வியாழன், 24 செப்டம்பர், 2020

தெலங்கானாவில் தந்தைபெரியார் 142ஆம் பிறந்த நாள் விழா


September 23, 2020 • Viduthalai • மற்றவை

வாரங்கல்,செப். 23- தெலங்கானாவில் இந் திய நாத்திக சங்கம், அறிவியல்மாணவர் கூட்டமைப்பு இணைந்து நடத்திய தந்தை பெரியார் 142ஆம் பிறந்த நாள் விழா  இந்திய நாத்திக சங்க மாநிலத் தலைவர் ஜீடிசாரய்யா தலைமையில் நடைபெற்றது.

மனித உரிமை ஆணைய உறுப்பினர் திருப்பாதய்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். நாட் டிலேயே பார்ப்பனர் அல்லாதாரின் சுயமரியாதைக்காக முதல் முறையாக இயக்கம் கண்டவர் தந்தை பெரியார். சமூக அநீதிக்கு எதிராக போராடியவர், பாகுபாடுகளுக்கு காரணமான ஜாதி, மதம், கடவுள் ஆகியவற்றை ஒழிக்க பாடு பட்டவர்.

தந்தைபெரியார் கொள்கைகளைப் பரப்பாமலிருந்தால் பாகுபாடுகளையும், இந்து மதக் கோட்பாடுகளையும் ஒழிக் கவே முடியாது. இந்துராஷ்டிரம் அமைத் திட மனுதர்மத்தை இந்தியாவில் அமல் படுத்த துடிக்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸ்.சை  எதிர்ப்பதற்கு தந்தைபெரியார்  கொள் கைகளை பின்பற்றுவதோடு மட்டுமல் லாமல், தந்தைபெரியார் கொள்கைகளை பரப்பிடவும் வேண்டும்.

தந்தைபெரியார் போராட்டங்கள், கொள்கைகள் நவீன சமூகத்துக்கான தேவையாகும். நம்முடைய மாநிலத்தில் மூலை முடுக்குகளிலெல்லாம் தந்தை பெரியார் கொள்கைகளை கொண்டு செல்வதன்மூலம் தந்தைபெரியார் கண்ட கனவைப்போல் பகுத்தறிவு சமுதாயத் தைக் காணமுடியும். கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

மில்குரி சங்கர், பி.ராஜூ, பிரவீன், ஸ்பார்ட்டகஸ், பிரபாகரன், சுரேந்தர், அய்ன்ஸ்டீன், பிக்சாபதிஉள்ளிட்டோர் பங்கேற்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக