வியாழன், 16 பிப்ரவரி, 2023

சமூகநீதிக்கான அடுத்த போர்க் களத்திற்கு ஆயத்தமாவோம்!' ஆந்திர மாநிலம் - குண்டூரில் பி.பி. மண்டல் சிலையினை திறந்து வைத்து தமிழர் தலைவர் பிரகடனம்

.

ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி. மண்டல் சிலை திறப்பு

ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி.மண்டல் சிலையை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார் - 12.2.2023

ஆந்திர மாநிலம் குண்டூரில் சினிஸ் ஸ்கொயர் முக்கிய சாலையில் நிறுவப்பட்டுள்ள பி.பி.மண்டல் அவர்களின் சிலையை சமூகநீதிப் போராளி - தலைவர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். அவ்வமையம் மாநில அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற மாநில மேனாள் அமைச்சர்கள், ஆந்திர சட்டமன்ற உறுப்பினர்கள், மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொண்டனர். விழா அமைப்புக் குழுவின் தலைவர் ஆந்திர மாநில சட்டமன்றத்தின் கொறடா தங்கா.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.சி., அவர்களும், செயலாளர் டாக்டர் ஆலா வெங்கடேஸ்வரலு அவர்களும், குண்டூர் மாநகராட்சி மேயர், அனைத்துக் கட்சி சமூகநீதி ஆர்வலர்களும் உடனிருந்தனர். பலத்த கரவொலிக்கிடையே  தமிழர் தலைவர் அவர்களால் சிலை திறக்கப்பட்டது (12.2.2023).

ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி. மண்டல் சிலை திறப்பு

ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி. மண்டல் சிலையினை திறந்து வைப்பதற்கு இன்று அதிகாலை 3.45 மணிக்கு (12-2-2023) விஜயவாடா ரயில் நிலையத்திற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவரை விழாக் குழுவினர் வரவேற்றனர். உடன்: கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழக அயலுறவு அணிச் செயலாளர் கோ. கருணாநிதி.

குண்டூரில் பி.பி.மண்டல் சிலை திறப்பு விழாவில் திரண்டிருந்த கூட்டத்தினரின் ஒரு பகுதி
குண்டூரில் பி.பி.மண்டல் சிலை திறப்பு விழாவில் திரண்டிருந்த கூட்டத்தினரின் ஒரு பகுதி
ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி.மண்டல் சிலையை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார் - 12.2.2023

வெள்ளி, 6 ஜனவரி, 2023

பகுத்தறிவாளர் கழகமும், பெரியார் நூலக வாசகர் வட்டமும் இணைந்து நடத்திய சிறப்பு கூட்டம்

வெள்ளி, 9 டிசம்பர், 2022

பஞ்சாபில் இந்திய பகுத்தறிவாளர் அமைப்புகளின் கூட்டமைப்பின் 2 நாள் மாநாடு

 

பஞ்சாப் மாநிலம் பர்னாலா நகரில் தர்க்ஷீல் பவன் அரங்கில் இந்திய பகுத்தறிவாளர் அமைப்புகளின் கூட்டமைப்பு (FIRA - FEDERATION OF  INDIAN  RATIONALIST  ASSOCIATION)12ஆவது தேசிய மாநாடு  இன்று 29.10.2022 காலை  தொடங்கியது. இம்மாநாட்டில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தமிழ்நாட்டில் இருந்து 28 பேர் கலந்து கொண்டுள்ளனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். பல்வேறு அமர்வுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பகுத்தறிவாளர்களின் அமைப்புகளின் சார்பில் தங்களது படைப்புகளை அளிக்கிறார்கள்.

பஞ்சாபில் பகுத்தறிவாளர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் அகில இந்திய கருத்தரங்கு

29.10.2022 அன்று பகுத்தறிவாளர் அமைப்பு களின் கூட்டமைப்பு சார்பில் அகில இந்திய கருத்தரங்கு பஞ்சாப் மாநிலம் பர்னாலா நகரில் தர்க்க்ஷீல் பவன் அரங்கில் நடைபெற்றது.

இரண்டு நாள் கருத்தரங்கில் தமிழ்நாட்டில் இருந்து பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 28 பேராளர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் 

கி வீரமணி அவர்கள் கருத்தரங்கு வெற்றி பெற வாழ்த்துடன்,  FIRAஅமைப்பு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன செய்ய வேண்டும் என் பதையும் தெரிவித்து வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்கள் .

அச்செய்தி கருத்தரங்க பேராளர்களுடைய பலத்த கரவொலிகள் இடையே படிக் கப்பட்டு FIRAசெயலாளரிடம் கருத்தரங்க மேடையில் வழங்கப்பட்டது.

வெள்ளி, 14 அக்டோபர், 2022

தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

 

தாம்பரம், அக். 9- தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 5.10.2022 புதன் கிழமை அன்று மாலை 5.10 மணி யளவில் மேற்கு தாம்பரம் சி.டி.ஓ காலனி எழில் மாண்டிசோரி மழ லையர் மற்றும் தொடக்கப் பள்ளி யில் மாநில துணைத் தலைவர் ந.கரிகாலன் தலைமையில் நடை பெற்றது.

பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் அ.தா.சண்முக சுந்தரம் மற்றும் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் ஆகியோர் முன் னிலையில்  எஸ்.ஆர்.வெங்கடேஷ் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் மாவட்ட திரா விடர் கழக  தலைவர் ப.முத்தையன், மாவட்ட செயலாளர் கோ.நாத் திகன், நகர செயலாளர் சு.மோகன் ராசு, ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன், தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன் மற் றும் கலந்து கொண்ட தோழர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

புதிய பொறுப்பாளர்கள்

கூட்டத்தில் புதிய பொறுப் பாளர்களாக மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.வெங்கடேஷ், மாவட்ட செயலாளர் மதிவாணன், மாவட்ட அமைப்பாளர் இராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் புஷ்பலதா, அருணா,  குணசேகரன், மாவட்ட துணைத் தலைவர் இரா.சு.உத்ரா என்று முறையே மாநில தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் அறிவித்தார். 

நிகழ்ச்சியில் கு.ஆறுமுகம், கோ.பழனிச்சாமி, செ.சந்திரசேகரன், த.குணசேகரன், அஜய், கரசங்கால் இர.கதிர்வேல், அ.கருப்பையா மற்றும் த.மணிகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திங்கள், 26 செப்டம்பர், 2022

கனடா - டொராண்டோ நகரில் நடைபெற்ற சமூகநீதிக்கான பன்னாட்டு பெரியார் மனிதநேய மாநாடு நிறைவு நாள் (25.9.2022) நிகழ்ச்சிகள்

வியாழன், 22 செப்டம்பர், 2022

கேரளா வைக்கத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா! கோட்டயம் மாவட்ட ஆட்சித் தலைவர் பெரியாருக்குப் புகழாரம்