திங்கள், 24 ஆகஸ்ட், 2015

இங்கர்சால் மணிமொழிகள்

தேவலோகம் என்று ஒன்று இருக்குமானால் - அதில் எல்லையற்ற இறைவன் இருப்பது உண்மையானால் அவர் கோழைகளின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார் நயவஞ்சகர்களின் செயல்களைக் கண்டு மகிழ மாட்டார் இந்த வஞ்சகர்களைக் கண்டு ஒருக்காலும் திருப்தி யடையமாட்டார்.
************
மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியைப் பிரித்து விடும் மதங்கள் அவற்றின் கொள்கைகள், கோட்பாடுகள், நூல்கள், உருவங்கள் இவைகளைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளை தூக்கி தூரப்போடுங்கள். சிந்திக்காதே அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்ராயம் எந்த மூலையில் எந்த வடிவில் உங்கள் முன் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்.
************
அறியாமை - இரகசியத்தின் தாய்; துன்பத்தின் பிறப்பிடம் குருட்டு நம்பிக்கையின் அன்னை; சங்கடம் தோன்றிய இடம்; அழிவும், மறுமையும் வாழும் தாயகம்.
************
முடிவில்லாத முதல்வன் இருப்பது உண்மையானால் மக்கள் அனைவரும் ஒரே மாதிரியான எண்ணம் உடையவராய் இருக்க வேண்டும் என்று அவர் கருதுவாரானால் ஏன் அவன் ஒருவனுக்கு குறைந்த அறிவும், மற்றொருவனுக்கு அதிக அறிவும் கொடுத்தான். அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஒரே மாதிரியாக எண்ண வேண்டும் ஒரே மாதிரியாக உணர வேண்டும் என்பது அவன் நோக்கமானால் அறிவு வித்தியாசங்கள் ஏன்?
மனித குலம் கூவிய கூக்குரலும் கோரிக்கைகளும் பக்தியும் பைத்தியக்காரத் தன்மையும். கடவுள்களுக்குத் திருப்தியை உண்டு பண்ணியதா? இல்லை. இல்லவே இல்லை. மனித இனத்திற்கு வர விருந்த எந்த விபத்தாவது தவிர்க்கப்பட்டதா? புதிய வரப்பிரசாதம் ஏதும் கிடைத்ததா? இல்லை அப்படியிருக்க இந்த ஆண்ட வனுக்கு - இந்தக் கண்மூடிக் கபோதிஆண்டவனுக்கு நாம் நன்றி செலுத்தலாமா? கைகூப்பி வணங்கலாமா? தேவை இல்லை.
************
எனக்கு இந்த உரிமைகள் வேண்டும் என்று கூறுகின்றவர் அதே உரிமைகளை வேறொரு மனிதன் விரும்பும்போது அளிக்க மறுத்தால் அவன் எந்த பாகத்திலிருந்தாலும் அவன் எவ்வளவு உயர்ந்தவன் என்று கூறினாலும் அவன் காட்டுமிராண்டியின் நிலைக்குச் சமீபத்தில் வசித்தவன் என்று நான் கூறுவேன்.

மந்திர நீரும் - முடிவெட்டுவோர் நீரும்!
பொதுமக்களே! நீங்கள் பார்ப்பனர்களுக்கு பொன்னும் பொருளும் தருகின்றீர்கள். அந்த பார்ப்பனர்கள் உங்களிடம் பொருள் பெற்று தம் கல்வியை பெருக்கிக் கொள்கின்றனர். பொதுமக்கள் அனைவருக்கும் கல்வி அறிவையும் மெய்ப்பொருள் தெளிவையும் கற்றுத் தருவார்களானால், நீங்கள் அவர்களுக்கு பொன்னும் பொருளும் தருவது தகும்.
நீர் நிலைகளிலும், ஆறுகளிலும் வேள்விகளின் போது தலையை மொட்டை அடித்து கொள்கின்றீர்கள். அதனால் என்ன பலன்? நீர் நிலைகளில் நீராடியதால் தீவினை அகன்றிருந்தால் மொட்டையடித்துக் கொள்வது தேவை இல்லை. மொட்டை அடிப்பவன் கையால் தெளிக்கும் நீரால் அவர்கள் செய்த தீவினை அகல்வதாக இருக்கும் நிலையை பார்த்தால் போற்றத்தக்க நீர் நிலைகளைவிட தலை மழிப்பவனின் கையில் உள்ள நீரே பெருமையுடைய
தாகிறது.  மந்திர நீரை விட முடி மழிப்பாளனின் கை நீர் மேன்மை யானது. தலைமொட்டையானாலும் தாழ்வான எண்ணங் களும் ஜாதி வேறுபாட்டு உணர்வுகளும் மொட்டையடிக்க படுவதில்லை அல்லவா?
- ஆந்திர சீர்திருத்தவாதி வேமண்ணா
-விடுதலை,3.10.14

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

மாநிலப் பகுத்தறிவாளர் கழகப் பொறுப் பாளர்களின் குழுக்கள்

பகுத்தறிவாளர் கழகப் புரவலர், தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுத லில் மாநிலப் பகுத்தறிவாளர் கழகப் பொறுப் பாளர்களின்  குழுக்கள் அமைக்கப்பட்டன.
பகுத்தறிவாளர் கழக அமைப்புக் குழு
மா.அழகிரிசாமி _ இரா.தமிழ்ச்செல்வன்
ஊடகம், செய்தி ஊடகம் - இணையதளம்
வீ.குமரேசன் _ கோ.ஒளிவண்ணன்,
புத்தகங்கள் அறிமுகக்குழு
தகடூர் ஜெ.தமிழ்ச்செல்வி, வடசேரி வ.இளங் கோவன், அண்ணா சரவணன்.
அறிவியல் மனப்பான்மைக்குழு
டாக்டர் சி.தமிழ்ச்செல்வன், மு. ந. நடராசன்
உறுப்பினர் சேர்க்கைக்குழு
வா.நேரு _ வீ.குமரேசன்
பெரியார் ஆயிரம் ஆக்கக் குழு
வா.நேரு, மா.அழகிரிசாமி, பேரா. திருமாவளவன், க.நல்லதம்பி, ச.குருசாமி (கே.டி.சி)
தகவல் தொடர்பு குழு
மா.அழகர்சாமி, ஆ.முனியன்
-விடுதலை,8.6.15

ரசல் பேசுகிறார்!


அய்ரோப்பாவில் எண்ணற்ற மதச் சண்டைகள் நிகழ்ந்துள்ளன. உலக வரலாற்றை விட இந்திய நாட்டின் வரலாறே இதை நன்கு விளக்கும். இந்தியாவில் புத்தமதம், சமணமதம், ஹிந்து மதம் இதற் கிடையே ஏற்பட்ட  போர்கள் கணக்கற்றவை.
மதங்களினால் பாதிக்கப்பட்ட தமிழ் மன்னர்கள் பலர். மன்னர்களால், மதத்தின் பெயரால் கழுவேற்றப்பட்ட புத்தர்கள், சமணர்கள் கணக்கற்றோர். இந்தியா இரண்டு பட்டது மதத்தின் பெயரால் என்பதை மறுக்க இயலாது.
மதம் மனிதனின் கூட்டு உணர்ச்சியைப் பெரிதும் பாதிக்கக்கூடியது.
ஆதாரம்: பெர்ட்ராண்ட் ரசல் என்ற புத்தகத்தில் மதம் என்ற பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.
-விடுதலை,13.3.15

சனி, 15 ஆகஸ்ட், 2015

ஜீவாவின் பாடல்!

























கொள்ளைச் சிரிப்பு வந்ததே - குப்பன்
குழவிக்கல் சாமியென்று கும்பிட்டபோது
பிள்ளைவரம் பெற்றிட வென்று - வள்ளி
பேரரசு வேப்பமரம் சுற்றியபோது
கள்ளை மொந்தையாக குடித்து - சுப்பன்
காட்டேரி ஆடுதென்று கத்தியபோது
சள்ளைதரும் பாவம் தொலைக்க - பொன்னி
சாக்கடையே தீர்த்தமென்று மூழ்கியபோது
-கொள்ளைச் சிரிப்பு
கொள்ளைச் சிரிப்பு வந்ததே - ராமன்
கோவிலுக் கழுதுபாப்ப ராகியபோது
எள்ளும் நீரும் வாரியிறைத்து - கண்ணன்
எத்துவாளிப் பார்ப்பானை வந்தித்தபோது
புள்ளினக் கருடனைக் கண்டு- சீதை
பூமியில் விழுந்து கிருஷ்ணா என்றிட்ட போது
கள்ளக்காவி வேடதாரிக்கே - லீலா
கடவுள் பணிவிடைகள் செய்திட்ட போது
-கொள்ளைச்சிரிப்பு
ப.ஜீவானந்தம்
ஆதாரம்: ஜீவாவின் பாடல்கள்
-விடுதலை,14.11.15

உண்மை-ஆர்.ஜி.இங்கர்சால்

உண்மைதான் உலகத்தின் அறிவுச் செல் வம். தொழில்களிலெல்லாம் தலை சிறந்த தொழில் உண்மையை நாடுவ தேயாகும். உண்மை தான் மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படை, மேல் கட்ட டம், உச்சி மண்டபம் எல்லாம். உண்மையே இன்பத்தின் தாய். உண்மையைக் கடைப்பிடிப்பவன் நன்மையைச் செய்யும் மாபெரும் சக்தியைப் பெறுகிறான்.
ஆராய்ச்சியினாலும், சோதனையினாலும், பகுத்தறிவி னாலும் உண்மையைக் கண்டுபிடிக்க முடியும். துணிவு பெற்றவனால் தான் உண்மை யோடு நடக்க முடியும்.
கடவுளுக்கோ, மனிதனுக்கோ அஞ்சாத முழு உரிமையுடன் உண்மையை நாட வேண்டும். தடையோ, மறைவோ, இரகசியமோ இல்லாமல் உலக இலக்கியம் எதையும் படிக்கும் உரிமை வேண்டும். உண்மையைக் கண்டுபிடிப்பவன் உலகுக்கு வெளிச் சத்தைக் காட்டுபவன் ஆவான்.
-ஆர்.ஜி.இங்கர்சால்

உலகப் பகுத்தறிவாளர்கள்-அறிவுரைகள்



பேரறிஞர் அண்ணா அவர்கள், காலத்தினால் விளைந்த மாற்றங்களையும், கருத்தினால் விளைந்த மறுமலர்ச்சி யையும், மக்களின் கொதிப்பினால் பிறந்த புரட்சிகளையும் மனதில் கொண்டுதான் தமிழ்ச் சமுதாயத்தைத் தட்டி எழுப்பினார். - அறிஞர் அண்ணா கூறுகிறார்;
கிரேக்க நாட்டின் விசித்திர வைதிகர்களை, வீதி சிரிக்கச் செய்தார். - சிந்தனைச் சிற்பி சாக்கரடீசு!
உலக வடிவை உணராதவர்களுக்கு அது உருண்டை என்னும் உண்மையை உரைத்து வதைபட்டார் - கலிலீயோ
பழைமையை வற்புறுத்திய வைதிகத்தின் மடமையைத் தமது வாதத்தினால் வாட்டினார் - நாட்டை விட்டே ஓட்டினார் - வால்டேர்
மக்களின் ஒருமுகப்பட்ட ஒப்புதல் உடன்பாட்டுப் பயனே ஆட்சியாவதால் மக்கள் மன்றத்திற்கு உரிய மதிப்புத் தர வேண்டினார் - ரூசோ வேதப் புத்தகங்களை விற்று, விபச்சார விடுதிகளில் அந்தப் பணத்தை இறைக்கும் மதப் போர்வை அணிந்த போகிகளைக் கண்டித்தனர் - விக்ளிப், ஜீவிங்கிலி - மார்ட்டின் லூதர் போன்றோர்
அமெரிக்கக் கறுப்பர்கள் - பூட்டப்பட்டிருந்த விலங்கொடித்து அந்த அடிமைகளை விடுவித்தார் - ஆபிரகாம் லிங்கன்
முதலாளிகளின் கொடுமைகளை எடுத்துரைத்து - சமதருமச் சமுதாயம் காண அறை கூவினார் - காரல்மார்க்ஸ்
முதலாளித்துவ ஜார் மன்னர்களை எதிர்த்துப் புரட்சி நடத்தி வெற்றி பெற்றார் - மாவீரர் இலெனின்
ஒற்றுமை காண வழியற்று ஒருவரை ஒருவர் பகைத்து நின்ற சீனர்களின் சிறுமதியைப் போக்கிச் சீனாவைத் தலை நிமிர வைத்தார் - சன்யாட்சன்
துருப்பிடித்த மூடநம்பிக்கைகளில் உழன்று உருக்குலைந்த துருக்கியர்களின் மதி தேய்வதைத் தடுத்தார் - கமால் அத்தா - துர்க்
மதத்தின் ஆதிக்கத்தால் இறைவன் பெயரைக் கூறி, ஏழைகளை வஞ்சித்தவர்களைச் சந்தி சிரிக்க வைத்தார் - இங்கர்சால்
சிந்தனையற்ற மக்களின் பேதைமையைப் போக்கும் அறிவூட்டும் பணியை மேற்கொண்டார் - பெர்னார்ட்சா
உலகைத் திருத்தவும், உண்மையை நிலை நாட்டவும், மூடநம்பிக்கைகளை முறியடிக்கவும், அருந்தொண் டாற்றிய சிந்தனைச் சிற்பிகளை அறிவியல் மேதைகளை, சீர்திருத்தச் செம்மல் களை எல்லாம் எடுத்துக் காட்டுவது ஏன்?
(நூல்: பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் க.அன்பழகன், பக்கம் 108)
தகவல்: க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி
விடுதலை21.11.14