நரேந்திர தபோல்கரை கொலை செய்த கொலையாளி
சச்சின் பிரகாஷ்ராவ் ஆந்துரே
லக்னோ,ஆக.19மகாராஷ்டிராவின் மூடநம்பிக்கை ஒழிப்பு புரட்சியாளர் என்றழைக்கப்பட்ட, பகுத்தறிவாளரும், சிறந்த தர்க்கவாதியுமான நரேந்திர தபோல்கர் 2013-ஆம் ஆண்டு புனே நகரில் அதிகாலை நடைப்பயிற்சி மேற் கொண்டிருக்கும் போது சிலரால் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை நடந்த அய்ந்து ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி ஒருவர் கைதாகியுள்ளார். அவருடைய பின்னணியில் இருப்பது சனாதன் சன்ஸ்தா என்ற இந்து வெறி அமைப்பே!
மகாராஷ்டிராவில் விநாயகர் பெய ரில் நடத்தும் ஊர்வலங்கள், அதன் மூலம் நடக்கும் அட்டூழியங்கள், பணம் திரட்டும் நடவடிக்கை மற்றும் விநாயகர் ஊர்வலத்தை முன்வைத்து இந்துக்கள், முஸ்லிம்களிடையே பகைமையைத் தூண்டும் இந்துத்துவ அமைப்புகள், மற்றும் அதன்மூலம் லாபம் பார்க்கும் மதவாத கட்சிகள்பற்றி தொடர்ந்து பேசிவந்தவர் நரேந்திர தபோல்கர்.
இதனால் 2005 ஆம் ஆண்டிற்குப் பிறகு விநாயகர் வழிபாட்டில் ஈடுபடுவோர் எண்ணிக்கை பாதியாக சரிந்தது, 1995 ஆம் ஆண்டுகளில் புனே நகரில் 8000 பெரிய விநாயகர் சிலைகள் விநாயகர் சதூர்த்தி அன்று வைக்கப்படும், ஆனால் நரேந்திர தபோல்கரின் பகுத்தறிவு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தால் 2012 ஆம் ஆண்டு வெறும் 700 பெரிய விநாயகர் சிலைகள் மட்டுமே வைக்கும் சூழல் ஏற்பட்டது. இந்த மாற்றத்தைக் கண்டு பல இந்துத்துவ அமைப்புகள் நரேந்திர தபோல்கர்மீது கடுமையாக விமர்சனம் வைத்தனர். இந்த நிலையில் 11.8.2018 அன்று, மும்பை தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு,தானேமாவட் டம்,நாலாசொபராவில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக் கும் சிலரது நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக உள்ளதாகதகவல்கிடைத்தது. இதனை அடுத்து சில நாள்களாக அங்குகுடியிருந்தவர்களைக் கண் காணித்து வந்த காவல்துறையினர் அதிரடியாக அந்தக் குடியிருப்பில் நுழைந்து அங்குள்ளவர்களில் சந்தேகத் திற்கிடமானவர்களைக் கைது செய்தனர். அதன் பிறகு அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் நடந்த சோதனையில் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தும் வெடிமருந்து, வெடிகுண்டுகள், மின் னணு உபகரணங்கள், டைமர்கள் போன்றவை அங்கு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக மறைந்த நரேந்திர தபோல்கரின் மகன் ஹமீத் தபோல்கர் கூறியதாவது: நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணை மற்றும் கருநாடக காவல்துறையின் பாரபட்சமற்ற புலனாய்வின் மூலம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு எனது தந்தை யைக் கொலைசெய்தவர்களைக் கைது செய்துள்ளனர். நாங்கள் ஏற்கெனவே சனாதன் சன்ஸ்தா, இந்துஜாகுருதிசமீதி, இந்து சுரக்ஷா மஞ்ச் போன்ற அமைப் புகள் மீது புகார் அளித்திருந்தோம் ஆனால் மகாராஷ்டிரா அரசு எங்கள் புகாரின் மீது அக்கறைகாட்டவில்லை, ஆகையால்தான் எனது தந்தையைத் தொடர்ந்து எங்களின் மரியாதைக்குரிய கோவிந்த பன்சாரே, பேராசிரியர் கல் புர்க்கி மற்றும் கவுரி லங்கேஷை இழந் துள்ளோம் என்று கூறினார்.
இது தொடர்பாக புதிதாக தீவிர வாத தடுப்புப் பிரிவு தலைவராக பதவியேற்றுள்ள குல்கர்னி கூறும்போது,
கடந்த வெள்ளிக்கிழமை அன்று கைதுசெய்யப்பட்டவர்களை விசாரித்த போது நரேந்திர தபோல்கரின் கொலை யாளிகள் குறித்த மிகவும் முக்கியமான தகவல் கிடைத்தது, இதனை அடுத்து நரேந்திர தபோல்கர் கொலையில் மிகவும் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளோம் என்று கூறினார்.
கொலையாளிகளை நெருங்கிய சிபிஅய்
கவுரிலங்கேஷ்கொலை,அதைத் தொடர்ந்துஅப்போதையமுதல்வர் சித்தராமையாவின் நேரடிகண்காணிப் பில் இயங்கிய கருநாடக காவல்துறை விரைந்து செயல்பட்டு கவுரிலங்கேஷ் கொலையாளிகளைநெருங்கியது.இந்த நிலையில் கருநாடகாவில் தேர்தல் முடிந்து 58 மணிநேர முதல்வராக இருந்த பாஜகவின் எடியூரப்பா தான் பதவியில் அமர்ந்த உடனேயே கருநாடகா காவல் துறைத் தலைவரை இட மாற்றும் உத்தரவை போட்டார். இவரது நேரடி கண்காணிப்பின் கீழ்தான் கவுரி லங் கேஷ் கொலையாளிகள் குறித்து விசா ரணை நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் எடியூரப்பா பதவி இழந்ததும் காங்கிரசு ஆதரவுடன் குமாரசாமி பதவியேற்ற பிறகுமீண்டும்கவுரிலங்கேஷ்கொலை யாளர் விசாரணை பலம்பெற்று கொலை யாளிகள் கைதுசெய்யப்பட்டனர். அவர் கள் கொடுத்த தகவலின் மூலம் சனாதன் சன்ஸ்தாஅமைப்பைச்சேர்ந்தவர்கள் ஆயு தத்தயாரிப்பில் ஈடுபட்டது தெரிய வந் தது இதனை அவர்களை கைது செய் ததன் மூலம் நரேந்திர தபோல்கர் கொலை யாளிகளில் ஒருவரான சச்சின் பிரகாஷ் ஆந்துரேவைக் கைது செய்துள்ளனர்.
- விடுதலை நாளேடு, 19.8.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக