நம்பூதிரிகளைத் தவிர வேறு யாருக்கும் வேதங்கள் பயிலுவதற்கோ, உச்சரிப்பதற்கோதகுதியில்லை. தகுதியற்ற‘‘கீழ்ஜாதிக்காரர்கள்’’ தகுதி யுள்ளவர்கள் சொல்கின்ற வேத உச் சரிப்புகளைக் கேட்பதுகூட ‘‘பாவமானது!’’ தகுதியுள்ளநம்பூதிரிகளிலேயேபெண் கள் - ஆண்கள் வேதம் உச்சரிப்பதைக் கேட்கலாமே தவிர, சுயமாகக் கற்பதற்கோ, உச்சரிப்பதற்கோ தகுதியற்றவர்களாவர்!
சமூகத்தில் மிகச் சிறுபான்மையோ ரைத் தவிர மிகப் பெரும்பாலோருக்கு வேதங்கள் உச்சரிப்பதும், கற்பதும், கற் பிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
###
இந்தியர்களானநாமெல்லாம்பெரு மைப்படக்கூடிய இந்தக் கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள் ‘ஆரியர்கள்’ என்ற பேரில் வரலாற்றில் அறியப்படுகிறார்கள். அதன் காரணமாக பண்டைக்கால இந்திய கலாச்சாரத்தை ‘ஆரிய கலாச் சார’மென்றும் அந்தக் கலாச்சாரத்தின் தோற்றுவாய் வேதங்களாக இருந்ததனால் வேத கலாச்சாரமென்றும் அறிஞர்கள் அழைக்கின்றனர்.
இதுதான் இந்தியாவின் மிகவும் புராதனமான கலாச்சாரம், அதனை உருவாக்கிய ஆரியர்கள் இங்கு வரு வதற்கு முன்னால் இங்கு வாழ்ந்த மக்கள் முற்றிலும் நாகரிகமற்றவர்களாக இருந்தவர்கள் என்றுதான் நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் நிலவிவந்த இந்திய வரலாற்றுப் பாட நூல்கள் எங்களுக்குக் கற்பித்தன. வேதங்களின் புனிதத்தன்மைப்பற்றி ஏற்கெனவே இருந்து வந்த கருத்தை ஒரு வகையில் பலப்படுத்திய வரலாற்றுக் கண்ணோட்டமாக அது இருந்தது.
முன்னால் இருந்து வந்த கருத் தைப்போலவே இதுவும் தவறானது என்று நிரூபிக்கக் கூடிய பல உண் மைகளை அப்போதே வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இன்றையபாகிஸ்தானில்உள்ளஹரப் பாவிலும்மொஹஞ்சதரோவிலும் பூமிக்கடியிலிருந்து தோண்டியெ டுக்கப்பட்ட பல புராதனப் பொருள்கள் ஒரு விஷயத்தைத் தெளிவாக்கியுள்ளது. ஆரியர்கள் வருவதற்கு பல நூற் றாண்டுகளுக்குமுன்னாலேயேஆரி யர்களைக் காட்டிலும் வளர்ச்சியடைந் திருந்த ஒரு மக்கள் பிரிவினர் அன்றைய இந்தியாவில் வாழ்ந்து வந்தனர்.
இந்த உண்மையைத் தெளிவாக்கிய புராதனப்பொருட்களின்மிச்சசொச் சங்கள்கண்டெடுக்கப்பட்டதுசிந்து நதிக்கரையை ஒட்டிய பிரதேசங்களில் தான். ஆகவே, அவைகள் சுட்டிக்காட் டுகின்ற கலாச்சாரம் ‘சிந்து கலாச்சாரம்‘ என்று அழைக்கப்படுகிறது. அதனுடைய பல்வேறு அம்சங்கள் இன்னும் தெளிவுப்பட வேண்டியுள்ளது. அதற்கான ஆய்வும் ஆராய்ச்சியும் தொடருகிறது. ஆனால், ஒரு விஷயம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட் டுள்ளது. ஆரியர்கள் வருவதற்கு முன் இந்தியா முழுவதும் அநாகரிக மக்கள் சமுதாயத்தின் வாழ்நிலமாக இருந்தது என்று ஏற்கெனவே இருந்து வந்த கருத்து முற்றிலும் தவறானது.
###
வருணவேற்றுமையின்மூல மாக ஜாதி ஆதிக்கத்தை நோக்கி வளர்ச்சியடைந்த இந்திய சமூகத் திற்கும் அடிமை முறையின் மூல மாகநிலப்பிரபுத்துவமாகவும்பின் னர்முதலாளித்துவமாகவும்வளர்ச்சி யடைந்த அய்ரோப்பிய சமூகங்களுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு என்பதையும் இங்குக் குறிப்பிட வேண்டும். அடிமைகளும் - உடை மையாளர்களும், பிரபுக்களும், தொழி லாளர்களும் - முதலாளிகளும் என இவ்விதமான வர்க்க வேறுபாடுகள்தான் அங்கே உருவாகின. வெளிப்படையான சுரண்டலும் ஒடுக்குமுறைகளும் நடத்தி எந்தவிதமான ஒளிவுமறைவுமின்றி சுரண்டுவோர் சுரண்டப்படுவோரை அடக்கி ஆளுகின்ற அமைப்பின் பல்வேறு வடிவங்கள்தான் அங்கே தோன்றின என்பதே இதன் பொருள்.
இந்தியாவின்வருண(ஜாதி)பிரிவினையில்,சுரண்டலும்,ஒடுக்கு முறையும் மூடி வைக்கப்பட்டுள்ளது. ‘கீழ்ஜாதி’கள் ‘மேல்ஜாதி’களுக்கு அடி பணிந்து வாழ்ந்த போதிலும் ஒவ்வொரு ஜாதியைச்சேர்ந்தவர்களுக்கும்அவ ரவர்களுடையதானசகோதரஉணர் வும்சமத்துவமும்இருந்தன. புராதன பொதுவுடைமை கோத்திர அமைப்பில் கோத்திர வர்க்க ஜன நாயகம் என்பதுபோல வருண (ஜாதி) அமைப்பிலும் ஜாதிக் குழுக்கள், அவைகளின்மூலம் வெளிப்படுகின்ற ஜாதியசமத்துவம்,ஜனநாயகம்ஆகிய வையெல்லாம் வருண (ஜாதி) அமைப் பின் ஆரம்ப காலத்தில் இருந்தன.
(நூல்: ‘‘வேதங்களின் நாடு’’ இ.எம்.எஸ். நம்பூதிபாட், தமிழில்: பி.ஆர்.பரமேஸ்வரன்).
குறிப்பு: இன்று இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் பிறந்த நாள். இந்தியப் பொதுவுடைமைக் (1909) கட்சியின் முன்னணித் தலைவர்; கேரள மாநில மேனாள் முதலமைச்சர்.
- மயிலாடன்
-விடுதலை,13.6.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக