கடவுள் இல்லை என்கிற போதே அது எந்த மதக் கடவுளும் இல்லை
என்று தான் பொருள். (இயேசு, அல்லா உள்பட) நாங்கள் எந்தக் கடவுளுக்கும் விதிவிலக்கு அளிக்கவில்லை.
உங்களைப் போன்றோருக்குத் தோன்றவில்லை என்றால் அதற்கு நாங்கள் என்ன செய்வது?
இஸ்லாம் மதத்தை விமர்சித்து குரானை மறுத்து பெரியார் தொண்டர் புவனன் எழுதிய “குரானோ குரான்”
இஸ்லாம் மதத்தை விமர்சித்துப் பெரியார் தொண்டர் எஸ். டி. விவேகி எழுதிய ”வேதமும் விஞ்ஞானமும்”
இஸ்லாம் மதத்தை விமர்சித்து “பிரபஞ்சமே கடவுள்”
இஸ்லாம் மதத்தை விமர்சித்து தோழர் சாகித் எழுதிய “அடிமை - அல்லாவின் ஆணை”
இஸ்லாம் மதத்தை விமர்சித்து தஜ்ஜால் எழுதிய “ஆத்மாவும் அதுபடும் பாடும்”
இஸ்லாம் மதத்தை விமர்சித்து டாக்டர் அலி எழுதிய எழுதிய “ஆரம்பத்தை நோக்கி”
இஸ்லாம் மதத்தை விமர்சித்து சினா எழுதிய ”முகமதுவையும் முஸ்லிம்களையும் அறிவோம்”
(தமிழில் - சிராஜ் அல் ஹக்)
இதுபோன்று இஸ்லாத்தை மதத்தை விமர்சித்து தமிழில் ஏராளமான நூல்கள் உள்ளன.
அதேபோன்று இபின் வராக் எழுதிய “Why I Am Not A Muslim” போன்று ஆங்கிலத்திலும் நிறைய நூல்கள் உள்ளன.
கிறிஸ்தவ மதத்தை விமர்சித்து ஜார்ஜ் எழுதிய “கிறித்தவர்கள் சிந்தனைக்கு”
”பாதிரியும் பாவமன்னிப்பும்”,
ஜீன் மெஸ்லியர் எழுதிய
மரண சாசனம் பாகம் 1, 2, 3
பெட்ரண்ட் ரசல் எழுதிய நான் ஏன் கிறித்தவனல்ல?
ஆகிய நூல்களைத் தமிழில் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது.
தோழர் புவனன் எழுதிய ”பைபிளோ பைபிள்”
தோழர் அருணன் எழுதிய “கடவுளின் கதை - ஆதி மனிதக் கடவுள்கள் முதல் அல்லா வரை - 5 தொகுதிகள்,
ரிச்சர்டு டாக்கின்ஸ் எழுதிய “ கடவுள் ஒரு பொய் நம்பிக்கை” (மொழி பெயர்ப்பு கு.வெ.கி. ஆசான்)
தருமி எழுதிய ”மதங்களும் சில
விவாதங்களும்”. (இது கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை விமர்சிப்பவை)
"Rationalist Voice", "The Atheist" இதழ்களிலும் வெளிவந்த ஏராளமான கட்டுரைகள்.
உடனடியாக நினைவுக்கு வந்தவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். தேடினால் ஏராளம் கிடைக்கும்.
இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தை விமர்சிக்கும் ஏராளமான கட்டுரைகள் பெரியாரிய, மார்க்சிய, முற்போக்கு இதழ்களில் வந்துள்ளன.
தவிர
www.paraiyosai.wordpress.com
www.pagaduu.wordpress.com
www.senkodi.wordpress.com
போன்ற இணையங்களிலும்,
You Tube காணொளிகள் மூலமும் உள்ளன.
மேலும்
Why i am not a Hindu
Prof.Ramendra
Why i am not a Christian?
Bedraund Russel
Why i am not a Muslim?
Ibin Warrak
இந்நூல்களை எழுதிய 3 ஆசிரியர்களும் அந்தந்த மதத்தைச் சார்ந்தவர்களே!
இஸ்லாம் மதத்தை விமர்சித்து தமிழில் வெளிவந்த “அல்லா - அது அடிமையின் ஆணை”, ”வேதமும் விஞ்ஞானமும்”, ”பிரபஞ்சமே கடவுள்”, "ஆரம்பத்தை நோக்கி” ஆகிய நூலாசிரியரும் இஸ்லாமியர்களே!
அமெரிக்காவைச் சேர்ந்த நாத்திகர் இராபர்ட் கிரீன் இங்கர்சாலும், இங்கிலாந்தைச் சேர்ந்த நாத்திகர் பெட்ரண்ட் ரசலும் கிறிஸ்தவ மதத்தைக் கடுமையாக விமர்சித்துப்
பேசிய போது நீங்கள் ஏன் கிறிஸ்தவ மதத்தை மட்டும் விமர்சிக்கிறீர்கள் என்று யாரும் கேட்கவில்லை.
அல்பேனியாவைச் சார்ந்த நாத்திகர் அன்வர் ஓட்சா இஸ்லாமிய மதத்தை விமர்சித்துப் பேசிய போது நீங்கள் ஏன் இஸ்லாமிய மதத்தை மட்டுமே விமர்சிக்கிறீர்கள் என்று யாரும் கேட்கவில்லை.
எந்த மதம் பெரும்பான்மையாக இருக்கிறதோ, எந்த மதத்தில் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்களோ அதுதான் அதிகம் பேசப்படும்.
மேலும் எதை அதிகம் விமர்சிப்பது என்பதை அந்தந்த நாட்டின் சூழல் தான் தீர்மானிக்கும்.
- அரசெழிலன்
- வி.சி வில்வம் முகநூல் பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக