந்துவிட்டார். இந்தமுறை பிரிட்டன் பாராளுமன்றம் பணிந்தது.
"தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், கடவுளின் பெயரால் மட்டுமன்றி மனசாட்சியின் பெயராலும் பதவிஏற்கலாம்"
என்று பிரிட்டனின் அரசியல் சட்டமே திருத்தப்பட்டது. இன்று பகுத்தறிவுவாதிகள் மனசாட்சியின் பெயரால் பதவி ஏற்பதற்கு சாரலஸ் பிராட்லாதான் காரணம்.
🌿🌾🌿🌾🌿🌾🌿🌾🌿🌾🌿🌾
-வெற்றிவேந்தன் முகநூல் பக்கம், 21.4.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக