திங்கள், 20 ஜூன், 2022

செஞ்சியில் கோலாகலத்துடன் தொடங்கி வரலாறு படைத்த பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாடு - தலைவர்கள் எழுச்சியுரை

பகுத்தறிவாளர் கழகத்திற்கு தனி சின்னம் அறிவிப்பு

பகுத்தறிவாளர் கழகத்திற்கு தனி சின்னத்தை தமிழர் தலைவர் அறிமுகப்படுத்தினார் (செஞ்சி மாநாடு, 19.6.2022)

செஞ்சி சிறுத்தது - பகுத்தறிவுப் பெரும்படை பெருத்தது! செஞ்சிக் கோட்டையைக் கலக்கிய பகுத்தறிவாளர் பேரணி!

தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை ரூ.5, ரூ.10 நாணயங்கள் - பெரியார் உலகத்திற்கு ரூ.3 லட்சம் அளிப்பு


படம் 1:  பகுத்தறிவாளர் கழக பொன் விழா மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு திருக்குவளை இல.மேகநாதன், எடைக்கு மேல் அய்ந்து ரூபாய் நாணயங்கள் மற்றும் பத்து ரூபாய் நாணயங்களை (ரூ.50 ஆயிரம்) வழங்கினார். உடன் தமிழ்நாடு அமைச்சர்கள் எ.வ.வேலு,  செஞ்சி மஸ்தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன். படம் 2: பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மாநில தலைவர் தமிழ்ச்செல்வன், மோகன், கரிகாலன் மற்றும் பொறுப்பாளர்கள், பெரியார் உலகத்திற்கு ரூ.3 லட்சம் நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (செஞ்சி, 19.6.2022).


செஞ்சியில் பகுத்தறிவாளர் கழக பொன் விழா நிறைவு மாநாடு சிறப்புடன் தொடங்கியது

சனி, 11 ஜூன், 2022

பெரியார் பன்னாட்டமைப்பு உலக மாநாடு - அழைப்பு! மனிதநேய அன்பர்களே & நண்பர்களே,


மிக்க மகிழ்வுடன், நீண்ட இடைவெளிக்குப் பின், நேரே கூடுவோம், வாருங்கள்! கனடா நாட்டின் டொராண்டோ (ரொறன்ரோ) நகரிலே மாநாடு! செப்டம்பர் 24 - 25, 2022 (சனி & ஞாயிறு) - 2 நாட்கள் பெருவிழா! உலகெங்குமிருந்து பெரும் தலைவர்கள் & மனிதநேய அமைப்புகள் பங்கேற்பர்! தமிழ்நாட்டின் திராவிட மாடல் & சமூகநீதி  உலக அளவில் புகழ் பெறுவதைக் காண வாருங்கள்! இது பெரியார் பன்னாட்டமைப்பின் மூன்றாவது உலக மாநாடு!  செருமனி (2017) & அமெரிக்காவில் (2019) நடந்தது போலவே, இம்முறை டொராண்டோவிலும் (2022) சிறப்புற நடக்கும். அனைவரையும் இனிதே வரவேற்க ஆயத்தமாக உள்ளோம்! காலம் கருதி, விரைவாக ஏற்பாடுகள் செய்வோம். அனைவரையும் இப்போதே அன்புடன் அழைக்கின்றோம். மேலதிகத் தகவல்கள் விரைவில்! இணைந்திருப்போம்!

இங்ஙனம்,
பெரியார் பன்னாட்டமைப்பு அமெரிக்கா
(3.6.2022)

ஞாயிறு, 8 மே, 2022

சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா