திங்கள், 15 ஆகஸ்ட், 2016

மதமற்ற உலகம் விரைவில் வரும்!

மஞ்சை வசந்தன்
இந்தியாவைப் பொருத்தவரை தமிழர்கள் மட்டுமே பரவி வாழ்ந்த காலத்தில் இங்கு கடவுள் நம்பிக்கையென்பதோ, மூடநம்பிக்கை-யென்பதோ அறவே இல்லை. நன்றியின்-பாற்பட்ட வழிபாடு மட்டுமே இருந்தது.
ஆனால், ஆரிய பார்ப்பனர்கள் ஊடுருவிய-பின், சிறுபான்மையினரான அவர்கள் தங்களைக் காத்துக்கொள்ளவும், தங்களுக்கு வருவாய் தேடிக்கொள்ளவும், பல்வேறு மூடச் சடங்குகளை நுழைத்து கடவுள்களையும், புராணங்களையும் கற்பித்து விழாக்கள், பூசைகள், ஆரவாரங்கள் நிகழ்த்தி மக்களை கடவுள் நம்பிக்கையின்பாற் கவர்ந்தனர்.
காலம்காலமாக கடவுள் மறுப்புக் கொள்கைகள் பலரால் பரப்பப்பட்டாலும் அவற்றால் மிகப்பெரிய விளைவுகள் உருவாகவில்லை. ஆனால், தந்தை பெரியாரின் இடைவிடா பிரச்சாரத்தின் விளைவாய் கடவுள் என்ற கற்பனை தகர்க்கப்பட்டது. பட்டை நாமம், கடவுள் பெயர் சூடல் என்ற நிலை முற்றாக மாறி கடவுள் சார்ந்த செயல்பாடுகள் கேலிக்குரியவையாக மாறின.
ஆனால், அரசியல் மாற்றங்களின் காரணமாய், ஆரிய பார்ப்பனர்களின் சூழ்ச்சியால், அறிவியல் சாதனங்கள் வழிசெய்த கவர்ச்சிகளால் மீண்டும் கடவுள் மதச் சடங்குகள், நம்பிக்கைகள் துளிர்விடத் தொடங்கின.
கடவுள் சார்ந்த அச்சம் பலருக்கு இருப்பினும் பெருமளவில் நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதே உண்மை.
ஆனாலும், கும்பமேளா, மகாமகம், கும்பாபிஷேகம், உற்சவம், தேர் என்று விழாக்களில் மக்கள் கூடுவதை வைத்து கடவுள் நம்பிக்கை இந்தியாவில் அதிகம் இருப்பதாய்க் காட்டுகின்றனர்.
இங்கு மதம் சார்ந்து சலுகைகள் அளிக்கப்படுவதால் எல்லோரும் மதத்தை விடாது கூறி வருகின்றனர். இதை வைத்து இந்தியாவில் மத நம்பிக்கையாளர் அதிகம் இருப்பதாய்க் கருதுவது ஒருவித பிழையான முடிவேயாகும். இளைஞர்கள் பெரும்பாலும் கடவுளை கருத்திலே கொள்வதில்லை என்பதே உண்மை. அதைப் பற்றிய புரிதல், தெளிவு இன்மையால், அச்சம் ஆழ்மனதில் இருக்க, ஏதோ ஒரு கும்பிடு என்ற அளவில்தான் இன்றைக்கு கடவுள் நம்பிக்கை ஒட்டிக்கொண்டு தொங்குகிறது என்பதே உண்மை நிலையாகும்!
இந்தியாவை தவிர்த்து, வளர்ச்சி பெற்ற நாடுகளைக் கணக்கில் கொண்டால்,
60%க்கும் மேலான மக்கள் கடவுளையும், மதத்தையும் மறுக்கின்ற உண்மை நிலை ஆய்வின் மூலம் வெளிப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடந்த நாத்திகர்களின் பேரணி
அமெரிக்க தலைநகர் வாஷ்ங்டன் நகரில் ஏற்பாடு செய்த, மதநம்பிக்கை அற்றவர்கள் ஒன்று கூடி நடத்திய மாபெரும் பேரணி ஒன்று லிங்கன் மெமோரியலிலிருந்து புறப்பட்டது.
இந்த பேரணியில் அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளில் இருந்து 30,000 ஆயிரத்திற்குமேற்பட்டோர் கலந்துகொண்டனர். இப்பேரணியில் கலந்துகொண்டவர்கள் அரசியலில் மதம் நுழைவதை கண்டித்தும், அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் நபர் மதச்சார்பற்ற கொள்கைகளை கடைபிடிப்பவராகவும் இருக்கவேண்டும் என்று முழக்கங்கள் இட்டனர். உலகம் முழுவதும் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கிறது, முக்கியமாக மதசார்பற்ற கொள்கைகள் படித்தவர்களிடையே விவாதத்திற்குரிய கருத்தாக இருந்து வருகிறது, இந்த நிலையில் தற்போது ஆசியா மற்றும் மத்திய கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் மதரீதியான தாக்குதல்களும் மதத்தின் பெயரால் வன்முறைகளும் நடந்து வருகின்றன.  அன்பை போதிக்கும் மதங்கள் என்று கூறிக்கொண்டு அந்த மதத்தின் பெயரால் உயிர்பலிகள் நடைபெறுகின்றன. இதனை கண்டிக்கும் விதத்திலும், மதங்களால் வன்முறைகள் தான் அதிகரிக்கின்றன என்ற ஒரு கருத்தை முன்வைத்தும் நாத்திகர்கள் பேரணி அமெரிக்காவில் நடைபெற்றது, இதில் கலந்துகொண்ட அனைவரும் தாங்கள் எந்த மதத்தையும் சார்ந்தவர்கள் இல்லை, என்றும் தங்களுக்கு கடவுள் மற்றும் மூடநம்பிக்கையின் மீது நம்பிக்கை இல்லை என்றும் கையொப்-பமிட்டுள்ளனர்.
இது குறித்து மதச்சார்பற்ற கூட்டமைப்பு-களின் ஒருங்கினைப்பாளர் லாரி டெக்கர் கூறியதாவது  இந்த பேரணியில் அமெரிக்க நாடாளுமன்ற காங்கிரஸ் அவையின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன் மூலம் அமெரிக்க அரசியலிலும் மதச்சார்பின்மை மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்-துள்ளது, இது நல்ல மாற்றமாகும்.
அமெரிக்காவில் 60 விழுக்காடு மக்கள் நாத்திகத்திற்கு ஆதரவு தரும் அதிபரையே விரும்புகின்றனர். அமெரிக்கவின் நவீன காலத் துவக்கத்தில் மிகவும் சிறிய அளவு நாத்திகர்களின் எண்ணிக்கை இருந்தது, அந்தச் சிறிய அளவு நாத்திகர்களின் கருத்துக் கண்ணோட்டத்தின் மூலம் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள் உருவாகின. தற்போது கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எண்ணிக்கை அமெரிக்காவில் சுருங்கிவிட்டது, தற்போது அமெரிக்காவில் படித்தவர்கள் அனைவரும் தங்களின் அன்றாட வாழ்க்கைப் பணியில் மதங்களை ஒதுக்கிவைக்க ஆரம்பித்துவிட்டனர்.
இது குறித்து அமெரிக்க நாடாளுமன்ற காங்கிரஸ் சபை உறுப்பினர் லிஸ்ட்டில் கூறும் போது, நாடாளுமன்றத்தில் மத நம்பிக்கை உள்ள உறுப்பினர்கள் அதிகம் உள்ளனர். இருப்பினும் அவர்கள் தங்களின் அரசியல் பணியில் மதத்தை விலக்கி வைத்துள்ளனர்.
2012-ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியில் மிகவும் முக்கியமாக கவணிக்கப்படவேண்டியது என்னெவென்றால் இளைய தலைமுறையினர் அதிகம் பேர் கடவுள் மறுப்புக் கொள்கையில் தீவிரமாக இருந்தனர். இது மிகவும் மகிழ்ச்சிக்குறிய தகவலாகும்.
இந்த ஆண்டு நடக்கவிருக்கும் பேரணி மதச்சார்பின்மை கொள்கை முன்னிருத்தி தான் நடைபெறுகிறது, இதுதான் இந்தப் பேரணியின் முக்கிய நோக்கமும் மையக்கருத்துமாகும், என்று கூறினார்.
இப்பேரணியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான டெக்கர் என்பவர் கூறும்போது நான் பிற மதத்தவரிடம் பழகுவதை விட மதநம்பிக்கை இல்லாதவர்களிடம் நட்புகொள்ளும் போது ஒரு ஆத்மார்த்தமான நட்பை உணர்கிறேன். இதுதான் உண்மையும் கூட, ஒரு மத நம்பிக்கையுள்ளவர்கள் வேறு மத நம்பிக்கை கொண்டவர்களை நன்பர்களாக பெறும் போது ஏதாவது ஒரு வகையில் இருவருக்குமிடையே ஒரு மாற்றுக்கருத்து ஏற்படும். இது நட்பை சீர்குலைத்துவிடும் அளவிற்கு அதிகரித்து-விடுகிறது, ஆனால் மதநம்பிக்கையற்றவர்-களுடன் பழகும் போது இந்தச் சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை,  அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் தீவிர மதநம்பிக்கை கொண்ட அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் போட்டியிலிருந்து ஆரம்ப கட்டத்திலேயே தோல்வியைச் சந்தித்து வெளியேறியிருக்கின்றனர். அதில் குறிப்பிடத்தக்கவர்களுள் சிலர் சண்டெட் குரூஸ், ஒஹியோ கவர்னர் ஜான் காசிச், போன்றவர்களைக் கூறலாம். இதில் ஜான் காசிச் தனது தேர்தல் தோல்வி குறித்து பேசும் போது தான் அதிபராகவருவது கடவுளுக்கு பொறுக்கவில்லை என்று கூறினார். அந்த அளவிற்கு அவர் கடவுள் நம்பிக்கையுள்ளவராக இருந்தார்.
(‘வாஷிங்டன் போஸ்ட்’ சிஎன்என், 05.06.2016)
பிரிட்டனில் அதிகரித்து வரும் நாத்திகர்களின் எண்ணிக்கை
பிரிட்டனில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் நாங்கள் நாத்திகர்கள் என்று குறிப்பிட்ட மக்கள் எண்ணிக்கை 29-விழுக்காடாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2011-ஆம் ஆண்டு 48 -விழுக்காடாக இருந்து அய்ந்து ஆண்டுகளில் மிகவும் அதிகமான எண்ணிக்கையை தொட்டுள்ளது.
அதே நேரத்தில்தீவிர மதப்பற்றுள்ளவர் களின் எண்ணிக்கை தேவாலய நிர்வாகமே கவலைகொள்ளும் அளவிற்கு குறைந்துவிட்டது.
இங்கிலாந்து மக்கள் தொகையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், மற்றும் கிறிஸ்தவ மதத்தின் பல்வேறு உள்பிரிவைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.  முக்கியமாக பழமைவாத கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் தென் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் மிகவும் தீவிர மதபற்றுள்ளவர்களாக இருந்த நிலை மாறிவிட்டது.
நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரித் திருப்பது தொடர்பாக இங்கிலாந்தின் டுவக்கென்ஹம் நகரில் உள்ள  செயிண்ட் மேரி காத்தோலிக்க பல்கலைக்கழக விரிவுரையாளர் ஸ்டீபன் புல்வண்ட் கூறியதாவது, வளரும் தலைமுறை மிகவும் தெளிவான சிந்தனையில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக அறிவியல் சிந்தனை மதநம்பிக்கையை உடைத்தெறிந்து விட்டது. இதனால் தான் இளைய தலைமுறையினர் அதிக அளவு நாத்திகர்கள் என்று கருத்துதெரிவித்துள்ளனர்.
இப்பேராசிரியர் கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் தொகைக்கணக்கெடுப்பு பற்றிய ஆய்வை நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. முன்பு மதநம்பிக்கையுள்ளவர்கள் என்று கூறியவர்கள் தற்போது தங்களை நாத்திகர்களாக உறுதிபடத்தெரிவித்துள்ளனர். நாத்திக உணர்வு இவர்களுக்கு ஏற்படக்காரணம் கல்வியறிவினால் நேரத்தை அறிவார்ந்த வழிகளில் செலவழிக்க ஆரம்பித்துள்ளதால், மதச்சடங்குகள் அனைத்தும் காலத்தை வீனாக்கும் செயல் என்று புரிந்து கொண்டுள்ளனர்.
மதம் எந்த வகையில் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறது என்று இளையதலைமுறை தங்களுக்குள்ளே கேள்வி எழுப்பிக்கொள்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம் மதங்களின் பெயரால் உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் வன்முறை மற்றும் மூடத்தனமான செயல்பாடுகள் ஆகும்.
இங்கிலாந்து மட்டுமல்லாமல் ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து நாட்டில் 52 விழுக்காடு மக்கள் மதநம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளனர். இப்பகுதிகள் 1999 ஆம் ஆண்டு 49 விழுக்காடு மக்கள் நாத்திகர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். பழமைவாத மதக் கோட்பாடுகளை கடுமையாக கடைபிடிக்கும் ஸ்காட்லாந்து போன்ற நாடுகளில் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதும்  குறிப்பிடத்தக்கதாகும்.
இங்கிலாந்து கத்தோலிக்க மதப்பிரிவைச் சேர்ந்த மதகுருமார்கள் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது குறித்துப் பேசும் போது கடந்த சில ஆண்டுகளில் தேவாலயத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது,. முக்கியமாக வருகைப்பதிவேடுகள் பெரும்பாலான நாட்களில் ஒரு பக்கங்கள் கூட நிரம்புவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
கத்தோலிக்க மத தேவாலயங்களும், பிற மதவழிபாட்டுத்தலங்களும் மக்களின்வருகை குறைந்தது குறித்து கவலை தெரிவித்துள்ளன.
இங்கிலாந்தில் மதநம்பிக்கை உள்ள இளையதலைமுறையினரில் பத்து பேரில் 4 பேர் மதரீதியான நம்பிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இனிவரும் காலத்தில் இவர்களும் நாத்திகர்களாக தங்களை அடையாளப்-படுத்திக்கொள்வார்கள். இங்கிலாந்தில் உள்ள தேவாலயங்கள் இளைய தலைமுறைகளை தேவாலயத்திற்கு அழைத்து வர பெரும்பாடு படுகின்றனர். அப்படியே வரும் இளைய தலைமுறைகள் பல்வேறு கேள்விகளை எழுப்பும்போது அதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிவருகின்றனர்.  பழமைவாதத்தில் ஊறிப்போன பூர்வீக ஆங்கிலேயர்களிலும் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் கிறிஸ்தவம் மற்றும் இந்து, இஸ்லாம் இதர மதத்தினரிடம் கடவுள் நம்பிக்கை அதிரடியாக குறைந்து வருகிறது, முக்கியமாக இக்கணக்கெடுப்பு அனைத்து மதத்தினரும் அந்த மதத்தின் நம்பிக்கையை இழந்து வருவதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
(‘தி கார்டியன்’, 23.05.2016)
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்
48.5% மக்கள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தங்களை மதம் அற்றவர்கள் என்று அறிவித்துள்ளனர். ஸ்காட்லாந்து
52% மக்கள் தங்களை மதமற்றவர்களாக அறிவித்துள்ளனர்.
செக் குடியரசு:
யு.எஸ்.எஸ்.ஆர் எனும் சோவியத் ரஷ்யாவின் அங்கமாக இருந்து பிரிந்துள்ள நாடான செக் குடியரசு அய்ரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் அதிக விழுக்காட்டளவில் நாத்திகர்களைக் கொண்டுள்ளது. 45 விழுக்காட்டினர் தாங்களாகவே நாத்திகர்களாக இருந்து-வந்துள்ள-தாகவும், 30 விழுக்காட்டினர் கடவுள் நம்பிக்கையுடன் இருந்தவர்கள் தற்போது நாத்திகர்களாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆகமொத்தம் 75% நாத்திகர்கள்.
ஜப்பான்:
பழைமைகள் மற்றும் மதச்சடங்குகளை ஒதுக்கிவிட்டு இருப்பவர்களாக 25 விழுக்காட்டினரும், மேலான சக்தி என ஒன்றும் நம்புவதற்கில்லை என்கிற அளவில் 31 விழுக்காட்டினரும் குறிப்பிட்டுள்ளனர்.
ஜெர்மனி:
ஜெர்மனி நாட்டில் 60 விழுக்காட்டினர் தங்களை நாத்திகர்களாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இசுரேல்:
இசுரேலியர்களில் 57 விழுக்காட்டினர் தங்களை மதமற்றவர்களாகக் குறிப்பிட்டுள்ளனர். கடவுள் நம்பிக்கையிலிருந்து நாத்திகர்களாக 8 விழுக்காட்டினர் மாறி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
நார்வே
கடந்த இரண்டு ஆண்டுகளில் பெருமளவிலான மாற்றத்தை காண முடிகிறது. இரண்டு ஆண்டு களுக்கு முன்பாக கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர் களும் சம அளவிலான எண்ணிக்கையில் இருந்தனர். ஆனால், தற்போது கடவுள் நம்பிக்கையற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
உலகில் முதல் நாத்திக ஆய்வு இருக்கை!
அமெரிக்க நாட்டில் மதத்தினை புறந்தள்ளும் போக்கு அதிகரித்துவரும் நிலையில் மியாமி பல்கலைக்கழகம் ஓர் உயராய்வு இருக்கையினை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டில் புளோரிடாவில் வசித்து வரும் 83 வயதினை எட்டியுள்ள ஓய்வு பெற்ற வணிகரும், பார்பிசன் பன்னாட்டு மாதிரிப் பள்ளியின் மேனாள் தலைவரும், சீரிய நாத்திகருமான லூயிஸ் ஜே அப்பிக்னானி கொடையாக அளித்த 2.2. மில்லியன் டாலர் நிதி ஆதாரத்துடன் நாத்திக உயராய்வு இருக்கை நிறுவப்பட்டுள்ளது
தேவாலயங்கள் அளித்து வரும் நிதி மற்றும் பொருளுதவிகளால் அவை செயல்பட்டு வருகின்றன. தற்பொழுது நாத்திகம் மற்றும் மதச்சார்பின்மை படிப்பு ஏற்றுக்கொள்ளப்படும் கல்விக்களமாக மாறி வருகிறது. ஆராய்ச்சி, கொள்கைகள், கல்வி மாநாடுகள், பயிற்சி அளித்தல் என்ற நிலையினை அடுத்து நாத்திகத்திற்கான உயராய்வு இருக்கை இப்பொழுது முதன்முதலாக உருவாக்கப்-பட்டுள்ளது.
மியாமி பல்கலைக்கழகம் எடுத்திட்ட ஒரு துணிச்சலான செயல் என, கடவுள் ஒரு பொய் நம்பிக்கை (ஜிலீமீ நிஷீபீ ஞிமீறீusவீஷீஸீ) நூலாசிரியரும், பரிணாமவியல் உயிரியலாளரும், நாத்திகப் பெருந்தகையுமான ரிச்சர்டு டாக்கின்ஸ் பாராட்டியுள்ளார். மற்ற பல்கலைக்கழகங்களும் இப்படி நாத்திகப் படிப்பை அளித்திட முன்வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
(‘தி நியூயார்க் டைம்ஸ்’, 30.05.2016)
ஆக, உலகின் பல நாடுகளிலும் மதமற்றோர் எண்ணிக்கையும், கடவுள் மறுப்பாளர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது ஆய்வுகளின் மூலம் அய்யத்திற்கு இடமின்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பெற்ற சிந்தனை மாற்றங்களைவிட இனிவரும் இளைஞர்கள் இன்னும் விரைவில் புரிதலும், தெளிவும் பெறுவர். விழிப்புணர்வும், அறிவியல் நோக்கும் வளரும். அதன் விளைவாய் கடவுளும், மதமும் காணாமல்போகும் காலம் வெகு குறுகிய காலத்தில் உள்ளது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை!
அப்படிப்பட்ட மதமற்ற உலகம் மலரும்-போது மனிதம் தழைக்கும். மக்களிடையேயுள்ள ஏற்றத்தாழ்வுகள் நீங்கும்! இதை இன்னும் விரைவுபடுத்த ஒவ்வொருவரும் மற்றவருக்கு விழிப்பூட்ட வேண்டியது சமுதாயக் கடமையாகும்.
-உண்மை,16-30.6.16

ஞாயிறு, 12 ஜூன், 2016

பகுத்தறிவாளர் தபோல்கரை படுகொலை செய்த இந்துத்துவாவாதி கைது


கல்புர்கி, பன்சாரேவை கொன்றதும் இந்த கும்பல் தானா?
படுகொலை செய்யப்பட்ட பகுத்தறிவாளர்கள்

புனே ஜூன் 12 புனேயை சேர்ந்த தலைசிறந்த பகுத்தறிவுவாதியும், சிறந்த சிந்தனையாளருமான நரேந்திர தபோல்கர் கடந்த 2013ஆ-ம் ஆண்டு ஆகஸ்டு 20-ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இரண்டு ஆண்டுகளாக நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் எந்த ஒரு முன்னேற் றமும் இல்லாததால் இந்த வழக்கை  மத்திய புலானாய்வுத் துறைக்கு  மாற்றி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, இந்தக் கொலை வழக்கை மத்தியப் புலானாய் வுத்துறை. அதிகாரிகள் விசா ரித்து வந்தனர். இந்த நிலையில், தீவிர விசாரணைக்கு பின்னர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் தொடர்புடைய முக் கிய குற்றவாளியை சி.பி.அய். அதிகாரிகள் ஜூன் 9-ஆம் தேதி  மும்பையை அடுத்த பன்வேல் என்ற என்ற நகரத்தில்  கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் வீரேந்திரசிங் தாவ்டே என்பதும், அவர் சனா தன் சன்ஸ்தாவின் உறுப்பினர் முக்கிய உறுப்பினர் என்பதும் தெரியவந்துள்ளது. அவர் காது, மூக்கு, தொண்டைக்கான மருத் துவர் என்னும் மற்றொரு தக வலும் வெளியாகியுள்ளது.
மூன்றாண்டுகளுக்குப்
பிறகு கைது

நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்குப் பிறகு, முக்கிய குற்றவாளியை சி.பி. அய். கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இக்கொலை தொடர்பாக கர்நாடகா, மகாராஷ்டிரா மாநில காவல்துறையினர் இணைந்து புலன்விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் ஆரம்பத் தில் இருந்தே சனாதன் சன்ஸ்தா என்ற இந்து தீவிரவாத அமைப் பினர் தொடர்புடைய பல சான்றுகள் கிடைத்தன.

இந்த நிலையில் 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சனாதன் சன்ஸ்தா விற்கு உறுப் பினர்களைச் சேர்க்கும் பிரிவின் தலைவராக செயல்பட்ட சமீர் என்பவரை கோலாப்பூரில்  கர் நாடக மாநில காவல் துறை யினர் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து  விசாரித்து வந்தனர்.

விசாரணையின் போது அவ ருடைய வீட்டில் இருந்து கைப் பற்றப்பட்ட நாட்குறிப் பேட்டை ஆய்வு செய்தனர். அதில் உள்ள தொலைப்பேசி தொடர்பு எண்கள் அனைத்தும் மங்களூரு, புனே, மும்பை போன்ற நகரங்களில் உள்ள நபர்களின்   எண்களாகும்.  இந்த எண்கள் அனைத்தும்  நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே மற்றும் கர்நாடகாவில் வைத்து கொலை செய்யப்பட்ட கல்புர்கி ஆகிய மூவரின் கொலை பற்றிய சந்தேக வளையத்திற் குள் வந்தவர்களின் தொடர்பு எண்கள் என்பது தெரிய வந் தது.  இதில் உள்ளவர்கள் அனை வரும் சனாதன் சன்ஸ்தா என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த வர்கள் எனவும் தெரியவந்துள் ளது. இந்தப் பட்டியலில் உள் ளவர்களைத் தீவிரமாக விசாரித் தும் அவர்களிடம் கைப்பற்றப் பட்ட ஆவணங்களை வைத்தும் நரேந்திர தபோல்கரின் கொலை யில் மூளையாக செயல்பட்ட வீரேந்திரசிங் தாவ்டே  கைது செய்யப்பட்டுள்ளார்.

சனாதன் சன்ஸ்தா

கோவா நகரில் உள்ள சனாதன் சன்ஸ்தா தலைமை அலுவலகம் மூடநம்பிக்கையின் தலைமையிடமாகத் திகழ் கிறது. இந்து அமைப்புகள் நடத்தும் கல்விச் சாலைகள், கோவாவிற்கு மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் போது சனாதன் சன்ஸ்தாவிற்கு கட்டாயம் அழைத்துச் செல் லும். அங்கு குழந்தைகளுக்கு மூளைச்சாயம் ஏற்றப்படும். இது குறித்து பல்வேறு புகார் கள் எழுந்த போதிலும் அதன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

காஞ்சி சங்கராச்சாரியும், சனாதன் சன்ஸ்தாவும்

சனாதன் சன்ஸ்தாவின் பன்வேல்(மகாராஷ்டிரா) கிளைக்கு 10.6.2009 அன்று காஞ்சி சங்கராச்சாரி வந்தார். அப்போது அவர் கூறியதாவது: சனாதன் சன்ஸ்தா இந்து மதத்தின் பாரம்பரியம், வழி பாட்டுமுறை மற்றும் இந்துக் களின் பாதுகாவலராகச் செயல் படுகிறது. சனாதன் சன்ஸ்தா வின் செயல்பாட்டின் மூலமாக இந்துமத பாரம்பரியம் மீட் டெடுக்கப்பட்டுக் கொண்டு வருகிறது. விரைவில் இந்தியா முழுவதும் இந்து தர்மத்திற்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்ட வழிபாட்டு முறைகளும், பாரம் பரிய பழக்க வழக்கங்களும் மறுபிறவி எடுக்கும். இந்தப் பணியில் சனாதன் சன்ஸ்தா தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று கூறினார்.   கோவா, மகாராஷ்ரா வில் நடந்த பல்வேறு குண்டு வெடிப்புகளில் இந்த அமைப் புகளுக்கு தொடர்பு இருப்பது உறுதியானது. இந்த அமைப் பைச் சேர்ந்தவர்கள் பலர் சிறையில் உள்ளனர்.

பகுத்தறிவாளர்
கொலை ஏன்? 

நரேந்திர தபோல்கர், கல் புர்கி மற்றும் கோவிந்த பன் சாரே போன்றவர்கள் மகாராஷ் டிரா, கர்நாடகா, கோவா போன்ற பகுதிகளில் நடக்கும் மூடநம்பிக்கை செயல்பாடு களை கடுமையாக எதிர்த்து வந்தனர். மேலும் மதச்சடங் குகள் மூலம் பணம், காலம், மக்களின் உழைப்பு வீணாகிறது என்ற கருத்து தபோல்கரின் பொதுக்கூட்டங்கள் வாயிலாக மக்களிடையே மிகவும் வேக மாக பரவ ஆரம்பித்தது, முக்கி யமாக தீவிர விநாயகர் வழி பாட்டை மேற்கொண்டிருந்த மக்கள் தபோல்கரின் கருத்துக் களை மிக விரைவில் ஏற்றுக் கொண்டனர்.

இதன் தாக்கம் 2005-ஆம் ஆண்டு 35000 விநாயகர் மண் டல்கள் புனேவில் இருந்தன. 2011-ஆம் ஆண்டு வெறும் 8000 மண்டல்களாக குறைந்து விட்டது.  இளைஞர் அமைப் புகள் பல தபோல்கரின் கருத் துக்களால் ஈர்க்கப்பட்டு சமூக சேவையில் ஈடுபட்ட காரணத் தால்தான் விநாயகர் மண்டல் கள் குறைந்துவிட்டன.

இது போன்ற பல்வேறு மதம் தொடர்பான விழாக்களில் ஈடு பட்ட இளைஞர்கள் சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர்.

இதனால் சனாதன் சன்ஸ் தாவின் பிரச்சாரங்களில் பெரி தும் பாதிப்பு ஏற்பட்டது, சனா தன் சன்ஸ்தாவிற்கு உறுப்பி னர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துகொண்டே சென்றது ஆகவே மிகவும் திட்டமிட்டு இந்த அமைப்பினர் நரேந்திர தபோல்கர், கல்புர்கி மற்றும் கோவிந்த பன்சாரேவை கொலை செய்துள்ளனர்.
-விடுதலை,12.6.16

செவ்வாய், 7 ஜூன், 2016

நாத்திகர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது


சீனா 90; ஜெர்மன் 60; இஸ்ரேல் 57 சதவிகிதம் கடவுள் மத நம்பிக்கையற்றவர்கள்!



புதுடில்லி, மார்ச் 23_ உலகில் கடவுள், மத நம்பிக்கை யற்றவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.
நார்வே நாட்டில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பெருகிவருகிறார்கள் என்கிற ஆய்வுத் தகவல் வெளியாகி உள்ளது.
நார்வே நாட்டில் சுமார் நான்காயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட ஆய்வில், 39 விழுக்காட்டினர் முற்றிலும் கடவுள் நம்பிக்கையற்றவர்களாக இருப்பதாகக் குறிப் பிட்டுள்ளனர். 37 விழுக்காட்டினர் கடவுள்மீதான நம்பிக்கை கொண்டிருப்பதாகக்குறிப்பிட்ட அதேநேரத் தில், 23 விழுக்காட்டினர் கடவுள்குறித்து எவ்வித கருத் தையும் கொண்டிருக்கவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளதாக ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கெனவே 1985ஆம் ஆண்டில் முதல்முறையாக கடவுள் நம்பிக்கைகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக 50 விழுக்காட்டினர் கூறியிருந்தனர். தற்போது அவ்வெண் ணிக்கை பெருமளவில் சரிந்து 37 விழுக்காடாகிவிட்டது. 1985ஆம் ஆண்டில் கடவுள் நம்பிக்கையற்றவர்களாக அய்ந்தில் ஒரு பங்கினர் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர். ஆனால் தற்போது அவ்வெண்ணிக்கை 39 விழுக்காட் டளவில் உயர்ந்துள்ளது.
நார்வே நாட்டைச்சேர்ந்த ஜான் பால் பிரெக்கே தற்போது நார்வேயினரிடையே கடவுள் நம்பிக்கைகுறித்த ஆய்வை 4000 பேரிடம் மேற்கொண்டார். அவர் கூறும்போது,
30 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தப் பணியைத் தொடங்கியதிலிருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் பெருமளவிலான மாற்றத்தைக் காண முடிகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் சம அளவிலான எண்ணிக்கையில் இருந்தனர். ஆனால் தற்போது கடவுள் நம்பிக்கையற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் 29 விழுக்காட்டினர் மட்டுமே கடவுள்மீதான நம்பிக்கை கொண்டிருப்பவர்களாக உள்ளனர். ஆய்வுத் தகவல் குறித்து பிரெக்கே கூறும்போது, நாடுமுழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வில், பிறப்பால் அனைத்து மதங் களைச் சேர்ந்தவர்களிடமும் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. கேள்வியில் கடவுள் என்பது குறித்த வரை யறையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றார்.
பல்வேறு நாடுகளிலும் அதிகரித்துள்ள நாத்திகர் களின் எண்ணிக்கை
கேல்லப் இன்டர்நேஷனல் மற்றும் பியூ ஆய்வு மய்யம் இணைந்து கடவுள்மீதான நம்பிக்கை குறித்த ஆய்வு மேற்கொண்டன. ஆய்வு முடிவுகளின்படி, கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் மற்றும் மதமற்றவர்கள் பன்னாட்டளவில் மக்கள் தொகையில் 33 விழுக்காட்டளவில் உள்ளனர்.
சமூகத்தின் அங்கீகாரம் பெற்ற நாத்திகர்கள் நாடுகளின் வரிசைப்படி,
சீனா மற்றும் ஹாங்காங்
சீனாவில் 90 விழுக்காட்டினரும், ஹாங்காங்கில் 70 விழுக்காட்டினரும் தங்களை மதமற்றவர்களாக அல்லது நாத்திகர்களாக குறிப்பிட்டுள்ளனர்.
செக் குடியரசு
யுஎஸ்எஸ்ஆர் எனும் சோவியத் ரஷ்யாவின் அங்கமாக இருந்து பிரிந்துள்ள நாடான செக் குடியரசு அய்ரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் அதிக விழுக்காட்டளவில் நாத்திகர்களைக் கொண்டுள்ளது. 45 விழுக்காட்டினர் தாங்களாகவே நாத்திகர்களாக இருந்துவந்துள்ளதாகவும், 30 விழுக்காட்டினர் கடவுள் நம்பிக்கையுடன் இருந்தவர்கள் தற்போது நாத்திகர்களாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஜப்பான்
பழைமைகள் மற்றும் மதச்சடங்குகளை ஒதுக்கிவிட்டு இருப்பவர்களாக 25 விழுக்காட்டினரும், மேலான சக்தி என ஒன்றும் நம்புவதற்கில்லை என்கிற அளவில் 31 விழுக்காட்டினரும் குறிப்பிட்டுள்ளனர்.
ஜெர்மனி
ஜெர்மனி நாட்டில் 60 விழுக்காட்டினர் தங்களை நாத்திகர்களாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இசுரேல்
இசுரேலியர்களில் 57 விழுக்காட்டினர் தங்களை மதமற்றவர்களாகக் குறிப்பிட்டுள்ளனர். கடவுள் நம் பிக்கையிலிருந்து நாத்திகர்களாக 8 விழுக்காட்டினர் மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இசுரேல் நாளிதழ் ஹாரெட்ஸ் நாத்திகக் கருத்துகள் இசுரேல் சமூகத்தினரிடையே ஆழமாக வேரூன்றி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, சுவீடன், சுவிட்சர்லாந்து, கனடா, அய்ஸ்லாந்து மற்றும் தென் கொரியா உள்ளிட்ட பிற நாடுகளில் கடவுள் நம்பிக்கை என்பதில் சுதந்திர அணுகு முறையுடன் இருந்துவருவதாக ஆய்வுத்தகவல் சுட்டிக் காட்டி உள்ளது.
_டைம்ஸ் ஆப் இந்தியா, 22.3.2016
-விடுதலை,23.3.16

ஞாயிறு, 5 ஜூன், 2016

நாஸ்திகம்


5.5.1929 (குடிஅரசிலிருந்து)
எனக்கு விக்கிரக ஆராதனை யில் சிறிதும் நம்பிக்கை இல்லை. ஜெபம் வேண்டாம்.
கோயில்சென்று கும்பிட வேண்டாம். சாம்பிராணி முதலிய செலவு செய்து பூஜைபோட வேண்டாம், தாழ்த்தப்பட்டவர் களையும் தீண்டாதவர்கள் என்று கொடுமை செய்யப்பட்டவர் களையும் நெற்றிவேர்வை நிலத் தில் சிந்த சரீரத்தால் வயல்களில் பாடுபட்டு உழைக்கின்ற ஏழைகளையும் பார். அவர்களை கவனிப்பதில் ஈஸ்வரனைக் காண். - ரவீந்திரநாத் தாகூர்
சன்மார்க்கங்களுக்கு முக்கிய தடைகள் சமயங்கள் - மதங்கள், மார்க்கங்கள் என்பர். அவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் வருணாசிரமம் முதலியவைகளும் எங்கள் மனதில் பற்றாவண்ணம் அருள் செய்தல் வேண்டும்.- இராமலிங்க சுவாமிகள்
பச்சை நாஸ்திகம்
சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு சுகம் பெறுவதெக்காலம்
சாத்திரத்தைச் சுட்டு மனுதர்ம சாஸ்திரத்தைச் சுட்டு பொசுக்கி, சதுர்மறையை பொய்யாக்கி மேல்கண்ட சாஸ்திரத்திற்கு ஆதாரம் என்று சொல்லப்படும் நான்கு வேதங்களையும் சுத்தப்புரட்டு என்று தள்ளி சூத்திரத்தைக் கண்டு பகுத்தறிவின் ஆராய்ச்சியில் இயந்திரங்களைக் கண்டுபிடித்து சுகம் பெறுவதெல்லாம்  அவைகளினால் மனித சமூகமும் சுகமடைவது எப்போது வாய்க்கப் போகின்றது?
- பத்திரகிரியார்

-விடுதலை,26.2.16

வெள்ளி, 27 மே, 2016

நாத்திகப் படிப்பிற்கான உயராய்வு இருக்கை!

அமெரிக்க நாட்டு மியாமி பல்கலைக்கழகத்தின் சாதனை!
நியூயார்க், மே 26_ அமெ ரிக்க நாட்டில் மதத்தினை புறந்தள்ளும் போக்கு அதி கரித்து வரும் நிலையில் மியாமி பல்கலைக்கழகம் ஓர் உயராய்வு இருக்கையினை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே நாத்திகம், மனிதநேயம் மற்றும் மதச் சார்பின்மை நெறி பற்றிய படிப்பிற்கான கல்வி உய ராய்வு இருக்கையாக (Study Chair Atheist)  அது ஏற்படுத்தப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும்.
அமெரிக்க நாட்டில் புளோரிடாவில் வசித்து வரும் 83 வயதினை எட்டி யுள்ள ஓய்வு பெற்ற வணி கரும், பார்பிசன் பன் னாட்டு மாதிரிப் பள்ளி யின் மேனாள் தலைவரும், சீரிய நாத்திகருமான லூயிஸ் ஜே அப்பிக்னானி கொடையாக அளித்த 2.2. மில்லியன் டாலர் நிதி ஆதாரத்துடன் நாத்திக உயராய்வு இருக்கை நிறு வப்பட்டுள்ளது. பல்வேறு மனிதநேய, மதச்சார்ப்பற்ற பணிகளுக்கு நன்கொடை வழங்குவதை வாடிக்கை யாக அப்பிக்னானி கொண் டிருப்பவர்.
நாத்திகர்கள் சமுதாயத் தில் வேறுபடுத்தப்பட்டு பார்க்கப்படுவதை களை வதின் நோக்கமே தம்மை நாத்திக உயராய்வு இருக் கைக்கு நன்கொடை வழங் கிட வைத்தது. தமது கொடை, நாத்திகம் முறையான, சட் டப்படியான வாழ்வியல் பண்பாக போற்றப்படுவதற் கான ஒரு சிறு முயற்சியே என அபிக்கானி கூறு கிறார்.
மியாமி பல்கலைக்கழ கத்தில் நாத்திக உயராய்வு இருக்கையின் அங்கமாக செயல்படுவதற்கு சான்றோர் பெருமக்களை தெரிவு செய் வதற்காக ஒரு குழுவினை நியமித்து, உயராய்வு இருக்கை அமைக்கப்பட் டுள்ள முறையான அறிவிப்பு  விரைவில் வெளியாகும்.
பெரும்பான்மையான கல்லூரிகள் மற்றும் பல் கலைக்கழகங்களில் மதம் பற்றிய துறைகள் மற்றும் மதம் சார்ந்த கல்வி புகட் டும் பேராசிரியர்கள் செயல் படுவது ஒரு வாடிக்கையாக உள்ளது. தேவாலயங்கள் அளித்து வரும் நிதி மற்றும் பொருளுதவிகளால் அவை செயல்பட்டு வருகின்றன. தற்பொழுது நாத்திகம் மற்றும் மதச்சார்பின்மை படிப்பு ஏற்றுக்கொள்ளப் படும் கல்விக்களமாக மாறி வருகிறது. ஆராய்ச்சி, கொள் கைகள், கல்வி மாநாடுகள், பயிற்சி அளித்தல் என்ற நிலையினை அடுத்து நாத் திகத்திற்கான உயராய்வு இருக்கை இப்பொழுது முதன்முதலாக உருவாக் கப்பட்டுள்ளது.
“மியாமி பல்கலைக் கழகம் எடுத்திட்ட ஒரு துணிச்சலான செயல்” என “கடவுள் ஒரு பொய் நம் பிக்கை (The God Delusion) நூலாசிரியரும், பரிணாம வியல் உயிரியலாளரும் நாத்திகப் பெருந்தகையு மான ரிச்சர்டு டாக்கின்ஸ் பாராட்டியுள்ளார். மற்ற பல்கலைக்கழகங்களும் இப்படி நாத்திகப் படிப்பை அளித்திட முன்வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“மத விலங்கினை உடைத்திடும்'' நோக்கத்தில் நாத்திக உயராய்வு இருக்கை ஏற்படுத்தப்பட் டுள்ளது அதி முக்கியத்து வம் வாய்ந்தது'' எனவும் ரிச்சர்டு டாக்கின்ஸ் பிரிட் டனிலிருந்து தொலைபேசி வாயிலாக செவ்வி மூலம் தெரிவித்துள்ளார்.
பிஇடபிள்யூ (PEW) ஆராய்ச்சி மய்யம் நடத்திய ஆய்வின் மூலம் அமெரிக் காவில் மதச்சார்பற்றோர் என வெளிப்படுத்திக் கொள் வோரின் எண்ணிக்கை அண்மைக்கால குறுகிய இடைவெளியில் மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது என தெரிய வருகிறது. அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் மதச் சார்பற்றோரின் எண் ணிக்கை 2007ஆம் ஆண் டில் 16 விழுக்காடு என இருந்த நிலை 2014ஆம் ஆண்டில் 23 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இளை யோரில் பலர் மத நம்பிக்கையில் ஆர்வம் அற்றவர்களாக உள்ளனர். புத்தாயிரம் ஆண்டு அறி பருவர் ((adult)) எண்ணிக்கையினரில் 35 விழுக்காட் டினர் தம்மை நாத்திகர், கடவுள் கவலையிலார் அல்லது மத நம்பிக்கை அற்றோர் என தெரியப் படுத்தியுள்ளனர்.
‘மதச்சார்பற்ற அமெ ரிக்கர்கள் (Secular Ameri cans)’ எனும் மனிதநேய அமைப்பினர் அரசியல் பாதையில் பயணிக்க முடி வெடுத்துள்ளனர். அடுத்த மாதத்தில் அமெரிக்காவில் கடவுள் நம்பிக்கையற் றோர், தலைநகர் வாசிங் டனில் உள்ள லிங்கன் நினைவிடத்தில் -பகுத்தறி வுப் பேரணி (Rally of Reason) ஒன்றை  நடத்தி  தமது எண்ணிக்கை வலி மையினை அமெரிக்க காங் கிரசுக்குக் காட்டி, அர சை யும் மதத்தையும் (கிறிஸ்தவ மதம்) பிரிக்கக்கோரு வதாக உள்ளனர்.
“நாத்திக உயராய்வு படிப்பு'' என்பதற்கான வித்து 15 ஆண்டுகளுக்கு முன்பு முளைத்திட ஆரம் பித்தது- ‘மியாமி பல் கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியர் ஹார்வி சீகல் (Harvey Siegel) நாத்திகக் கொடையாளர் லூயிஸ் அப்பிக்னானியும் கலந்து பேசி அன்றே முடிவெடுத் தனர். அமெரிக்க மக்கள் மத்தியில் நாத்திகம் பற்றிய ஒருவித அவமதிக்கும் பார் வையும், இழித்துரைக்கும் போக்கும் நிலவிடும் நிலையில், பல்கலைக்கழக உயராய்வு இருக்கைக்கு “நாத்திகம்'' எனும் பெயர் வைத்திடுவதில் அதிகார நிலையாளர்களுக்கு தயக்கம் நிலவிய சூழலில், தத்துவப் பேராசிரியர் ஹார்வி சீகல் தான் நாத் திகம் பற்றி எடுத்துரைத்து, விளக்கிச் சொல்லி ‘நாத்திக உயராய்வு இருக்கை’ என பெயர் ஏற்பட காரணமாக இருந்தார்.
‘நாத்திகம்’ பெயர் பற்றி முடிவெடுக்கையில், பல் கலைக்கழகத்தினரை ஒத்துக்கொள்ள வைத்திட மதம் சார்ந்த படிப்புகளில் கடைபிடிக்கப்படும் அணுகுமுறையினையே பல்கலைக்கழகம் மேற் கொள்ளலாம் என பரிந் துரை செய்யப்பட்டது. மதம் சார்ந்த படிப்புகளில் எந்த ஒரு மதத்தினையும் வலியுறுத்தும் வகையில் படிப்பு முறை இல்லாதது போலவே, நாத்திகப் படிப் பிலும், நாத்திகக் கொள்கையினை வலியுறுத்திடும் தன்மை இல்லாதவாறு நாத்திக உயராய்வு இருக்கை அமைக்கப்படலாம் என பரிந்துரை வழங்கப்பட்டது. “நாத்திகம்'' பெயர் கொண்டு உயராய்வு இருக்கை ஏற் படுத்தப்படுவதற்கு நாத் திகக் கொள்கையாளர்கள் எடுத்திட்ட முயற்சி போற் றுதலுக்கும் பாராட்டுதலுக் கும் உரியது.
அமெரிக்காவில் நாத் திகம், மதச்சார்பின்மை, அய்யுறவியல் (skepticism) பற்றிய புரிதல் மற்றும் போற் றுதல் மக்களிடையே,குறிப் பாக கல்வி நிலையங்களில் அதிகரித்து வருகிறது.
தென் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பிட்சர் கல்லூரியில் அய்ந்து ஆண்டு களுக்கு முன்னரே ஆயிரம் மாணவர்களைக் கொண்டு திறந்த சிந்தனைக் கலைப் பள்ளியினை நடத்தி வரு கின்றனர். இந்த பள்ளியில் பில் சக்கர்மேன் (Phil Zuckerman) எனும் மதம் பற்றிய சமூகவியலாளர் மற்றும் மதச்சார்பின்மை பற்றிய ஆறு பேராசிரியர் கள் நான்கு பாடப் படிப் பினை நடத்தியுள்ளனர். இத்தகைய பாடப்படிப்பு களுக்கு மாணவர்களி டையே ஆர்வம் பெருகி வருகிறது. சென்ற ஆண்டு நடை பெற்ற ‘மதச்சார்பின்மை & அய்யுறவியல்’ பாட வகுப் பில் சேர வந்த மாணவர் களில் பெரும்பாலானோரை அடிப்படைக் கட்டமைப்பு வசதி இல்லாத கார ணத்தால் அனுமதி மறுக் கப்பட்ட நிலை இருந்தது-. நாத்திகச் சான்றோர் சிலர் மதமின்மை மற்றும் மதச் சார்பின்மை ஆராய்ச்சி தொடர்பகம் எனும் அமைப்பின் கீழ் தங்களது நான்காவது மாநாட்டினை ஜூரிச் நகரில் நடத்திட உள்ளனர். ‘மதச்சார் பின்மை மற்றும் மத மின்மை’ எனும் ஆராய்ச்சி இதழினினையும் அவர்கள் நடத்தி வருவது பலரது பாராட்டையும் பெற்றுள் ளது.
சமூகவியலாளர் சக்கர் மேன் மதச்சார்பற்ற படிப் பிற்கான உண்மையான தேவை ஏற்பட்டுள்ளது என கூறுகிறார். மேலும் ‘மதச்சார்பின்மை பண்பு அதிகரிப்பது தொடரும் நிலையில், அமெரிக்காவில் மட்டுமின்றி, உலகில் அனைத்து நாடுகளிலும் உள்ள மதச்சார்ப்பற்ற மக் கள், மதச்சார்பற்ற பண் பாடு, மதச்சார்பின்மை ஆகி யவைகளை ஒருங்கி ணைத்து கொள்கை சார்ந்த அரசியல் அமைப்பு தொடங்கிட வேண்டும்’ எனும் கருத்தினையும் அவர் தெரிவித்து உள்ளார்.
உகலகம் முழுவதிலும் நாத்திகம், மதச்சார்பின்மை, மதமின்மை கருத்துடனான வாழ்வியல் பண்பாடு பெருகி வருகிறது என்பதற்கு “நியூ யார்க் டைம்ஸ்'' இதழில் வெளிவந்த மேற்குறிப் பிட்ட செய்திகளே சான் றாக அமைந்துள்ளன. வருங் காலம் நாத்திகம் தழைத்து செழித்தோங்கும் மனித நேயம் போற்றப்படும் கால மாக உருவாகும் என்பது உறுதியாகி வருகிறது.
-விடுதலை,26.5.16

ஞாயிறு, 22 மே, 2016

நாத்திகம் பற்றி வெளிநாட்டு அறிஞர்கள்


நாத்திகன் வாழ்க்கையை நடத்த குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் தெரியாதவன். கண்ணுக்குப் புலப்படாத வருவாய் இல்லாதவன்.
(ஜான் புச்சன், ஸ்காட்லாந்து, வரலாற்று ஆசிரியர்)
நான் ஒரு நாத்திகன் பல அறிவிலிகள் கண்மூடித் தனமாக நம்புவதை நானும் நம்புவதாக நடிக்கமாட்டேன்.
(க்ளாரென்ஸ்டாரோ, வழக்கறிஞர்)
ஆண்களைக் கவரும் அழகை இழந்த பெண் முதுமையில் கடவுள் பக்கம் திரும்புகிறாள்
(பால்காக், ஃப்ரெஞ்சு நாவலாசிரியர்)
தோல்வி ஏற்படும் போது கடவுள் பெயரைச் சொல்லாதே, வெற்றி ஏற்படும் நேரம் பார்த்துச் செயலாற்று.
(ஆம்ப் ரோஸ் பியர்ஸ், அமெரிக்க எழுத்தாளர்)
கல்லினாலும் மரத்தினாலும் ஆண், பெண் கடவுள் களைப் படைப்பதால் எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
(ஜான் பில்லிங்ஸ் என்ற புனைப் பெயர் கொண்ட என்றி வீலர் ஷா என்னும் அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர்)
கடவுள் என்பது அகராதியில் கடவு(வழி) என்னும் சொல்லுக்கு அடுத்து உள்ளது
(சாமுவேல் பட்லர், ஆங்கில நாவலாசிரியர்)
மருத்துவர் நோயை குணப்படுத்துகிறார். நன்றி ஆண்டவனைச் சேருகிறது.
(ஃப்ரங்களின், அமெரிக்க விஞ்ஞானி)
ணீ இருப்பவையெல்லாம் கடவுள் அல்ல. இல்லாத ஒன்றே கடவுள் (கூர்மான்ட், ஃப்ரெஞ்சு தத்துவ நூலாசிரியர்)
-விடுதலை,29.1.16

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

பெரியார் திடல் பொது அரங்கம். பொது இடத்திலே எல்லோரும் இருக்க வேண்டும்.

நற்கருத்துகளைப் பரப்புவதாக நாட்டியக் கலை அமைய வேண்டும்

தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

சென்னை, டிச. 31
- சரஸ்வதி பரத நாட்டிய வித்யாலயா சார்பில், உலக சாதனையாக, தொடர்ந்து, 15 மணி நேரம் பரத நாட்டியத் திருவிழா சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நேற்று (30.12.2015) நடைபெற்றது.
காலை 5 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணிவரை தொடர் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்று உலக சாதனை படைத்துள்ளது. நிகழ்ச்சியின் இறுதி யில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்துகொண்டு நாட்டியம் ஆடிய குழந்தைகள் மற்றும் குழுவினர் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அனைவரையும் பாராட்டிப் பேசினார்.
தமிழர் தலைவர் பாராட்டு
தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டுரையில் குறிப்பிட்டதாவது:
உலகம் இதுவரை காணாத சாதனை என்கிற பெருமைக்குரிய 14 மணிநேரத்துக்கு தொடர்ந்து ஆடி சாதனை செய்தது இந்த பெரியார் திடலிலே ஒரு பெரிய வரலாற்று நிகழ்ச்சியாகும்.
இது ஓர் எதிர்பாராத வாய்ப்பு எனக்கு. எதிர்பார்க் கவே இல்லை. வாழ்க்கையில் எதிர்பாராது கிடைக்கின்ற இன்பத்துக்கு இணையே இல்லை. உங்கள் முகங்களை எல்லாம் பார்க்கின்ற போது, நீங்கள் ஆடிய ஆட்டத் தையெல்லாம் சுவைக்கின்றபோது, மறக்க முடியாத அனுபவம் ஏற்பட்டிருக்கின்றது.
நல்ல பூக்கள் பூத்துக் குலுங்குகின்ற பூந்தோட்டத் திலே, நடுவிலே சென்றால், எவ்வளவு பெரிய மகிழ்ச்சி ஏற்படுமோ அதுபோல, சிரித்த மலர்களாக, நீங்கள் ஆடியது, குழந்தைகளாக ஆடவில்லை, மலர்களாக ஆடி, நீங்கள் எங்களை தென்றலைப்போல மகிழ் வித்திருக்கிறீர்கள்.
உங்களைத் தயாரித்திருக்கிற தோட்டக்காரர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. மிகப்பெரிய அளவுக்கு இந்த நிகழ்ச்சியிலே வித்தியாசமாக இருக்கிறது. என்னடா இது? கருப்புச் சட்டைக்காரர்கூட இங்குவந்து உட்கார்ந்திருக்கிறாரே? இவரும் சேர்ந்திருக்கிறாரே என்று கூட நினைக்கலாம்.
தமிழ் இணைக்கிறது
நம்மை எது பிரிக்கிறது என்பது முக்கியமல்ல. எது  இணைக்கிறது என்பதுதான் முக்கியமானது. அந்த அடிப்படையிலே கலை நம் எல்லோரையும் இணைக் கிறது. தமிழ் இணைக்கிறது. ஆதிகாலத்து மனிதன் முதன்முதலிலே அவன் இருந்த நேரத்திலேகூட பாட்டுப்பாடினான்.
பிறகு ஆட்டம் ஆடினான். எனவே, அந்த ஆட்டமும், பாட்டும்தான் வாழ்க்கையிலே நாம் இளைப்பாறுவதற்கு புத்துணர்வு ஊட்டுவதற்கு மிகப்பெரிய மாமருந்து. அதை இந்த செல்வங்கள் தந்திருக்கிறார்கள். காலை 5 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணி வரை நடத்தியிருக்கிறார்கள் என்றால்,
இதில் உலக வரலாற்றில் நீங்கள் இடம் பிடித்திருக் கிறீர்கள் என்று சொன்னால், இந்தப் பெருமையை, இந்தத் துணிவை மேலும்மேலும் பெருக்கிக்கொள்ள வேண்டும். இதை தயாரித்தவர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. எனவே, இப்படிப்பட்ட இந்த முயற்சி சிறப்பாக இருக்க வேண்டும்.
இது ஒரு பொது அரங்கம்!
இங்கே சொன்னார்கள், இந்த அரங்கத்தை சிறப்பாக கொடுத்தீர்கள் என்று. இந்த அரங்கத்தில் உள்ளே வந் தீர்கள் என்றால், சரசுவதி இருக்கிறது, மற்றது எல்லாம் இருக்கிறதே இவர்கள் எல்லாம் மாறிவிட்டார்களா என்று சிலபேர் நினைக்கலாம். நாங்களும் மாறவில்லை, அவர்களும் மாறவில்லை.
அவரவர்கள் கொள்கை அவர்களிடம் இருக்கிறது. ஆனாலும், தந்தை பெரியார் அவர்கள் இந்த அரங்கத்தை உருவாக்கியபோது ஒன்றைச் சொன்னார்கள்.
எவ்வளவு மாறுபட்ட கருத்து உள்ளவர்கள், வேறுபட்ட கொள்கை உள்ளவர்களுக்குகூட இது பொது அரங்கம். பொது இடத்திலே எல்லோரும் இருக்க வேண்டும்.  என்னைத் தாக்கிப் பேசுகிறவர் களாக இருந்தால்கூட அவர்களுக்கும் நீங்கள் கொடுக்கவேண்டும் என்று எங்கள் தொண்டர்களுக்குக் கட்டளை இட்டார்கள்.
இன்றைக்கு இந்த அரங்கம், ஒரு பொது அரங்கம், இது அழகாக இருக்கிறதோ இல் லையோ, நீங்கள் இதை அழகு படுத்தியிருக்கிறீர்கள். அதற்காக நன்றி. நன்கு பயிற்சி அளித்துள்ளீர்கள். இந்த பிள்ளைகள் இன்னும் சிறப்பாக உருவாக வேண்டும். நாங்கள் களைப்பில்லாமல் போராடுபவர்கள். நீங்கள் களைப்பில்லாமல் ஆடுகிறவர்கள். அந்த வகையிலே மகிழ்ச்சிக்குரியவர்கள்.
எதிர்காலத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் சிறந்த நாட்டியப் பேரொளிகளாக சிறந்து விளங்க வேண்டும். நாட்டிய செல்வங்கள் பெருக வேண்டும். அதன்மூலம் நல்ல கருத்துகள் மக்களுக்கு செல்ல வேண்டும். வாழ்க்கையிலே எல்லா கோணத்திலும் இருக்கின்ற செய்திகளையெல்லாம் எடுத்துச்சொல்லி,
‘செம்மொழி’ நடனத்தை பார்க்கிறபோது, எம்மொழி எவ்வளவு பெரிய சிறப்பான மொழி என்பதை குறுகிய காலத்திலே எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள். உங்களைத் தயாரித் திருக்கிற அத்துணை ஆசிரியர்களுக்கும் எங்கள் அன்பான பாராட்டுகள். மகிழ்ச்சி கலந்த பாராட்டுகள்.  வாழ்த்துகள். வாழ்க, வளர்க. நன்றி, வணக்கம். வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு!
- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டிப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியிலே உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளி நாயகம்,  தொழிலதிபர்  வி.ஜி.சந்தோஷம், சட்டக்கதிர் ஆசிரியர் வி.ஆர்.எஸ். சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பரத நாட்டிய நிகழ்ச்சி, 'அமெஸிங் வேல்டு ரெக்கார்டு' நிறுவனத்தில் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது. கடந்த, ஆண்டான 2014இல், சரஸ்வதி பரத நாட்டிய வித்யாலயாவைச் சேர்ந்த மாணவியர், தொடர்ந்து, 12 மணி நேரம் நடனம் ஆடி, 'ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சாதனையில் இடம் பிடித்தனர். அந்த சாதனையை, இப்போது அவர்களே முறியடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,31.12.15