அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
6.05.2023 அன்று காலை 10:30 மணிக்கு அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட் டம், அரியலூர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ப.க. தலைவர் தங்க.சிவமூர்த்தி தலைமையில் மண்டல கழக செயலாளர் சு.மணிவண்ணன், மாவட்ட கழகத் தலைவர் விடுதலை நீலமேகம், அமைப்பாளர் ரெத்தின.இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர் அனைவரையும் மாவட்ட ப.க. செயலாளர் துரை.சுதாகர் வரவேற்று உரையாற் றினார்.
தொடர்ந்து, மாநில ப.க.துணைத்தலைவர் கோபு.பழனிவேல் கூட்டத்தின் நோக்கமான ‘‘வைக்கம் போராட்ட நூற்றூண்டுவிழா, இயக்க செயல்பாடுகள், உறுப்பினர் சேர்க்கை பற்றியும். பகுத்தறிவுச் சிந்தனை யாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் “பெரியார் பேசுகிறார்” என்ற தலைப்பில் மாதக்கூட்டங்கள் நடத்துவது, திருக் குறள், புரட்சிக்கவிஞர் - பற்றிய இலக்கிய வட்டங்களின் மூலம் மாணவர்களிடம் பகுத்தறிவுச் சிந்தனைகளைத் தூண்டி இளம் தலைமுறைகளை பெரியார் வழியில் அடையாளப்படுத்த வேண்டும் என்றும், இயக்க உறுப் பினர்களை ஆண், பெண் பேதமின்றி அதிகரித்து இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டும் எனவும் உரை யாற்றினார்.
தொடர்ந்து, தங்களை அறிமுகம் செய்து கொண்டு உரையாற்றியவர்கள்: இர.இராமச்சந்திரன், ஒன்றிய கழகத் தலைவர். சி.சிவக்கொழுந்து, த.சுப்பராயன், இரா.ராசாராம், மு.முத்தமிழ்செல்வன், இராசா.செல்வ குமார், மு.கோபாலகிருஷ்ணன், கே.வெள்ளமுத்து, மு.ஜெயராஜ்.
பொதுச்செயலாளர் வி.மோகன் தமதுரையில், ‘‘பகுத்தறிவாளர் கழகத்தை எந்த அளவு வலிமையுள்ள அமைப்பாக நாம் உருவாக்குகிறோமோ, அந்த அளவு நம் எதிர்கால தலைமுறைக்கு வலிமையான சுயமரி யாதை, பகுத்தறிவு, இன உணர்வுள்ள அடித்தளத்தை அமைக்கிறோம் என்ற நோக்கத்துடன் பணியாற்ற வேண்டும்'' என்றார்.
தொடர்ந்து, மாநில ப.க. தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் நிறைவுரையாற்றினார். அவரது உரையில், ‘‘பகுத்தறிவாளர் கழகம், என்பது திராவிடர் கழகத்திற்கு ஓர் அடித்தளத்தை அமைத்துக்கொடுக்கும் அமைப் பாகும். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் நம் செயல்பாடு இருக்க வேண்டும். பகுத்தறி வாளர் கழகத்தில் உறுப்பினராக இருப்பவர்களையும், ஆதர வளிக்கும் தோழர்களையும் அடிக்கடி சந்தித்து உரையாட வேண்டும். நம் பணி என்பது போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று மட்டுமே இல்லாமல் ,அறிவுப் பூர்வமான சமூகத்தை அமைப்பதில் முனைப்புக் காட்ட வேண்டும். வாசகர் வட்டம், இதழ்களுக்கு சந்தா சேர்த்தல், கருத்தரங்கம் நடத்துதல். நூல் திறனாய்வு செய்தல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும். பெரியார் 1000 வினா - விடைத்தேர்வுகள் மூலம் மாணவர்களிடம் பெரியாரியலை கொண்டு செல்ல வேண்டும். சமூக வலைதளங்களின் மூலம் பெரியாரியலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் வழிகாட்டுதலோடு பரப்பிட வேண்டும். பகுத் தறிவாளர் கழகத்திற்கு அதிக உறுப்பினர்கள் சேர்ப் பதன் மூலம்தான் ஜாதி, மதச்சிந்தனைகளை கட்டு டைக்க முடியும். மூட நம்பிக்கையையும், பெண்ண டிமைத் தனத்தையும் ஒழிக்க முடியும். அதற்கு பகுத்தறிவாளர் கழகம் பரவலாக்கப்பட வேண்டும்'' என்று தனது உரையை முடித்து புதிய பொறுப்பாளர் களை அறிவித்தார்.
இறுதியில் தோழர் சா.பகுத்தறிவாளன் நன்றி கூறியபின் கூட்டம் நிறைவடைந்தது.
குடந்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
6.5.2023 அன்று மாலை 6.30 மணிக்கு கும்ப கோணம் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந் துரையாடல் கூட்டம் குடந்தை பெரியார் மாளிகை கூட்ட அரங்கத்தில் மாவட்ட கழக. செயலாளர் முனை வர் பேராசிரியர் சேதுராமன் வரவேற்புரையுடன் தொடங்கியது. மாவட்ட ப.க. தலைவர் ஆடிட்டர் சு.சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, மாவட்ட கழக செயலாளர் சு.துரைராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல் தன்னை தோழர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு, கூட்டத்தின் நோக்கமான “வைக்கம் நூற்றூண்டு விழா” நடத்துதல், உறுப்பினர் சேர்க் கையை அதிகப்படுத்துதல், குடந்தையில் மீண்டும் “பெரியார் பேசுகிறார்” கூட்டத்தை நடத்துதல்'' போன்றவற்றை மய்யப் பொருளாக வைத்து உரை யாற்றினார்,
தொடர்ந்து, ஒவ்வொரு தோழர்களும் தங்களை அறிமுக செய்து கொண்டு இயக்கத்தின் செயல் பாடுகள், தாங்கள் ஆற்றியச் செயல்பாடுகள் குறித்தும் தோழர்கள் இராம.புகழ், வி.சி.க.செல்வராஜ், ப.தியாக ராசன், மாவட்டப.க. அமைப்பாளர் சு.திருஞான சம்பந்தம், சேகர், துகிலிதமிழ்மணி, வலங்கைமான் ஒன்றிய செயலாளர் க.பவானிசங்கர், மீன்சுருட்டி சேக்கிழார், மேனாள் கழக மாவட்ட செயலாளர் மில்லர். சுவாமிமலை ஞானம், பாபநாசம், ஒன்றிய கழகத் தலைவர் சு.கலியமூர்த்தி, கபிஸ்தலம் ஏ.கைலா சம், மகளிரணி எம்.திரிபுரசுந்தரி, கி.இந்திரா அ.சங்கர், ச.திராவிட ராஜேஷ், வே.குணசேகரன், குடந்தை ஒன்றிய கழகத் தலைவர் ஜில்ராஜ், இளஞ்சேட் ஜென்னி, சோழபுரம் மதியழகன், திருநாகேஸ்வரம் சிவக்குமார், தமிழ்வேந்தன், இரமேஷ், பாபநாசம் சங்கர், கோவி.பெரியார்கண்ணன், கு.ரியாஸ் கி.செல்வ ராசன், முனைவர் பிரபாகரன், என்.காமராசு, குடந்தை மாநகர கழகத் தலைவர் வழக்குரைஞர் இரமேஷ் க.வளர்தமிழ், தே.அகல்யா, மண்டல கழக செயலாளர். க.குருசாமி ஆகியோர் உரையாற்றினர்.
தொடர்ந்து, பொதுச்செயலாளர் வி.மோகன் உரை யாற்றினார். அவர் தமதுரையில், ‘‘கும்பகோணம் எப் போதுமே பல வரலாறுகளை படைத்த ஊர். திராவிட மாணவர் கழகம் தோன்றுவதற்கு அடித்தளமிட்ட ஊர். பல மாநாடுகளை நடத்திய ஊர், இவ்வூர் மத வாதிகளும், மனுதர்மவாதிகளும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த திட்டமிடும் பகுதி. ஆனால், பெரியார் காலம் முதல் நம் தமிழர் தலைவரின் வழிகாட்டுதலுடன் என்றும் இது திராவிடமண், சுயமரியாதை, பகுத்தறிவு, இன உணர்வை வளர்க்கும் மண். இங்கு நம்முடைய பிரச்சாரத்தின் மூலம் பகுத்தறிவாளர் கழகத்தை வளர்த்தெடுப்போம், எதிர்கால நம் தலைமுறைக்கு பெரியாரியலை பரப்புவோம், வாசகர் வட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்'' என்று கூறிமுடித்தார்.
தொடர்ந்து, மாநில ப.க. தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் உரையாற்றினார். அவரது உரையில், கும்ப கோணம் என்பது, திராவிட இயக்க வரலாற்றில் மறக்க முடியாத ஊர். குடந்தை கல்லூரியில் நடந்த மாணவர் எழுச்சிதான் திராவிட மாணவர் கழகத்தின் மூலம் பார்ப்பனர்களின் ஜாதி, திமிரை அடக்கியது. நம் இயக்கம். பல வகையில் பிரச்சாரப் பணிகளைச் செய்தாலும், இன்னமும் மகாமக குளத்தின் மூலம் மூடநம்பிக்கைகளைப் பரப்பியும், அரசும் பல கோடிக்கணக்கான தொகைகளை செலவு செய்து அறி வியலுக்குப் புறம்பான கதைகளைக் கூறி மக்களை திசை திருப்புகின்றனர். அதை நாம் முறியடிக்க வேண்டும். எதிர்கால சமூகம் அறிவு வழியில் செல் வதற்கு பெரியார் கருத்துகளை நாம் தொடர்ந்து பிரச் சாரம் செய்து, ஒத்தக்கருத்துள்ள முற்போக்குச் சிந் தனையாளர்களை அடையாளம் கண்டு பகுத்தறி வாளர் கழகத்தை வலிமை பெற செய்வோம். ஆசிரி யர் தமிழர் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு செய லாக்கம் தருவோம்'' என்று கூறி புதிய பொறுப்பாளர் களை அறிவித்தார். இறுதியில் பொதுக்குழு உறுப்பினர் பேராசிரியர் க.சிவக்குமார் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக