வெள்ளி, 16 ஜூன், 2017

மலேசிய திராவிடர் கழகம் பினாங்கு மாநிலத்தின் 32ஆவது பேராளர் மாநாடு - புதிய பொறுப்பாளர்கள் தேர்வு

பினாங்கு, மே 23- மலேசிய திராவிடர் கழகம், பினாங்கு மாநி லத்தின் 32ஆவது  பேராளர் மாநாடும், 2017-2019ஆம் ஆண் டுக்கான  ஈராண்டு பொறுப்பா ளர் தேர்வும்; கடந்த 14-.5.-2017 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, பினாங்கு வீணை தங்கும் விடுதியில் மலேசிய திராவிடர் கழக பினாங்கு மாநிலத் தலைவர் ச.த. அண்ணாமலை  அவர்க ளின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இம்மாநாட்டை தேசிய ம. இ.கா.வின் பினாங்கு மாநிலத் துணைத் தலைவரும், மத்திய செயலவை உறுப்பினரும், மதிப்பிற்குரிய மாண்புமிகு டத்தோ மு.ஞானசேகரன் அவர் கள் அதிகாரபூர்வமாக திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். மலேசிய திராவிடர் கழகம் மற்றும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் 1946ஆம் ஆண்டில் நான்கு மாத இடைவெளியில் அமைக்கப்பட்ட  இயக்க வர லாற்றுப் பதிவை நினைவுபடுத்தினார்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் மலேசிய நாட்டிற்கு 1929 மற்றும் 1954ஆம்  ஆண்டுகளில் பினாங்கு மாநிலத்தில்  காலடி பதித்ததையும் தனது பகுத்தறி வுச் சிந்தனைகளை  விதைத்ததையும் மலேசிய திராவிடர் கழக  பினாங்கு மாநிலத்துக்கு கிடைத்த வரலாற்றுப்  பதிவு என்றும் பேராளர்களின் மத்தி யில் மகிழ்வுடன் பதிவு செய்தார்.

மலேசிய திராவிடர் கழக தேசியத் தலைவரின் சிறப்பு ரையில் தமிழர்களின் வரலாற்று பின்புலத்தை பினாங்கு மாநிலம் கொண்டுள்ளது. பினாங்கு மாநிலத்தின் அதிநவீன வளர்ச்சி மிகுந்த உயரத்தை அடைந்துள்ள வேளையில்; கல்வி, பொருளாதாரம், அரசியல் மற்றும் தொழில் துறையில் இந் நாட்டில் வாழும் தமிழர்கள் சிறந்திருந்தும்,  இன்னும் அவர்கள் மத்தியில் அறிவுக்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களும், மூடநம்பிக்கைகளும் தொடர்வது வருத்தத்திற்குரியது என்றார்.

இதனை திராவிடர் கழகம் பினாங்கு மாநிலக் கிளை தொடச்சியாக அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளையும், சிந்தனை களையும் தமிழர்களின் மத்தியில் முன்னிலைப் படுத்தவேண்டும் என்று  தமதுரையில் கூறினார்.

மலேசிய திராவிட கழக பினாங்கு மாநிலத்தின் ஈராண் டுக்கான பொறுப்பாளர் தேர் வினை கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் பொன்வாச கம் அவர்கள் நடத்தி நடப் பாண்டிற்கான பொறுப்பாளர்களை  தேர்வு செய்தார். தேர்வு பெற்ற மாநிலத் தலைவர் ச.த. அண்ணாமலை மற்றும் மாநி லப் பொறுப்பாளர்களுக்கு வாழ்த் துகளை தெரிவித்துக்கொண்டார்.

தேர்வு பெற்றவர்களின் விவரம் வருமாறு:

 

தலைவர்: ச.த. அண்ணா மலை, துணைத் தலைவர்: இரா.பா.ஜெயச்சந்திரன், செயலாளர்: சொ.மருதமுத்து, துணைச் செயலாளர்: பெ.இராஜேந்திரன், பொருளாளர்: மு.சுப்பரமணியம், செயலவை உறுப்பினர்கள்:

லெட்சுமணன், ச.முனியாண்டி, இரா.பரமேஸ் வரி, இரா.ஆபேல், இளைஞர் பிரிவுத் தலைவர்: இரா.காளி தாஸ், இளைஞர் பிரிவுச் செய லாளர்: நா.பாரத்ராஜ், மகளிர் பிரிவுத் தலைவி: இரா.யோகேஸ் வரி, மகளிர் பிரிவுச் செயலாளர்: இரா.அமுதேஸ்வரி, உட்கணக் காய்வாளர்: கோ.முனிநாதன், மு.தாமரை.

இந்நிகழ்வில் தலைமைக் கழக பொறுப்பாளர்கள் கழகத் தின் தேசிய துணைத் தலைவர் டாக்டர் மு.முரளி,தேசிய உத வித் தலைவர் செ.குணாளன் மற்றும் கழகத்தின் தேசியப் பொருளாளர் சா.ரா.பாரதி அவர்கள் சிறப்பு வருகை அளித்தனர்.

-விடுதலை,23.5.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக