திருச்சி, ஜூன் 5 திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி தாளாரும், முதுபெரும் பெரி யார் பெருந்தொண்டருமான ஞான.செபஸ்தியான் (வயது 101) நேற்று (ஜூன் 4) அதி காலை உடல் நலக்குறை வால் மறைவுற்றார்.
தகவலறிந்து கழகத் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இரங்கல் அறிக்கை அனுப்பி வைத்தார்.
அதில் இலங்கையில் திரா விடர் கழக தோழர்களோடு இணைந்த கழக தொண்டாற் றிய ஞான.செபஸ்தியான் திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் கண்ணியமிக்க தாளாளராக பணியாற்றி யவர் என்று குறிப்பிட் டுள்ளார்.
திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் பணி யாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மற்றும் பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக துணை வேந் தர், பதிவாளர் பணியாளர்கள் மறைந்த ஞான.செபஸ் யான் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழர் தலைவர்
மரியாதை
இன்று காலை 10 மணி யளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சுந்தர் நகரிலுள்ள அவரது இல்லத் திற்கு சென்று மறைந்த அய்யா ஞான.செபஸ்தியான் உடலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் மோகனா வீரமணி ஆகியோர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவரது பிள் ளைகள் டாக்டர் ஞான திலகம், கருணாகரன், மகள் கள் மாதரசி, மங்கையர்க் கரசி, மருமகன்கள் தாமஸ், தமிழரசன் மற்றும் மருமகள், பேரன் பிள்ளைகளுக்கு ஆறு தல் கூறினார்.
பின்னர் பெரியார் பெருந் தொண்டர் ஞான.செபாஸ்தி யான் உடலை தமிழர் தலை வர் தோளில் சுமந்து சென்று ஆம்புலன்சில் அனுப்பி வைத் தார்.
முன்னதாக பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறு வனத் தலைவர் பொத்தனூர் சண்முகம், பொதுச் செய லாளர் தஞ்சை ஜெயக்குமார், பொறியார் சுந்தரராஜூலு, தஞ்சை மண் டல செயலாளர் அய்யனார், ப.க. மாநில துணைத் தலைவர் கோபு.பழனிவேல், மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் சித்தார்த்தன், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், திருச்சி மாவட்ட தலைவரும், பெரியார் தொடக்கப்பள்ளி தாளாளருமான
ஞா.ஆரோக்கியராஜ், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், வல்லம் பெரியார் பாலிடெனிக் முதல்வர் மல்லிகா, துணை முதல்வர் பர்வீன், இலால்குடி மாவட்ட தலைவர் வால் டேர், செயலாளர் அங்க முத்து, கலைச்செல்வி அமர்சிங், ஈரோடு சண்முகம், வேணுகோபால், பேராசிரியர் ப.சுப்ரமணியன், பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக ஒருங்கிணைப்பாளர் ஆர்.தங்காத்தாள், மருந்தியல் கல்வி முதல்வர் இரா.செந் தாமரை, பெரியார் மெட்ரிக் பள்ளி முதல்வர் க.வனிதா, நாகம்மையார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செண்பகவள்ளி, பெரியார் மணியம்மை பெண்கள் மேனிலைப்பள்ளி தலைமை யாசிரியை (பொ) விஜய லட்சுமி, பெரியார் தொடக் கப்பள்ளி தலைமையாசிரியை விஜயலட்சுமி மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆசிரி யர்கள், அனைத்து பணியா ளர்கள் மற்றும் திராவிடர் கழக பொறுப்பாளர்கள் மண்டல செயலாளர் ப.ஆல் பர்ட், மாநகர அமைப் பாளர் காட்டூர் காமராஜ், தமிழக முற்போக்கு எழுத் தாளர் சங்க துணை தலைவர் கவிஞர் நந்தலாலா ஆகியோர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.
மேலும் கொளத்தூர் மணி உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.
- விடுதலை நாளேடு 5. 6 .2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக