திங்கள், 31 ஆகஸ்ட், 2015

ஒடிசாவில் நாத்திகர்களின் வளர்ச்சி 280 சதவீதம்


புதுடில்லி, ஆக. 30 சில நாட்களுக்கு முன் இந்திய மக்கள் தெகை கணக்கெடுப்பு ஆணையம், 2011ஆம் ஆண்டு மத அடிப்படையில் எடுக்கப் பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங் களை வெளியிட்டது. இதில், இந்தியாவின் மக்கள் தொகை 121.09 என தெரிவிக்கப்பட்டுள் ளது.
மேலும், 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர் களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றிய புள்ளி விபரமும் இதில் வெளியிடப்பட்டுள் ளது. இதில் முஸ்லிம் களின் மக்கள் தொகையா னது 0.8 சதவீதம் அதி கரித்து 13.8 கோடியி லிருந்து 17.22 கோடியாக அதிகரித்துள்ளது. அதே சமயம் இந்துகளின் வளர்ச்சி விகிதமானது 0.7 குறைந்துள்ளது என்று தெரியவந்ததால், அது பற்றி பல விவாதங்கள் நடந்து வருகிறது. ஆனால் இதில் ஒடிசா மாநிலம் பற்றி ஒரு சுவராசியமான செய்தி வெளிவந்துள்ளது. 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் அந்த மாநிலத்தில் நாத்திகர் களின் வளர்ச்சி 280 சதவீதம் என தெரிய வந் துள்ளது. அம்மாநிலத்தில் நாத்திகர் மக்கள் தெகை 2001-ல் வெறும் 20,195 இருந்துள்ளது. அதே சமயம் 2011-ல் 76,919 ஆக வளர்ந்துள்ளது.
-விடுதலை,30.8.15

பென்சில்வேனியாவில் 3 நாள்கள் நாத்திகர் மாநாடு

பென்சில்வேனியா, ஹாரிஸ்பர்க்கில் கடவுள் நம்பிக்கையற்றவர்களின் 3 நாள்கள் மாநாடு

நாத்திகர்கள், மனிதநேயர் கள் மாநாடு பென்சில்வேனி யாவில் ஹாரிஸ்பர்க்கில் செப்டம்பர் 11 முதல் 13ஆம் தேதி முடிய பெஸ்ட் வெஸ் டர்ன் பிரிமியர் பகுதியில் உள்ள தி சென்ட்ரல் விடுதி யிலும், 800 ஈ பார்க் டிரைவ் கான்பெரன்ஸ் சென்டரிலும் நடைபெறுகிறது.
கடவுள் நம்பிக்கை இல்லாத வர்கள் அல்லது கடவுள் இருக்கிறதா என்று அய்யப்பாட்டில் உள்ளவர்கள்  ஆகியோர் கூடுகின்றனர். அதே நேரத் தில் கடந்த சில ஆண்டுகளில், நாடுமுழுவதும் நாத்திகர்கள், கடவுள் கவலை அற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
லாண்ட்காஸ்டர் நகரில் மட்டும் இரண்டு பிரிவினராக நாத்திகர்கள், கடவுள் கவலையற்றவர்கள், கடவுள் நம்பிக்கைகளில் அய்யப்படுபவர்கள் மற்றும் சுதந்திர சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள். நான்கு ஆண்டு களுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட அமைப்புடன் மண்டல மத்திய பென் சில்வேனியா குழு இணைந்து மாதாந் திர சந்திப்பு லாண்ட்காஸ்டரில் நடைபெற்றுவருகிறது.
அந்த சந்திப்புகளைத் தொடர்ந்து மதத் தொடர்பற்றவர்கள், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பியூ புள்ளி விவரத்தின்படி, 2007ஆம் ஆண்டில்   16.1 விழுக்காடாக இருந்தவர்களின் எண்ணிக்கை 2014ஆம் ஆண்டில் 22.8 விழுக்காடாக அதிகரித்தது.
இந்த மாற்றங்கள் நடைபெற்று வரும் அதேநேரத்தில், இரு குழுக் களில் மூத்த குழுவாக உள்ள லாண்ட்காஸ்டர் சுதந்திர சிந்தனைச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஸ்காட் ரொஹோடிஸ் மற்றும் பென்சில்வேனியா கடவுள் நம்பிக்கை யற்றவர்கள் அமைப்பின் தலைவர் பிரெயின் ஃபீல்ட்ஸ் ஏற்பாட்டின்படி, ஹாரிஸ்பர்க் நகரில் 2012 ஆம் ஆண்டு முதல் முறையாக பென்சில் வேனியாவில் கடவுள் நம்பிக்கையற்ற வர்களின் கூட்டம் நடைபெற்றது.
ஹாரிஸ்பர்க்கில் மாநாடு
ஹாரிஸ்பர்க் மாநில அளவிலான மாநாடுகள் 2013ஆம் ஆண்டு பிலடெல்பியாவிலும், 2014ஆம் ஆண்டு பிட்ஸ்பர்க்கிலும் நடை பெற்றது. 2015ஆம் ஆண்டில் மாநில நாத்திகர்கள், மனிதநேயர்கள் மாநாடு பென்சில்வேனியாவில் ஹாரிஸ்பர்க் கில் செப்டம்பர் 11 முதல் 13ஆம் தேதி முடிய பெஸ்ட் வெஸ்டர்ன் பிரிமியர் பகுதியில் உள்ள தி சென்ட்ரல் விடுதி யிலும், 800 ஈ பார்க் டிரைவ் கான் பெரன்ஸ் சென்டரிலும் நடைபெறு கிறது.
மூன்று நாள்கள் நடைபெறுகின்ற மாநாட்டில் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் ஏராளமானவர்கள் பேசுகிறார்கள். இசை, நகைச்சுவை மற்றும் கவிதை உள்ளிட்ட பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறு கின்றன. லாண்ட்காஸ்டர் நகரில் உருவாகியுள்ள புதிய குழுவான ஏஎஸ்கே   (நாத்திகம், சமய நம்பிக் கையில்லாத அறிவுசார் அமைப்பு) பகுத்தறிவான எதிர்காலத்தை நோக்கி என்கிற தலைப்பில் கருத் தரங்க ஆய்வரங்கம் நடைபெறுகிறது.
மதத்திலிருந்து மீட்சி என்கிற அமைப்பின் செயல் இயக்குநர் சாரா மோர்ஹெட் முக்கிய பேச்சாளராக பேசுகிறார். இவர் வாஷிங்டன் டிசியில் நடத்த உத்தேசித்துள்ள  காரணங் களை ஆராயும் கூட்டத்துக்கான திட்டமிடலில் இணைந்து பணியாற்றி வருபவரும் ஆவார்.
மாநாட்டின் செயல் இயக்குநர் பொறுப்பேற்று  ஃபீல்ட்ஸ் உடன் இணைந்து செயல்பட்டுவருபவரான  ரொஹோடிஸ் கூறுகையில், பென்சில் வேனியாவில் உள்ள நாத்திகர்கள் மற்றும் மனிதநேயர்கள் ஆகியோர் இயக்க செயல்பாடுகள்குறித்து மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டதாகும் என்றார்.
ஃபீல்ட்ஸ் கூறுகையில், கல்வி புகட்டல் மற்றும் பொழுதுபோக்கு களுடன் உள்ள கலவையாக, நாத்திக சமூகத்தில் தொடர்புடைய மற்ற பிரச்சினைகள் குறித்து பேசுவார்கள் பேச்சாளர்கள் என்றார்.
அதிகரித்துவரும் வருகைப்பதிவு
கடந்த மூன்று ஆண்டுகளில் நாத் திகர்கள் சந்திப்பு மற்றும் கூட்டங் களில் வருகைதருவோர் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. முதல் மாநாட்டில் 100 பேர் பங்கேற்றனர். இந்த ஆண்டில் இரண்டு மடங்கில் நாத்திகர்கள் பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டனர்.
மாநாட்டின் முடிவில் குறிப்பிடத் தக்க நிகழ்வாக ஞாயிறு பிற்பகல் 3 மணியளவில் பட்டினியால் வாடுபவர் களுக்கான நாத்திகர்களின் சேவைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தொண்டூழியர்கள் 22,818 பிரவுன் பை உணவு உணவுப் பொட்டலப்பைகள் பென்சில்வேனியா மத்திய உணவு வங்கிக்கு அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்துக்கு ஆதரவளிப்ப வர்கள் அளிக்கும் நிதி 5,700 டாலர் அதிகரித்துள்ளது. நம்பிக்கைகளுக்கு அப்பால் அறக்கட்டளையின் சார்பில் 250 டாலர் அளிக்கப்படுகிறது. 20 ஆயிரம் பேருக்கான உணவுக்கு 5 ஆயிரம் டாலர் என்கிற இலக்கைத் தாண்டி நிதி குவிந்துள்ளது.
அவுட்ரீச் அறக்கட்டளையின்மூல மாக உணவுப்பொட்டலத்தில் சோறு டன் பீன் கேஸ்ரோல்ஸ் வழங்கப்படு கிறது. இத்திட்டம் செயல்படுத்தப் படுவதற்கு முக்கியக் காரணம் பட்டி னிக்கு எதிராக போராட வேண்டும் என்பதையும் தாண்டி, நாத்திகர்கள் அறச்செயல்களை செய்யமாட்டார்கள் என்கிற கருத்துக்கு எதிராகவும் அமைந்துள்ளதாகும்.
ஃபீல்ட்ஸ் கூறுகையில், நாத்தி கர்கள் பலரும் எப்போதுமே பல ருக்கும் சமுதாய ரீதியில் உதவி புரிந்து வருபவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அதை எப்போதுமே வெளியே அவர்கள் சொல்லிக்கொள்வதில்லை என்றார். மாநாட்டில் பங்கேற்ப வர்கள்தான் உணவுப் பொட்டலங் களை உருவாக்குவார்கள். ஆனாலும், மற்ற தொண்டூழியர்கள் தேவைப்படும் போது ஏற்றுக்கொள்கிறார்கள்.
ரொஹோடிஸ் கூறுகையில், அவர் கள் எங்கள் கருத்துடன் ஒத்துப்போக மாட்டார்கள். என்றாலும், பட்டினிக்கு எதிராக செயல்படுப வர்கள். சர்ச்சுகளிலிருந்து வந்தார்கள் என்றாலும், நாங்கள் மகிழ்வுடன் அவர்களை வரவேற்று அவர்களுடன் இணைந்து மக்களுக்கு உணவளிப் போம் என்று குறிப்பிட்டார். தொண்டு செய்வதில் ஆர்வம் உள் ளவர்கள் அவர்கள் ஆர்வத்தின்படி தொண் டாற்றக் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். பென்சில்வேனியாவில் 3 நாள்கள் நடைபெறக்கூடிய நாத்திகர்கள் மாநாட்டு ஏற்பாடுகளில் நாத்திகர்கள், மனித நேயர்கள் பலரும் ஆர்வத் துடன் பணியாற்றி வருகின்றனர்.
-விடுதலை,31.8.15

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

பகுத்தறிவாளர் கழகம் தொடக்கம்


-விடுதலை ஞா.ம.,29.8.15

இந்தியாவில் மதம், மதமற்றவர்களின் எண்ணிக்கை

திராவிடர் கழகத் தலைவரின் கருத்து

மின்சாரம்
சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள மத ரீதியான கணக்கெடுப்பின்படி மத நம்பிக்கையற்றவர்கள் என்ற பகுதியும் திராவிடர்கழகத் தலைவர் வீரமணி அவர்களின் கோரிக்கைக்கு இணங்க சேர்க்கப்பட்டது.
இந்தியாவில் மத நம்பிக்கையற்ற வர்களின் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது, தற்போதுள்ள கணக் கெடுப்பின் படி இந்த எண்ணிக்கை குறைவு என்றாலும் வரும் காலங்களில் நான்கில் மூன்று பங்கு மதநம்பிக்கையற்றவர்கள் இந்தியாவில் இருப்பார்கள் என்று சமீபத்திய கணக்கெடுப்பு கூறுகிறது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011-மத ரீதியான ஜாதி ரீதியான வகையில் நடை பெற்றது. திராவிடர் கழகத்தின் கோரிக் கையை ஏற்று ஜாதி மதம் என்ற பகுதியில் மதமறுப்பாளர் என்ற பகுதியும் சேர்க்கப் பட்டது.  121 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 28.7 லட்சம் நாத் திகர்கள் (கடவுள் மறுப்பாளர்) என்று இந்த பகுதியில் தங்களைப் பதிவுசெய்துள்ளனர்.
இதில் வியப்பிற்குரிய செய்தி நகரங் களை விட கிராமப்புறத்தில் உள்ளவர்கள் தான் அதிகம் கடவுள் மறுப்பாளராக உள்ளனர். கிராமப்புறப்பகுதியில் 16.45 லட்சம் நபர்கள் கடவுள் மறுப்பாளராக உள்ளனர். அதே நேரத்தில் படித்தவர்கள் அதிகம் உள்ள நகரப் பகுதியில் 12.24 லட்சம் பேர்கள் தங்களை கடவுள் மறுப்பாளராக பதிவுசெய்துள்ளனர்.
அதே போல் பெண்களும் ஆண் களுக்கு நிகராக மதமறுப்பாளராக மாறி வருகின்றனர். பெண்களின் 14.04 விழுக்காடு என்றால் ஆண்களில் 14.64 விழுக்காடாக பதிவு செய்துள்ளனர்.
திராவிடர் கழகத் தலைவரின் கருத்து
இதுகுறித்து திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் மகிழ்ச் சியைத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும் போது மதநம்பிக்கை யற்றவர்கள் என்ற கணக்கெடுப்பின் முடிவுகள் மிகவும் மகிழ்வடையச் செய்யும் செய்தியாகும், முதல் முறையாக எங்களது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்த்து மதமற்றவர்கள் பிரிவையும் சேர்த்துள்ளது. இதன் பலனாக இன்று இந்தியாவில் மதமறுப்பாளர்களின் உணர்வும் வெளிப்பட்டுள்ளது.
இரு குறைபாடுகள்
மதநம்பிக்கையற்றவர்களின் எண்ணிக்கையில் இரண்டு குறைபாடுகள் உள்ளன. ஒன்று அரசிடம் மதமற்றவர்கள் என்ற பகுதிகுறித்து மக்களிடம் தெளிவாக தெரிவிக்க போதுமான பரப்புரைகள் செய் யப்படவில்லை, மேலும் மதநம்பிக்கை குறித்து மக்கள் வெளியே சொல்ல அஞ்சும் சூழ்நிலை இன்றும் உள்ளது.
எடுத்துக்காட்டாக கணவன் ஒரு மத நம்பிக்கையாளனாக இருந்தால் மனைவி மதநம்பிக்கையற்றவராக இருக்கும் கார ணத்தினால் கணவருக்கு மதிப்பளிக்கும் வகையில் தானும் மத நம்பிக்கையுள்ளவர் என்று பொய் கூறும் ஒரு சூழல் இந்தியா வில் உள்ளது.
இதே நிலைதான் கார்ப்ப ரேட் நிறுவனங்களில் பணிபுரியும் இளை யோரிடமும் உள்ளது. என்னைப் பொறுத்த வரை மதநம்பிக்கை யற்றவர்களின் எண் ணிக்கை மொத்த மக்கள் தொகையில் குறைந்த பட்சம் ஒரு சதவீதம் அல்லது அதற்கு மேல் இருக்கும் என்றும் கூறினார்.
கழகத் தலைவரின் இந்தக் கருத்தினை ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ (27.8.2015) வெளியிட்டுள்ளது.
-விடுதலை ஞாயிறு மலர்,29.8.15

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

நான் பெரியாரிஸ்ட் நடிகை குஷ்பூ


தந்தி தொலைக்காட்சி கேள்விக் கென்ன பதில் நிகழ்ச்சியில் நடிகையும் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான திருமதி குஷ்பூ சுந்தர் அவர்களிடம்  நெறியாளர் ரங்கராஜ் பாண்டே கேட்டது
கேள்வி: வடக்கில் இருந்த வந்த நீங்கள் தமிழகத்தில் அரசியலில் இறங்கும்போது ஏன் தி.மு.க.வில் இணைந்தீர்கள்?
திருமதி குஷ்பூ: நான் மத சார்பற்றவள், என்னுடைய கொள் கைகளுக்கு ஒத்துப்போகும் கட்சியாக திராவிட முன்னேற்ற கழகத்தை பார்த்தேன்.
காரணம் நான் பெரியார் பாலோயர், நான் பெரியாரிஸ்ட் எனவே அதில் சேர்ந்தேன். மேலும், எளிதில் சந்திக்கும் தலைமையை கொண்ட இயக்கமாகவும், என் னுடைய திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் கட்சியாகவும் தி.மு.க.இருந்தது,
(இந்த பதிலை சொல்லியதும் ரங்கராஜ் பாண்டே முகத்தில் ஒரு குத்து விழுந்தது போல இருந்தது)
மேலும் பி.ஜே.பி.யில் சேரப் போவதாக செய்தி உலவிய நேரத் தில் ஏன் காங்கிரஸ் கட்சியில் சேர்ந் தீர்கள்? என்று பாண்டே கேட்டார்.
உடன் சற்றும் தாமதிக்காமல் பதில் சொன்னார் குஷ்பூ,
பி.ஜே.பி. ஒரு மதம் மட்டுமே இருக்க வேண்டும் என்று சொல்கிற கட்சி,அதுவும் இந்து மதம் மட்டுமே இருக்க வேண்டும் என்று சொல்கிற கட்சி, எனக்கு அது ஒத்து வராது, என்னுடைய கொள்கைகளுக்கு உடன்படாத கட்சியில் நான் எப்படி சேர முடியும்.
இவ்வாறு பேசினார்.
(09.08.2015 ஞாயிறு இரவு தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கேள்விக்கென்ன பதில் பேட்டியில்)
தகவல்: தி.என்னாரெசு பிராட்லா, காரைக்குடி
-விடுதலை ஞா.ம.,16.8.15

அயோவா நாத்திகக் குழு


தாவென்போர்ட், நவ.16- தாவென்போர்ட் பகுதி களில் விளம்பரப் பல கைகள் அமைப்பதற்கு இரு குழுக்கள் பொறுப் பேற்றுக் கொண்டுள்ளன.  அயோவா மற்றும் டி மொயின்  நகரங்களில் நாத்திகர்கள், மதம் மற்றும் கடவுள் நம் பிக்கை அற்றவர்களாக உள்ளவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள் ளுவதற்கு வாய்ப்பாக விளம்பர பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அயோவா நாட்டில் மத்திய அயோவா மற்றும் கிழக்கு அயோவா இணைக் கும் வகையில் கிரேட்டர் குவாட் சிட்டியில் உள்ள மத சார்பற்ற மனித நேயர்கள் மற்றும் மத மற்றவர்களின் 13 குழுக் கள் கூட்டாக இணைந்து செயலாற்றி உள்ளனர்.
விளம்பரப்பலகைகளில் கடவுள் இல்லை, நாம் இருக்கிறோம் என்று வாசகம் இடம் பெற்றுள் ளது. நாத்திகக்குழுக்களின் கிழக்கு அயோவா கூட் டிணைவுக்கான காரணம் குறித்து  பீட்டர் நோத் தனாகிள் என்பவர்  கூறும் போது, விளம்பரப் பலகைகள் அமைப்பதன் நோக்கம் நாத்திகர்களாக, மதமற்றவர்களாக, கடவுள் நம்பிக்கை இல் லாதவர்களாக உள்ளவர் களுடன் ஒத்த சிந்தனை உள்ளவர்கள் தங்களைச் சுற்றிலும் நீண்ட காலமாக இருக்கிறார்கள் என்பதை அறிவிப்பதற்காகவே விளம்பரப்பலகைகள் அமைக்கப்படுகின்றன என்று கூறினார்.
வாஷிங்டனை மய்யமாகக் கொண்டுள்ள நாத்திக அமைப்புகளின் காரணங்களுக்கான கூட்டணிமூலம் விளம் பரப்பலகைகள் அமைப் பதற்காக 10,000 அமெரிக்க டாலர் தொகை ஒதுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
-விடுதலை,16.11.14

.

ஜாதிக் கொடுமை


ஜாதிக் கொடுமை

ஒருமுறை சண்டாளன் தான் உண்ட பிறகு எச்சில் இலையை வீசி எறிந்தான். அது காற்றில் பறந்து பதின றாயிரம் பிராமணர்களுக்காக சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுச் சாலையில் விழுந்தது. அதனை முதலில் கவனியாமல் உணவுண்ட பதினறாயிரம் பிராமணர்களும் செய்தி தெரிந்த பின் பிராமண ஜாதியிலிருந்து நீக்கப்பட்டு சூத்திராயினர்.
மற்றொரு ஊரில் பசித்தாளாமல் சூத்திரன் உண்டு எச்சில் சோற்றை தின்ற பிராமணன் தன் சாதிக்காரர்களின் கொடுமைக்கு அஞ்சித் தற்கொலை செய்து கொண்டான் என்ற புத்த சாதகக் கதைகளில் கூறப்பட்டுள்ளது.
ஆதாரம்: ஜாதிகளின பொய்த் தோற்றம் என்ற நூல், பக்கம் 108   யாரால் அனுப்பப்பட்டார்கள்? ஆழ்வார்கள், அவதார புருஷர்கள், நாயன்மார்கள், நபி கள், தேவகுமாரர்கள் என்பவர்கள் கடவுளால் அனுப்பப் பட்டவர்கள் என்றால், அயோக்கியர்கள், பொய்யர் கள், திருடர்கள், கொலைகாரர்கள், நம்பிக்கைத் துரோகம் செய்கிறவர்கள், வன்னெஞ்சர்கள், சோம்பேறிகள், ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பவர்கள், மூடர்கள் என்பவர்கள் யாரால் அனுப்பப்பட்டவர்கள்?
- (குடிஅரசு, 27.8.1949)
மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்...
பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞானமுடைய எவனும் கூற முன் வரமாட்டான். சமூக வாழ்வில் ஒருவன் பெற்றிருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படுகிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான்றாகும். இந்தியாவிலே கோடீசுவரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரி களுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன?
ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயி ருக்கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியாவிலே மாஜிஸ்திரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடையவனாயிருக்கிறான்.  - டாக்டர் அம்பேத்கர்
ஒரு பார்ப்பனரே சொல்லுகிறார்!
எழுத்துரு அளவு    தீண்டாமை என்பது சமயம் சம்பந் தப்பட்டு இருக்கின்றது. அதைச் சமய சம்பந்தத் தினால்தான் தீர்க்க முடியும். நான் ஒரு பிராமணன் என்ற முறையிலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தலைவன் என்ற முறையிலும் உங்களிடம் பேசுகின்றேன். நல்ல ஒழுக்கமுள்ள ஹரிஜன் எப்போது சங்கராச்சாரியார் பீடத்தில் அமருகின்றாரோ, அப்போதுதான் தீண்டாமை ஒழிந்ததாகக் கருத முடியும்.
- டாக்டர் கலேல்கர், ஆதாரம்: பெரியார் படைக்க விரும்பிய மனிதன் பக்கம் 123
-விடுதலை,3.10.14