புதன், 13 செப்டம்பர், 2017

சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படத்திறப்பு





சென்னை, செப். 11- கருநாடகாவில் பகுத்தறிவு பத்திரிகை யாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதை யடுத்து,  அவருடைய படத்திறப்பு, நினைவேந்தலில் பங்கேற்று உரையாற்றிய பத்திரிகையாளர்கள் அப்படு கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், பகுத்தறிவாளர்கள், பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை  உறுதி செய்ய வலி யுறுத்தியும், படுகொலையாளர்கள்மீது நடவடிக்கை எடுப்பதுடன், மூலகாரணமாக இருந்தவர்களை அடை யாளம் கண்டு தீவிரமான நடவடிக்கையை எடுக்க மத் திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்றும் வலி யுறுத்தினார்கள்.

கருநாடக மாநிலம் பெங்களூருவில் 5.9.2017 அன்று பகுத்தறிவுப் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் அவரு டைய வீட்டின் வாயிலில் இரு சக்கர வண்டிகளில் வந்த வர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

கருநாடக முற்போக்கு பகுத்தறிவுப் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படத்திறப்பு, நினைவேந்தல் நிகழ்வு திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று (10.9.2017) மாலை சென்னை, பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடை பெற்றது.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற்றினார். திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் இணைப் புரை வழங்கினார்.

கவுரி லங்கேஷ் படத்தை 'தி இந்து' பதிப்பகக் குழு மத்தலைவர் என்.ராம் திறந்து வைத்து உரையாற்றினார்.

நக்கீரன் ஏட்டின் ஆசிரியர் நக்கீரன் ஆர்.ஆர்.கோபால், தமிழ்நாடு திட்டக்குழுவின் மேனாள் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் மு.நாகநாதன், தீக்கதிர் பொறுப் பாசிரியர் அ.குமரேசன், ஜனசக்தி பொறுப்பாசிரியர் த.இந்திரஜித்  ஆகியோர் கவுரி லங்கேஷின் படுகொலைக் குக் கண்டனம் தெரிவித்து நினைவேந்தல் உரையாற்றி னார்கள்.

தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன் நன்றி கூறினார்.

பகுத்தறிவாளர், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து கருநாடக மாநிலம் மட்டு மல்லாமல், தமிழ்நாடு, மகாராட்டிரா, டில்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், இங்கிலாந்தின் தலை நகர் லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கண்டனக்குரல்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன.

சென்னையில் நடைபெற்ற படத்திறப்பு, நினைவேந் தல் நிகழ்வில் ஊடகவியலாளர்கள், மனித நேயர்கள், மதச்சார்பின்மை, மனித உரிமையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய அனைவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இந்நிகழ்வுக்கான ஏற்பாட் டினை செய்துள்ளது மிகவும் ஆறுதல் அளிப்பதாக குறிப்பிட்டனர்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம், வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, விழிகள் வேணுகோபால், வா.மு.சே.திருவள்ளுவர், சென்னை மண்டலச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், செயலாளர் தே.ஒளிவண்ணன், தாம் பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், ஆவடி மாவட் டத் தலைவர் தென்னரசு, தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, காரைக்குடி மாவட்டச் செயலாளர் தி.என்னாரெசு பிராட்லா, வடசென்னை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால், பெரி யார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் கி.சத்திய நாராயணன், சேரன்,  வடசென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, சி.வெற்றிச் செல்வி, தங்க.தனலட்சுமி, கோ.தங்கமணி, சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணியம்மை, டாக்டர் மாலதி, டாக்டர் க.வீரமுத்து, பழ.சேரலாதன், கு.சோமசுந்தரம், விஜய்ஆனந்த், செந்துறை இராசேந் திரன்,  குணசேகரன், கோ.வீ.ராகவன், நயினார், மஞ்சு நாதன், ஜெயராமன், சண்முகப்பிரியன், சா.தாமோதரன், தமிழ்செல்வம், செங்கை சுந்தரம், சைதைதென்றல் உள் பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

-விடுதலை,11.9.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக