கோட்டயம், செப். 22- சமூக நீதிக்காக போராடிய முன்னணி தலைவர் களில் தந்தை பெரியார் அடித் தட்டு மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார் என்று கோட்டயம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக் டர் பி.கே.ஜெயசிறீ உரையாற் றினார்.
தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த தினமான சமூக நீதி நாளை முன்னிட்டு, (17.9.2022) கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவில் கேரள அரசின் சார்பில் கோட்டயம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக் டர் பி.கே.ஜெயசிறீ தந்தை பெரியார் அவர்களின் சிலையின் அருகே அமைக்கப்பட்டிருந்த படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி, பொது மக் களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி. எஸ்.சமீரன் சார்பாக தந்தை பெரியாரின் வாழ்க்கை வர லாறு”, மேனாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர் களின் வாழ்க்கை வரலாறு" ஆகிய புத்தகங்கள் கோட்டயம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக் டர் பி.கே.ஜெயசிறீயிடம் வழங் கப்பட்டது.
பின்னர் கோட்டயம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே. ஜெயசிறீ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
சுயமரியாதை, பகுத்தறிவு, சம தர்மம், சமூகநீதி, இன உரிமை, பெண் உரிமை, ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கொள்கையை தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கினார். அதுதான் கடந்த நூற்றாண்டில் இந்தச் சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது, எதிர்காலத் துக்குப் பாதை அமைத்துத் தரப்போகிறது. இந்த உணர்வை, உணர்ச்சியை, எழுச்சியை, சிந்த னையை விதைக்கும் அடையாள மாக அறிவாசன், தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ஆம் நாளை ஆண்டுதோறும் சமூக நீதி நாள்" ஆகக் கொண்டாப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.
அதனடிப்படையில், கேரளா மாநிலம், கோட்டயம் மாவட் டம், வைக்கம், தந்தை பெரியார் நினைவகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலையின் அருகே அமைக்கப் பட்ட படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்நாட்டிற்கும், இந்தியா விற்கும் சமூக நீதிக்காக போரா டிய முன்னணி தலைவர்களில் தந்தை பெரியார் அடித்தட்டு மக்கள் மனதில் நிலைத்து நிற்ப வர். கேரள மாநிலத்தில் தீண் டாமை தாக்குதல் அதிகமாக இருந்த காலத்தில் களமிறங்கி தாழ்த்தப்பட்ட மக்களை கோவி லுக்குள் அழைத்து சென்று வெற்றி பெற்றார். இதன் கார ணமாக வைக்கம் என்ற ஒரு சிறிய ஊர் உலக அளவில் பெருமை அடைந்தது.
இந்திய சுதந்திர போராட்டத் தின் போது அண்ணல் காந்தியு டன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள் ளார். மக்களிடையே இருந்த மூட நம்பிக்கைகளை அகற்ற முழு மூச்சாக போராடியவர். அவரது பிறந்த நாளில் அவருக்கு மாலை அணிவித்து. மரியாதை செய்ததில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன். என கோட்டயம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பி.கே.ஜெயசிறீ செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.
நிகழ்வில் நகராட்சி தலைவர் ராதிகா ஷியாம் துணை தலைவர் பி.டி.சுபாஷ், நகராட்சி உறுப் பினர்கள் ராஜசேகரன், இப்ரா ஹிம் பழையாகடவாய், கவிதா ராஜேஷ், ராஜசிறீ, ரேணுகா, பிஜிமோல், பிரீத்தா ராஜேஷ், சந்திரசேகரன்,அசோகன், வைக் கம் வட்டாட்சியர் விஜயன், கேரள மாநில செய்தித்துறை துணை இயக்குநர் பிரமோத், கோயம்புத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலு வலர் ஆ.செந்தில் அண்ணா, ஆகியோர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக